210 ரூபாய்க்கு வேட்பாளர்கள் மட்டன் பிரியாணி சாப்பிட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அடுத்த மாதம் இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா தொடங்குகிறது. இப்போதே இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் அரசியல்வாதிகள் களம் இறங்கிவிட்டார்கள். அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்கள். .

இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு ஒரு உச்ச வரம்பை விதித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அதன் படி ஒரு மக்களவை வேட்பாளர் தேர்தல் செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும். அதோடு தேர்தல் பிரச்சாரத்தில் வாங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் ஒரு உச்சவரம்பு விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

இப்படி சுமார் 600 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உச்ச வரம்பு விலையை நிர்ணயித்திருக்கிறது தேர்தல் ஆணையம். வேட்பாளர்கள், தங்கள் பெயரில் புதிய வங்கிக் கணக்கைத் தொடங்கி, அதன் மூலமாகவே பிரச்சார செலவுகளை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சரி இந்த 600 பொருட்கள் மற்றும் சேவைகளில் முக்கியமான செலவீனங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்

உணவு மற்றும் விடுதி

உணவு மற்றும் விடுதி

அதன்படி, வேட்பாளர்கள் பயன்படுத்தும் அறையின் வாடகை 5 நட்சத்திர விடுதிக்கு ரூ.9,300 + வரிகள் இருக்கலாம். 3 நட்சத்திர விடுதிகளுக்கு ரூ.5,800 + வரிகள் இருக்கலாம். மட்டன் பிரியாணி - 200 ரூபாய், சிக்கன் பிரியாணி - 180 ரூபாய், வெஜ் பிரியாணி - 100 ரூபாய், மதிய சாப்பாடு 175 ரூபாய், சிற்றுண்டி 100 ரூபாய், தேநீர் 10 ரூபாய், பால் 15 ரூபாய், இளநீர் 40 ரூபாய் என்ற விலையைத் தாண்டி செலவு செய்யக் கூடாதாம்.

இதர தேர்தல் பொருட்கள்

இதர தேர்தல் பொருட்கள்

பூசணிக்காய் 120 ரூபாய், சேலை (பூனம்) - 200 ரூபாய், டீ-சர்ட் 175 ரூபாய், வாழை மரம் 700 ரூபாய், தொப்பி 50 ரூபாய், பூக்கள் 60 ரூபாய், சால்வை 150 ரூபாய், தண்ணீர் ஒரு லிட்டர் 20 ரூபாய், பிளீச்சிங் பவுடர் கிலோ 90 ரூபாய் என எதில் எல்லாம் தேர்தல் வேட்பாளர்கள் செலவு செய்வார்களோ அந்த பொருட்கள் அனைத்துக்கும் ஒரு உச்ச வரம்பு விலையை விதித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

சம்பளம்

சம்பளம்

வேட்பாளர்களுடனேயே தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் உதவியாளர்களுக்கும் ஊதிய உச்ச வரம்பை நிர்ணயித்திருக்கிறது தேர்தல் ஆணையம். பிரச்சார களத்தில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரத்துக்கு 450 ரூபாய், வேட்பாளர்களின் ஓட்டுநர்களுக்கு 695 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட வேண்டுமாம்.

கொண்டாட்ட செலவுகள்

கொண்டாட்ட செலவுகள்

பட்டாசுகளுக்கு 600 ரூபாய் (ஆயிரம் வாலா), மேள தாள வாத்தியங்களுக்கு 4 மணி நேரத்துக்கு 4,500 ரூபாய், பிரச்சார வேலைகளை முன்னிட்டு திருமண மண்டபங்களுக்கு வாடகையாக 6,000 ரூபாய், தேர்தல் பிரசார கூட்டங்களில் பயன்படுத்தும் எல்.இ.டி. திரைகளுக்கு 8 மணி நேரத்துக்கு வாடகை 12,000 ரூபாய் எனத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருக்கிறது.

இதுவுமா..?

இதுவுமா..?

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க தொகுதிக்கு 2 அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்களாம். வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சார்பில் நடைபெறும் பிரசாரங்கள் அனைத்தையும் வீடியோ கட்டாயம் வீடியோ பதிவு செய்யவும் அறிவுறுத்தி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

election commission announced the rate list of the products like biryani hotel and services like driver, helpers to use in election campaign

election commission announced the rate list of the products and services to use in election campaign
Story first published: Thursday, March 21, 2019, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X