கடந்த ஐந்து ஆண்டில் ஆண்களுக்கான 2 கோடி வேலை வாய்ப்புகள் காலி..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்த ஆண்களின் எண்ணிக்கை கடந்த 2011 - 12 முதல் 2017 - 18 வரையான ஐந்து ஆண்டுகளில் சுமார் 2 கோடி பேராக அதிகரித்திருக்கிறார்களாம்.

 

இதை தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) சொல்லி இருக்கிறது. இந்த அறிக்கையைத் தான் பாஜக அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய மாதிரி சர்வே அலுவலகம் Periodic Labour Force Survey என்கிற பெயரில் இந்தியாவில் வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிடும். இந்த Periodic Labour Force Survey 2017 - 18-க்கான அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.

 பிரதமரின் 6000 ரூபாய் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை..! பிரதமரின் 6000 ரூபாய் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை..!

Periodic Labour Force Survey 2017 - 18

Periodic Labour Force Survey 2017 - 18

பத்திரிகைகளுக்கு கிடைத்திருக்கும் Periodic Labour Force Survey 2017 - 18 விவரங்கள் படி, இந்தியாவில் 2017 - 18-ம் ஆண்டு நிலவரப்படி 28.6 கோடி ஆண்கள் மட்டுமே வேலையில் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் 2011 - 12-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30.4 கோடியாக இருந்தது என்பதும் கவனிக்கத்தகக்து.

1993 - 94-க்குப் பிறகு

1993 - 94-க்குப் பிறகு

1993 - 94-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு குறைவது இதுவே முதல் முறை. 1993 - 94-ம் ஆண்டில் இந்தியாவில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு 21.9 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை தான் படிப்படியாக அதிகரித்து 2011 - 12-ம், ஆண்டில் 30.4 கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்போது பாஜக ஆட்சிக் காலத்தின் முடிவில் 28.6 கோடியாகவும் இறக்கம் கண்டிருக்கிறது.

ஆண்களுக்கான வேலை வாய்ப்பு
 

ஆண்களுக்கான வேலை வாய்ப்பு

ஆண்களுக்கான வேலைவாய்ப்பு நகர் புறங்களில் 7.1 சதவிகிதமாகவும், கிராமபுறங்களில் 5.8 சதவிகிதமாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது கிராம புறங்களில் வாழும் ஆண்களை விட நகர் புறங்களில் வாழும் ஆண்கள் தான் அதிகம் வேலையிழப்பைச் சந்தித்திரு இருக்கிறார்கள்.

தலையீடு

தலையீடு

இந்த தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் Periodic Labour Force Survey அறிக்கையைத் தான் தேசிய புள்ளியியல் ஆணையம் டிசம்பர் 2018-லேயே வெளியிட அனுமதி கொடுத்தது. ஆனால் சில அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தலையீடு அதிகமாக இருந்ததால் தான் எந்த ஒரு தகவலும் இன்னும் பொது வெளிக்கு வரவில்லை. ஜனவரி 2019-ல் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த மோகனனனும் இதை காரணமாக வைத்து தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததும் நடந்தேறிவிட்டது. ஆனால் இன்று வரரை Periodic Labour Force Survey 2017 - 18 மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

in the last five years 2 crore employment opportunity is wiped out by modi government

in the last five years 2 crore employment opportunity is wiped out by modi government
Story first published: Saturday, March 23, 2019, 16:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X