தேங்கி நிற்கும் வாகனங்கள்..! வந்த விலைக்கு தள்ளுபடியில் விற்கிறார்களா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களான கார், ஆட்டோ, பேருந்து போன்றவைகள் கடந்த ஜனவரியில் இருந்து சரியாக விற்பனை ஆகவில்லையாம்.

 

இருப்பினும் அதிரடி தள்ளுபடி, ஆங்கிலப் புத்தாண்டு தள்ளுபடி என வாகனங்களை வந்த விலைக்கு தள்ளி விற்பனை செய்திருக்கிறார்கள் டீலர்கள்.

Federation of Automobile Dealers Association (FADA) என்கிற ஆட்டோமொபைல் அமைப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படாமல் தேங்கி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துச் சொல்கிறது

13,000 கோடி ரூபாய் கடனை அடைக்க சொத்துக்களை விற்கும் Zee Entertainment..!

கையில் சரக்கு

கையில் சரக்கு

எல்லா வியாபாரத்தைப் போல அடுத்த சில நாட்களுக்குத் தேவையான பொருட்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களான கார், ஆட்டோ, பேருந்துகளுக்கும் பொருந்தும். அப்படி 30 நாட்களுக்கு கீழ் உற்பத்தி செய்த சரக்குகள் கையில் நிற்பது தான் நல்லதாம்.

பிப்ரவரி 2019-ல்

பிப்ரவரி 2019-ல்

இப்போது கையில் 50 - 60 நாட்களுக்குத் தேவையான பயணிகள் வாகனங்களான கார், ஆட்டோ, பேருந்து போன்றவைகள் தேங்கி நிற்கிறதாம். அதே போல் 80 - 90 நாட்களுக்குத் தேவையான இருசக்கர வாகனங்களும் விற்பனை இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டு குடெளவுனில் தேங்கி நிற்கிறதாம்.

டிசம்பர் 2018-ல்
 

டிசம்பர் 2018-ல்

டிசம்பர் மாதத்தில், கையில் 35 - 40 நாட்களுக்குத் தேவையான பயணிகள் வாகனங்களான கார், ஆட்டோ, பேருந்து போன்றவைகள் தேங்கி நிற்கத் தொடங்கியதாம். 55 - 60 நாட்களுக்குத் தேவையான இருசக்கர வாகனங்கள் தேங்கத் தொடங்கி இருந்ததாம்.

capacity utilisation

capacity utilisation

ஒருநிறுவனத்தில் இருக்கும் ரிசோர்ஸ்களை முழுமையாக பயன்படுத்தி எவ்வளவு தயாரிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக தயாரித்தால் அதைத் தான் capacity utilisation என்று சொல்வார்கள். ஆட்டோமொபைல் துறையில் இந்த 2018 - 19 நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் நல்ல capacity utilisation-ஐ காட்டி வழக்கத்தை விட அதிகமாக தயாரித்து இருக்கிறார்கள்.

விற்பனை இல்லை

விற்பனை இல்லை

உற்பத்தி அதிகரித்த அதே நேரத்தில் நல்ல விற்பனை இல்லை. காரணம் கேரள வெள்ளம், தமிழகத்தில் கஜா, ஒட்டு மொத்தமாக எரிபொருள் விலை உயர்வு, மோட்டார் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிப்பு என பல காரணங்கள் முட்டுக் கட்டையாக வந்து நிற்கின்றன. இதனால் நகர் புற மற்றும் கிராம புற மக்களின் கையில் புழங்கும் காசு வாகனங்களை வாங்க செலவழிக்கப் படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

automobile industry is seeing a sluggish sales and inventory is in sky limits

automobile industry is seeing a sluggish sales and inventory is in sky limits
Story first published: Thursday, March 14, 2019, 16:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X