மல்லையாவின் பங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை..? பதறும் மல்லையா

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட பல வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை. திருப்பிச் செலுத்தச் சொன்ன போது அவர் லண்டனுக்கே தப்பி ஓடிவிட்டார்.

இப்போது விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர இங்கிலாந்தோடு சட்ட ரீதியில் பேச்சு வார்த்தைகளும் நீதிமன்றங்களில் வழக்குகளும் நடந்து வருகின்றன. இவைகளை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுங்கள்.

இப்போது விஜய் மல்லையாவிடம் இருந்து கடன்களை மீட்க மல்லையா பெயரில் மல்லையாவுக்குச் சொந்தமாக இருக்கும் பங்குகளை எல்லாம் அமலாக்கத் துறை பறிமுதல் செய்திருக்கிறது.

எத்தியோப்பிய விமான விபத்தால் 2,83,155 கோடி ரூபாய் வருவாயை இழக்கப் போகிறதா போயிங்..? எத்தியோப்பிய விமான விபத்தால் 2,83,155 கோடி ரூபாய் வருவாயை இழக்கப் போகிறதா போயிங்..?

பக்குகள் பறிமுதல்

பக்குகள் பறிமுதல்

யுனைடெட் பிரிவரிஸ் லிமிடெட் (United Breweries Limited) நிறுவனத்தின் 16.15 சதவிகித பங்குகளை, 4.27 கோடி பங்குகளை பல்வேறு துணை நிறுவனங்கள் மூலம் வைத்திருந்தார் மல்லையா. அவர் எந்த எந்த நிறுவனங்கள் வழியாக இந்த 16.15 சதவிகித பங்குகளை வைத்திருந்தார்களோ.. அந்த நிறுவனங்கள் வைத்திருக்கும் அனைத்து யுனைடெட் பிரிவரிஸ் பங்குகளையும் சேர்ந்து பறி முதல் செய்திருக்கிறது அமலாக்கத் துறை.

எந்த நிறுவனங்கள்

எந்த நிறுவனங்கள்

யுனைடெட் பிரிவரீஸ் ஹோல்டிங் லிமிடெட் மூலம் வைத்திருந்த (United Breweries holding Limited) 1.95 கோடி பங்குகள், மெக்டோவல் ஹொல்டிங்க்ஸ் (Mcdowell Holding)- 18.59 லட்சம் பங்குள், Gem Investment & Trading Co Pvt Ltd நிறுவனம் மூலம் வைத்திருந்த 97.87 லட்சம் பங்குகள், மல்லையா பிரைவெட் லிமிடெட் மூலம் வைத்திருந்த 16.71 லட்சம் பங்குகள், விட்டல் இன்வெஸ்மெண்ட்ஸ் மூலம் வைத்திருந்த 43.15 லட்சம் பங்குகள் என மல்லையாவுக்கு யுனைடெட் பிரிவரீஸுக்கும் சம்பந்தமே இல்லாத ரீதியில் அனைத்து பங்குகளையும் பறிமுதல் செய்து விட்டது.

பதவி போச்சே

பதவி போச்சே

2018 ஆகஸ்டில் மல்லையா இனி யுனைடெட் ப்ரிவரீஸ் நிறுவனத்தில் எந்த ஒரு முக்கியப் பதவிகளையோ அல்லது இயக்குநர் குழுவிலோ இடம் பிடிக்க முடியாது என்பதைத் தெளிவு படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் செபி கொடுத்த அதிரடி உத்தரவு தான்.

பதறும் மல்லையா

பதறும் மல்லையா

விஜய் மல்லையா இனி எந்த ஒரு பதவியும் வகிக்கக் கூடாது, யுனைடெட் பிரவரீஸுக்கும், மல்லையாவுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்கிற விஷயங்களைக் கேட்கும் போது கொதித்துப் போகிறாராம் மல்லையா. நான் பார்த்து பார்த்து ரசித்து ருசித்து உருவாக்கிய நிறுவனத்துக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையா..? என கொஞ்சம் மன வருத்தத்தைல் இருக்கிறாராம்.

செபி உத்தரவு

செபி உத்தரவு

இனி மல்லையா இந்தியாவின் எந்த ஒரு பட்டியலிடப்பட்ட கம்பெனிகளிலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய நிர்வாகப் பதவிகளிலோ இடம் பிடிக்கக் கூடாது என ஒரு அதிகார பூர்வ உத்தரவு பிறப்பித்தது. தற்போதும் மல்லையா மீது இரண்டு வழக்குகள் இருக்கின்றன. 1. ஐடிபிஐ பணச் சலவை விவராகம். 2. கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக 9000 கோடி ரூபாய் கடன் வாங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vijay mallyas promoters share on united breweries had ceased by the enforcement directorate

vijay mallyas promoters share on united breweries had ceased by the enforcement directorate
Story first published: Tuesday, March 12, 2019, 14:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X