ரயில்வே காவலர்களின் செல்போன்களுக்குத் தடை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் பணி நேரத்தில் அவர்களின் சொந்த செல்போனில் மூழ்கிவிடுவதாக புகார்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றனவாம். அதனால் ரயில் நிலைய பாதுகாப்புகளில் நிறைய குறைபாடு ஏற்படுகிறதாம். இந்த பாதுகாப்பு கவனக் குறைவை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறது.

 

ரயில்வே மூத்த அதிகாரிகள், ரயில்வே அமைச்சர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் பேசி ஒரு அவர்களின் கருத்துக்கள் மற்றும் சம்மதத்தோடு ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

ரயில்வே காவலர்களின் செல்போன்களுக்குத் தடை

ரயில்வே காவலர்கள் தங்கள் பணி நேரத்தின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்துபவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ரயில்வே நிர்வாகம்.

இந்த தடைய் அனைத்து இந்திய ரயில்வே அலுவலகங்களுக்கும் சுற்றரிக்கையாக கொடுத்திருக்கிறார்களாம். அந்த சுற்றரிக்கையில் பணிக்கு வரும் ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள், தங்கள் சொந்த செல்போன்களை ரயில் நிலைய ஆய்வாளர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். பணி முடிந்து வீடு திரும்பும் போது, அவரவர்களின் செல்போன்களை திரும்ப வாங்கிக் கொள்ளலாம். பணி நேரத்தில் வேலை தொடர்புகொள்ள பாதுகாப்பு படையினரின் வாக்கி டாக்கிகளில் மட்டுமே மொத்த தகவல் பரிமாற்றங்களும் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்களாம்.

அவசரகாலங்களில் தொடர்பு கொள்ள வசதியாக ரெயில்வே பாதுகாப்பு படை நிலையத்தின் தொலைபேசி (லேண்டு லைன்) எண்ணை குடும்பத்தினரிடம் கொடுத்து வைக்கவேண்டும் என்றும் பிரத்யேகமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த தடை உத்தரவுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினரிம் ஒரு மெல்லிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம். எனினும் இந்த முடிவுக்கு ரயில்வே பயணிகளும், பணியாளர்களும் கொஞ்சம் வரவேற்பை பலமாகவே தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: police phone போன்
English summary

railway police is not allowed to use their personal cell phone while in duty

railway police is not allowed to use their personal cell phone while in duty
Story first published: Monday, March 25, 2019, 20:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X