சாதனை படைந்த சென்செக்ஸ், செமயாக உயர்ந்த நிஃப்டி..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நிஃப்டி இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் 11,376 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 11,426 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

 

அதே போல் சென்செக்ஸ் காலை 37,760 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி நிலையான ஏற்றம் கண்டு 38,024 க்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

நிஃப்டி 50யில் இருக்கும் 50 பங்குகளில் 32 பங்குகள் விலை அதிகரித்தும், 18 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின.

சென்செக்ஸில் இருக்கும் 30 பங்குகளில் 20 பங்குகள் விலை அதிகரித்தும் 10 பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. இன்று பி.எஸ்.இ-ல் வர்த்தகமான 2,860 பங்குகளில் 1,195 பங்குகள் ஏற்றத்திலும், 1,495 பங்குகள் இறக்கத்திலும், 170 பங்குகள் விலை மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாயின.

 20 வருட சம்பளத்தை ஒரே நாளில் பெற்ற ஊழியர்..! உங்களுக்கும் வேண்டுமா..? 20 வருட சம்பளத்தை ஒரே நாளில் பெற்ற ஊழியர்..! உங்களுக்கும் வேண்டுமா..?

38000

38000

முதல் முறையாக இன்று சென்செக்ஸ் 38,000 புள்ளிகளைக் கடந்து வியாபாரம் நிறைவடைந்திருக்கிறது. இதை இந்தியாவின் ஒரு நிலையான வளர்ச்சியாகவே உலக பங்குச் சந்தை நிபுணர்கள் பார்க்கிறார்கள். நிஃப்டியும் இன்ரு தன் வாழ்நாள் உச்சமான 11,487 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

அதிக வியாபாரம்

அதிக வியாபாரம்

ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க், ஹெட்சிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

கோட்டக் மஹிந்திரா, இந்திய ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஓ.என்.ஜி.சி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாயின.

விலை இறக்கம்
 

விலை இறக்கம்

ஹிந்துஸ்தான் யுனிலிவர், யெஸ் பேங்க், ஐடிசி, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆசிய பங்குச் சந்தைகளில் தாய்லாந்து மற்ரும் சிங்கப்பூர் பங்குச் சந்தைகள் தவிர மற்ற சந்தைகள் அனைத்தும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. நேற்று அமெரிக்க பங்குச் சந்தை இறக்கத்தில்நிறைவடைந்தது. இன்னும் இன்றைக்கான வர்த்தகம் தொடங்கவில்லை.

அமெரிக்க டாலர் Vs இந்திய ரூபாய்

அமெரிக்க டாலர் Vs இந்திய ரூபாய்

நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.89 ரூபாயாக இருந்தது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே மீண்டும் 0.24 சதவிகிதம் ஏற்றம் கண்டு 69.71 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது டாலர். இப்போது மேலும் 11 பைசா குறைந்து 69.60 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indian share market is in its record high close

indian share market is in its record high close
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X