தங்கம், கச்சா எண்ணை இறக்குமதி குறைந்தது- வர்த்தக பற்றாக்குறை சரிவு

பிப்ரவரி மாதத்தில் மின்னணு பொருட்கள், இயந்திரப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து தங்கம் கச்சா எண்ணெய் இறக்குமதி சரிந்ததால் வர்த்தக பற்றாக்குறை சரிவடைந்துள்ளது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மின்னணு பொருட்கள், இயந்திரப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்திய வர்த்தக பற்றாக்குறையானது சுமார் ரூ.66203 கோடியாக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதத்திய ஏற்றுமதியானது சுமார் ரூ.1,83,865 கோடியாக அதிகரித்தது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் மின்னணு பொருட்கள், இயந்திரப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்ததும் வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு காரணமாகும்.

பிப்ரவரி மாதத்திய இறக்குமதி சுமார் 5.4 சதவிகிதம் அதாவது ரூ.2,49,981 கோடியாக சரிந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள வர்த்தகப் பற்றாக்குறையானது சுமார் ரூ.1,01,549 கோடியாக இருந்தது. அதுவே பிப்ரவரி மாதத்தில் சுமார் ரூ.84,798 கோடியாக சரிந்தது.

ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதி அதிகரிப்பு

ஒவ்வொரு மாதம் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறை பற்றிய புள்ளி விவரத்தை மத்திய வர்த்தத்துறை அமைச்சகம் வெளியிடுவது வழக்கம். அதேபோல், கடந்த பிப்ரவரி மாதத்தின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை பற்றிய புள்ளிவிவரத்தை இன்று வெளியிட்டது. அதில் இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகரித்ததால் பிப்ரவரி மாத வர்த்தக பற்றாக்குறையானது 2.44 சதவிகிமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தங்கம் இறக்குமதி சரிவு

தங்கம் இறக்குமதி சரிவு

பிப்ரவரி மாதத்தில வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணியாக தங்கம் மற்றும் கச்சா எண்ணெ இறக்குமதி குறைந்ததே என்ற வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தில் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான மின்னணு பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் இயந்திரப் பொருட்கள் ஏற்றுமதியால் அந்நியச் செலாவணி அதிகரித்தது.

 பிப்ரவரி மாத தங்கம் இறக்குமதி

பிப்ரவரி மாத தங்கம் இறக்குமதி

கடந்த ஜனவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதியானது 11 சதவிகிதமாக அதாவது சுமார் ரூ.17,795 கோடியாக குறைந்துள்ளது. அதுவே கடந்த 2017-18ஆம் நிதியாண்டின் பிப்ரவரி மாதத்தில் ரூ.19,936 கோடியாக இருந்துள்ளது.

கச்சா எண்ணெய் சரிவு

கச்சா எண்ணெய் சரிவு

மற்றொரு அத்தியாவசிய இறக்குமதிப் பொருளான கச்சா எண்ணெய் கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவிகிதம் அதாவது சுமார் ரூ.64,658 கோடியாக சரிவடைந்தது. அதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.62784 கோடியாக இருந்துள்ளது.

ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதி அதிகரிப்பு

நடப்பு 2018-19ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் ஏற்றுமதியானது 8.85 சதவிகிதம் அதாவது, ரூ.20,58,681 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதியானது 9.75 சதவிகிதம் அதாவது சுமார் ரூ.32,00,927 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகப் பற்றாக்குறை

வர்த்தகப் பற்றாக்குறை

வர்த்தகப் பற்றாக்குறையானது கடந்த 11 மாத காலத்தில் சுமார் ரூ.11,41,847 கோடியாக இருக்கிறது. அதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் சுமார் ரூ.10,24,816 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலியம் தவிர்த்து மற்ற பொருட்களான அணிகலன்கள் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் ரூ.1,37,012 கோடியாக உயர்ந்துள்ளது. அதுவே கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சமார் ரூ.1,30,333 கோடியாக இருந்துள்ளது .

நகை ஏற்றுமதி உயர்வு

நகை ஏற்றுமதி உயர்வு

அணிகலன்கள் ஏற்றுமதி நடப்பு 2018-19ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் சுமார் ரூ.14,99,299 கோடியாக உயர்ந்துள்ளது. அதுவே கடந்த ஆண்டின் இதே பருவத்தில் சுமார் ரூ.13,92,556 கோடியாகும்.

 கச்சா எண்ணெய் அதிகரிப்பு

கச்சா எண்ணெய் அதிகரிப்பு

கச்சா எண்ணெய் இறக்குமதியானது நடப்பு 2018-19ஆம் ஆண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் சுமார் ரூ.8,87,691 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டடத்துடன் ஒப்பிடும்போது சுமார் 31.98 சதவிகிதம் அதிகமாகும். ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தை விட 1.97 சதவிகிதம் குறைந்துள்ளது.

வர்த்தகத் தடை

வர்த்தகத் தடை

வர்த்தக புள்ளிவிவரங்கள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கணேஷ் குப்தா கூறுகையில், ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வர்த்தக தடைகள் காரணமாக நாம் இறக்குமதி செய்வது குறைந்துள்ளது என்றார்,

ஏற்றுமதியில் சாதனை

ஏற்றுமதியில் சாதனை

கடுமையான வர்த்தகத் தடைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தாலும் நமது ஏற்றுமதியாளர்கள் பாதுகாப்பான நடைமுறையைப் பின்பற்றி ஏற்றுமதி செய்ததால் வர்த்தகப் பற்றாக்குறை சரியக் காரணம் என்றார் இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால் நடப்பு நிதியாண்டில், நமது ஏற்றுமதியானது சுமார் ரூ.22,75,366 கோடியாக அதிகரிக்கம் என்று குப்தா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trade Deficit decline in February 2019 due to Crude oil, Gold Import

India's merchandise exports rose to Rs.1,83,884 Crore in February from Rs.1,79,471 crore per cent in the year-ago month mainly on account of higher shipments in sectors such as pharmaceutical, engineering and electronics equipments.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X