ஜெர்மனிக்குச் செல்ல வேண்டிய விமானம், ஸ்காட்லாந்துக்குச் சென்றுவிட்டது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: கிழக்கே ஜெர்மனிக்கு பறக்க வேண்டிய விமானம் தவறுதலாக வடக்கே பறந்து ஸ்காட்லாந்தில் தரை இறங்கி இருக்கிறது.

பிரிட்டீஷ் ஏர்வேஸின் BA 3271 என்கிற விமானம் திட்டமிட்ட படி லண்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியில் உள்ள டசல்டார்ஃப் (Dusseldorf) விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

ஆனால் தவறுதலாக லண்டனில் இருந்து பறக்கத் தொடங்கிய் BA 3271 ஜெர்மனிக்கு செல்வதற்கு பதிலாக ஸ்காட்லாந்தில் தரை இறங்கி இருக்கிறது.

என்ன ஆச்சர்யம்.. !.. பெட்ரோல் டீசல் விலை அப்படியே இருக்கே.. தேர்தல் முடியும் வரை என்ஜாய் மக்களே!

ஜெர்மனியர்கள் தவறு
 

ஜெர்மனியர்கள் தவறு

இந்த இரச்னை குறித்து பேசிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் "ஒரு பெரிய தவறு நடந்து விட்டது. பிர்ட்டீஷ் ஏர்வேஸ் சார்பாக BA 3271 விமானத்தை இயக்கியது WDL Aviation என்கிற ஜெர்மனி நிறுவனம் தான். அவர்கள் எங்களுக்கு கொடுத்த பறக்கும் திட்டத்தில் கூட ஸ்காட்லாந்துக்கு பறப்பதாகத் தான் திட்டம் இருந்தது. அதைத் தான் லண்டம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் சொல்லி இருக்கிறது."

தவறான திட்டம்

தவறான திட்டம்

இப்போது WDL Aviation நிறுவனத்தோடு ஏன் தவறான பறக்கும் திட்டத்தை (Flight Plan) தாக்கல் செய்தீர்கள் எனப் பேசி வருகிறோம். அதை மேற்கொண்டு விசாரித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தினர்.

இது தான் சேரும் இடம்

இது தான் சேரும் இடம்

விமானம் பறக்கின்ற போது எந்த ஒரு கோளாறும் இல்லை. ஆனால் தவறான பறக்கும் திட்டம் (Flight Plan) விமான கட்டுப்பாட்டறை மற்றும் BA 3271-ன் விமானிகள் என அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்ததால் எல்லோருமே விமானம் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்குக்குத் தான் பயணிக்க வேண்டும் என செயல்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறதாம்.

பயணிகள் கோபம்
 

பயணிகள் கோபம்

ஒரு சில பயணிகள் கடுங்கோபத்தில் "எப்படி லண்டனில் இருந்து ஜெர்மனிக்கு பறக்க வேண்டிய விமானம் இப்படி ஸ்காட்லாந்தில் இறங்கியது" என சமூக வலைதளங்களில் பதிவிட்டு காலி செய்து வருகிறார்.

தனிப்பட்ட முறையில் மன்னிப்பு

தனிப்பட்ட முறையில் மன்னிப்பு

"BA 3271 விமானத்தில் பயணம் செய்த ஒவ்வொரு விமானப் பயணிகளிடமும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பேசி மன்னிப்பு கேட்டிருக்கிறோம்" என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் சொல்லி இருக்கிறது. அதோடு லண்ட நகர விமான நிலையமும் தன் ட்விட்டர் பக்கத்தில் BA 3271-ல் பயணித்தவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறது.

விசாரணை

விசாரணை

WDL Aviation நிறுவனம் "இந்த சின்ன தவறு எப்படி நடந்தது, யாரால் நடந்தது என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறோம். அதோடு இனி இது போன்ற தவறுகள் எப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் விசாரித்து அவைகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனச் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார்களாம்.

3 மணி நேர தாமதம்

3 மணி நேர தாமதம்

தவறாக ஸ்காட்லாந்தின் எடின்பெர்க்கில் தரை இறங்கிய விமானத்தில் உடனடியாக எரிபொருள் நிரப்பப்பட்டு ஜெர்மனிக்கு பறக்கத் தொடங்கி இருக்கிறார்கள். விமானம் அடுத்த 3-வது மணி நேரத்தில் ஜெர்மனியில் தரை இறங்கி இருக்கிறது. ஆக BA 3271 மூன்று மணி நேரம் தாமதமாக ஜெர்மனியின் டசல்ட்ராஃப் விமான நிலையத்துக்குச் சென்று சேர்ந்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

British Airways BA3271 has to go to Dusseldorf Germany but it went to Edinburgh Scotland

British Airways BA3271 has to go to Dusseldorf Germany but it went to Edinburgh Scotland
Story first published: Tuesday, March 26, 2019, 11:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more