இந்தியாவில் பறக்கத் தடையா..? Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று எத்தியோப்பியாவின் அடிஸபாபாவில் இருந்து கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு பறக்கத் தொடங்கிய எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் ET 308, வெடித்துச் சிதறி 157 பேரை பலி கொண்டது.

 

இந்த பிரச்னைக்குப் பிறகு சீனா, அர்ஜெண்டினா, இந்தோனேசியா, எத்தியோப்பியா, மெக்ஸிகோ என பல நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்திருக்கிறது.

இப்போது இந்தியாவும், அடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்திருக்கிறது.

விபத்துக் காரணம்

விபத்துக் காரணம்

stall-prevention system என ஒரு மென் பொருளை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் பொருத்தி இருக்கிறார்கள். இந்த மென் பொருள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அதிரடியாக, மிக வேகமாக, மேல் எழும்புவதைத் தடுத்து நிலையாக பறக்க வசதியாக வடிவமைத்திருக்கிறார்களாம். இந்த மென் பொருள் தான் air lion flight 610 & ET 308 விமான விபத்துக்களூக்கு காரணமாக இருக்கலாம் என அழுத்தமாக சந்தேகிக்கிறார்களாம் விமான விபத்து நிபுணர்கள்.

பயணிகள் பாதுகாப்பு

பயணிகள் பாதுகாப்பு

எனவே இப்போது இந்தியாவின் விமானப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திக் கொண்டு போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்திருக்கிறது.

Civil Aviation Ministry
 

Civil Aviation Ministry

விமானப் பயண அமைச்சகம் நேற்று இந்த செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்திருக்கிறது. "போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் தேவையான மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்த பிறகு தான் இந்தியாவில் இந்த ரக விமானங்கள் பறக்க முடியும்" எனவும் பதிவிட்டிருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் & ஸ்பைஸ் ஜெட்

ஜெட் ஏர்வேஸ் & ஸ்பைஸ் ஜெட்

இந்திய விமான நிறுவனங்களில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் என இருவருமே அதிகம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்துகிறார்கள்.

பங்கு விலை சரிவு

பங்கு விலை சரிவு

இந்த செய்தி வெளியான உடனேயே ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸில் வியாபாரம் பரி போகும் என்பதை கருத்தில் கொண்டு வர்த்தகர்கள் வந்த விலைக்கு இந்த பங்குகளை விற்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் 2.2 சதவிகிதமும், ஸ்பைஸ் ஜெட் 5.5 சதவிகிதமும் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indian civil aviation ministry banned the boeing 737 max 8 planes the ban is hitting spice jet and jet airways

indian civil aviation ministry banned the boeing 737 max 8 planes the ban is hitting spice jet and jet airways
Story first published: Wednesday, March 13, 2019, 11:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X