பதவி விலகினார் ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவர் மனைவி அனிதா கோயல் இருவருமே ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவில் இருந்து மார்ச் 25, 2019 (இன்று) வெளியேறி இருக்கிறார்கள்.

இதை ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இப்போது இயக்குநர் குழுவை ஆளத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த கடன் கொடுத்த நிறுவனங்கள் எல்லாம் விரைவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏலத்தில் விடப் போகிறார்களாம். அந்த ஏலத்தில் தான் ஒரு நல்ல முதலீட்டாளரையும் தேடிப் பிடிக்கப் போகிறார்களாம்.

பொய் சொன்ன மோடி..? வாக்குச் சாவடியால் மின்சாரம் பெற்ற தமிழக பள்ளிக் கூடம்..! பொய் சொன்ன மோடி..? வாக்குச் சாவடியால் மின்சாரம் பெற்ற தமிழக பள்ளிக் கூடம்..!

Share holding pattern

Share holding pattern

இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ப்ரொமோட்டார்களிடம் தான் (பெரும்பாலும் நரேஷ் கோயலிடம் தான்) 51% ஜெட் ஏர்வேஸ் நிறுவனப் பங்குகள் இருக்கிறதாம். அடுத்த சில நடவடிக்கைகள் மூலம் கோயல் வைத்திருக்கு 50.1% பங்குகளில் பாதியை குறைத்துவிடுவார்களாம். அப்போது தான் நரேஷ் கோயலின் குறுக்கீடு இருக்காது என்கிறார்கள் கடன் கொடுத்தவர்கள்.

Capital Infusion

Capital Infusion

ஒரு நிறுவனத்தில் செய்யும் முடலீட்டைத் தான் கேப்பிட்டல் இன்ஃப்யூஷன் என்போம். இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ முதலீடு செய்யப் போகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1,500 கோடி ரூபாயை கடன் பத்திரங்களாக முதலீடு செய்ய உள்ளதாம். இந்த கடன் பத்திரங்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் சொத்துக்களுக்கு எதிராக தான் வழங்க இருக்கிறார்களாம்.

ஒரு கமிட்டி
 

ஒரு கமிட்டி

ஒரு இடைநிலை நிர்வாக கமிட்டியை (Interim Management Committee) ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து அமைத்திருக்கிறார்களாம். இவர்கள் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தினசரி வேலைகளை, வியாபாரங்களையும், நிறுவனத்துக்குள் புழங்கும் பணத்தையும் நிர்வகிக்கப் போகிறார்களாம்.

நிதி நிலை மோசம்

நிதி நிலை மோசம்

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வியாபாரம் படுத்திருக்கிறது. வாங்கிய கடன்களுக்கு ஒழுங்காக வட்டி கட்ட முடியாமல் தவிப்பது, விமானங்களுக்கான லீஸ் தொகையைக் கூட கட்ட முடியாமல் தவிப்பது, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவிப்பது என பட்டியல் நீள்கிறது. இதன் விளைவாக பல வழிதடங்களில் விமானங்களை இயக்க முடியாமல் தேங்கி நிற்கிறது நிறுவனம். இதற்கு எல்லாம் வழி விடும் விதத்திலும், கடன் கொடுத்தவர்களின் பொறுப்பில் வியாபாரத்தை விடும் விதத்திலும் தான் ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

naresh goyal resigned from the jet airways chairman post

naresh goyal resigned from the jet airways chairman post
Story first published: Monday, March 25, 2019, 17:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X