ஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு போனஸ் உண்டு, இண்டிகோ விமானிகளுக்கு? கொந்தளிப்பில் இண்டிகோ விமானிகள்?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் போது தன் விமானிகள், விமானப் பணி பெண்கள் என எவருக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல் தவிக்கிறது.

வரும் மார்ச் 31-க்குள் தங்கள் சம்பள பாக்கிகளை எல்லாம் கொடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஜெட் ஏர்வேஸ் விமானிகள். இந்த சந்தர்பத்தில் தான் இண்டிகோ மற்ரும் ஸ்பைஸ் ஜெட் உள்ளே புகுந்து ஜெட் ஏர்வேஸ் விமானிகளை வேலைக்கு எடுத்துக் கொள்கிறது.

ஸ்பைஸ் ஜெட் நடத்திய நேர்காணலில் சுமார் 260 விமானிகளும், 150 கேப்டன்களும் கலந்து கொண்டார்களாம். இந்த நேரத்தில் இண்டிகோ ஜெட் ஏர்வேஸ் விமானிகளை வேலைக்கு எடுப்பதை தடுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இண்டிகோ விமானிகள் மற்றும் கேப்டன்கள். ஏன் இண்டிகோ ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வரவைத் தடுக்கிறார்கள்..?

 

பாஜகவே நீரவ் மோடியை தப்பிக்க வைப்பார்களாம், தேர்தல் நேரத்தில் கைது செய்வார்களாம்! என்னையா இது..?

என்ன பிரச்னை

என்ன பிரச்னை

ஜெட் ஏர்வேஸ் விமானிகளை வேலைக்கு எடுப்பதில் இண்டிகோ விமானிகளுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் ஜெட் ஏர்வேஸில் எத்தனை மாத சம்பளம் கிடைக்கவில்லையோ அத்தனை மாத சம்பளத்தையும் கொடுக்க இண்டிகோ முன் வந்திருப்பது தான் இண்டிகோ விமானிகளின் பிரச்னை.

போனஸ்

போனஸ்

"ஒரு விமானி ஒரு நிறுவனத்தில் சேரும் போது அவரை ஒரு புது ஊழியனாகத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி வரும் போது இரண்டு மாத சம்பளம், மூன்று மாத சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் அதை போனஸ் என்று தானே எடுத்துக் கொள்ள முடியும். ஆக புதிய விமானிகளுக்கு போனஸ் கொடுக்கும் இண்டிகோ பழைய விமானிகளுக்கு கொடுக்காதது ஏன்..?" என போர் கொடி தூக்கி இருக்கிறார்கள்.

இதுவரை இல்லை
 

இதுவரை இல்லை

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட போனஸ் தொகையை இண்டிகோ விமானிகளுக்கு கொடுத்ததில்லை. ஆனால் நேற்ரு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு இரண்டு மூன்று மாத சம்பளத்தோடு, இந்த ஆண்டில் வர இருக்கும் சம்பள உயர்வையும் கொடுத்தால் அது எப்படி நியாயமாகுமென குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

Type Rated

Type Rated

விமானிகளுக்கு Type Rated என ஒரு சான்றிதழ் வழங்குவார்கள். அதாவது ஒரு ரக விமானத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்களுக்கு அந்த Type ரக விமானங்களில் ஸ்பெஷலிஸ்ட் போல ஒரு சான்று வழங்குவார்கள். ஜெட் ஏர்வேஸின் விமானிகளில் பலரும் போயிங் ரக விமானங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்கள் என Type Rated சான்று வாங்கி இருக்கிறார்கள்.

யாருக்கு கொடுக்கிறார்கள்

யாருக்கு கொடுக்கிறார்கள்

புதிதாக இண்டிகோவுக்கு வேலைக்கு வரும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் போயிங் ரக விமானங்களை ஓட்டுவதில் Type Rated வாங்கியவர்கள். ஆனால் இண்டிகோவோ பெரும்பாலும் ஏர்பஸ் ரக விமானங்களைத் தான் ஓட்டுகிறார்கள். ஆக போயிங் ரக விமானத்தை ஓட்டும் விமானிகளுக்கு இண்டிகோவில் ஏர்பஸ் விமானிகளுக்கு சமமாக சம்பளம் கொடுத்து இரண்டு மாத சம்பளத்தை போனஸாக தருவது தான் இண்டிகோ விமானிகளின் கோபத்துக்கு முதல் காரணம்.

பணி பாதுகாப்பு

பணி பாதுகாப்பு

full-service carrier என்பது ஒரு விமானத்திலேயே உணவு, பொழுது போக்கு அம்சங்கள், மது பான வசதிகள், படுக்கை வசதிகள் எல்லாம் இருக்கும். இந்த ரக விமானங்களைத் தான் full-service carriers என்பார்கள். இந்த full-service carriers விமானங்களை ஓட்டும் விமானிகளுக்கு சாதாரன விமானங்களை ஓட்டும் விமானிகளை விட கூடுதல் சம்பளம், சலுகைகள் எல்லாம் இருக்கும். புதிய ஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கே அதிகம் full-service carriers விமானங்களை ஓட்ட அனுமதி கொடுப்பதால் இண்டிகோ விமானிகள் புகைந்து கொண்டிருக்கிறார்கள்.

பணி இடத் தேர்வு

பணி இடத் தேர்வு

புதிதாக வரும் ஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு எந்த தடங்களில் உள்ள விமானங்களை இயக்க வேண்டும் என அவர்களே முடிவு செய்து கொள்ள முடிகிறதாம். ஆனால் இந்த வசதியை இண்டிகோ விமானிகளுக்கு கொடுக்கவில்லை என்பதும் புகைச்சலுக்கு வலு சேர்த்திருக்கிறது.

இண்டிகோ தரப்பு

இண்டிகோ தரப்பு

இண்டிகோ "இப்போது வரை எல்லா விமானிகளையும் சட்டப் படி தான் வேலைக்கு எடுக்கிறோம், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் பதவிகள் மற்றும் பணியிடங்களையும் கொடுக்கிறோம்" எனச் சொல்லி இருக்கிறது. ஆனால் இண்டிகோ விமானிகளோ இது தவறு, ஏற்றுக் கொள்ள முடியாதது எனச் சொல்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indigo pilots are angry with its management for giving bonus hikes to jet airways pilots

indigo pilots are angry with its management for giving bonus hikes to jet airways pilots
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more