Fox Entertainment-ஐ விலைக்கு வாங்கிய Disney..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா: சமீபத்தில் தான் டிஸ்னி 71 பில்லியன் டாலர் விலை கொடுத்து Fox Entertainment குழுமத்தை முழுவதுமாக வாங்கி இருக்கிறது.

இப்போது Fox Entertainment-ன் கீழ் வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், சிண்ட்ரெல்லா, ஸ்டார் வார்ஸ் போன்ற கேரக்டர்கள் எல்லாமே டிஸ்னிக்கு சொந்தமானது தான் இப்போது ஊர் முழுக்க பேச்சாக இருக்கிறது. எனவே அடுத்து வரும் படங்களில் மார்வெல்லின் X-Men-ம், அவெஞ்சர்களும் ஒரே படத்தில் தோன்றுவார்களாம்.

டிஸ்னி வாங்கி இருக்கும் இந்த டீலில் Fox Corporation கிடையாதாம். எனவே Fox Corporation-ன் கீழ் இருக்கும் ஃபாக்ஸ் பிராட்காஸ்டிங், ஃபாக்ஸ் டெலிவிஷன் ஸ்டேஷன்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் குரூப், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மீடியா போன்றவைகள் தொடர்ந்து ஃபாக்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் இயங்குமாம்.

பின் கோட் பார்த்து பொருட்களை பிரிக்க ரோபாட்களை வேலைக்கு எடுத்த Flipkart..! பின் கோட் பார்த்து பொருட்களை பிரிக்க ரோபாட்களை வேலைக்கு எடுத்த Flipkart..!

அமேஸானோடு போட்டி

அமேஸானோடு போட்டி

இந்த டீல் ஒட்டு மொத்த உலக மீடியாவையே கொஞ்சம் உலுக்கி இருக்கிறதாம். இந்த டீலால் டிஸ்னி தனக்கு என ஒரு தனி ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை "டிஸ்னி ப்ளஸ்" என்கிற பெயரில் தொடங்க இருக்கிறார்களாம். ஆக டிஸ்னி நேரடியாக அமேஸான் மற்றும் நெட் ஃப்ளிக்ஸ் உடன் நேரடியாக சண்டை போடவே தயாராக இருக்கிறது. தன்னை ஒரு சேனலாக மட்டும் குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை.

டேட்டா

டேட்டா

இந்த பெரிய டீலினால் இனி பல்வேறு டிவி ஷோக்கள், படங்களை தயாரிப்பதில் இருந்து முழுமையாக வெளியிடுவது வரை டிஸ்னியே செய்யப் போகிறார்களாம். அதுவும் டிவி சேனல்கள் வழியாக, சினிமா தியேட்டர்கள் வழியாக, ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் வழியாக என பார்வையாளர்கள் எங்கு எல்லாம் வந்து தங்கள் பொழுதைக் கழிக்கிறார்களோ அங்கு எல்லாம் இவர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப இருக்கிறார்களாம்.

விளம்பரம்

விளம்பரம்

இதனால் ஒவ்வொரு தளத்திலும் பார்வையாளர்களின் பொழுது போக்கு பேட்டன்கள், பார்வையாளர்களின் பொழுது போக்கு பழக்க வழக்கங்கள் என பல்வேறு தரவுகள் கிடைக்கப் போகிறதாம். இதனைக் கொண்டு பார்வையாளர்களுக்கு நல்ல விளம்பரங்களைக் காட்டி கல்லா கட்டப் போகிறார்களாம்.

லே ஆஃப்

லே ஆஃப்

டிஸ்னி பக்கமும் சரி, ஃபாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் குழுமத்திலும் சரி படத் தயாரிப்புக் குழுவில் அளவுக்கு அதிகமாகவே ஆட்கள் இருக்கிறார்களாம். எனவே இரண்டு நிறுவனங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான ஊழியர்களை கழித்துவிடப் போகிறார்கள் என்பது மட்டுமே ஒரு வருத்தமான செய்தி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

disney bought fox entertainment for 71 billion dollars

disney bought fox entertainment for 71 billion dollars
Story first published: Thursday, March 21, 2019, 16:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X