மக்களே நல்லா ஞாகம் வச்சுக்கங்க.. இன்னும் 5 நாள்தான் இருக்கு.. இவை இரண்டையும் இணைக்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) உடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க வேண்டும். இதற்கான இறுதி கெடு வரும் மார்ச் - 31 என்று வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.

 

இவ்வாறு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இனி வருமான வரியையும் தாக்கல் செய்யமுடியாது. மேலும் பான் எண்னையும் ரத்து செய்ய முடியாது. இதன்படி வருமான வரி சட்டம் 139 ஏஏ (2)-ன் கீழ் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் வருமான வரி தாக்கலுக்கு ஆதாரை இணைக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.

 மக்களே நல்லா ஞாகம் வச்சுக்கங்க.. இன்னும்  5 நாள்தான் இருக்கு.. இவை இரண்டையும் இணைக்க!

இணையதளம் மூலமே இணைக்கலாம்

பான்-ஆதார் இணைப்பை இணையதளம் மூலம் எளிதாக மேற்கொள்ள முடியும். என்எஸ்டிஎல் மற்றும் யுடிஐஐடிஎஸ்எல் ஆகியவை பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்களை அளித்துள்ளன. வருமான வரித்துறை இணையதளத்துக்கு சென்று உங்களது பான் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை அளித்தால் இணைப்புக்கான இணையதளத்தை அளிக்கும்.

Tejas ரயிலில் இத்தனை குறைகளா..? என்னது Wifi இல்லையா..?

வித்தியாசம் இருப்பின் இணைக்க முடியாது

ஆதார் கார்டில் உள்ள பெயருக்கும் பான்கார்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருந்தால் இணைப்பு கிடைக்காது. இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இயலாது என வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அவ்விதம் இணைப்பு மேற்கொள்ள இயலாதவர்கள் என்எஸ்டிஎல் மற்றும் யுடிஐஐடிஎஸ்எல் மையத்துக்கு சென்று ஆதார் அங்கீகாரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஓடிபி மூலம் உறுதி!

சிறிதளவு மாற்றம் இருப்பின் வருமான வரித்துறையினர் ஒரு முறை கடவுச் சொல்லை (ஓடிபி) மொபைல் போனுக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவரை உறுதி செய்வர் என்றும் வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 days only left to link pan to Aadhar number

It may be noted that the Income Tax department has made Aadhaar-PAN linking mandatory for PAN holders who are required to file ITR. March 31, 2019, is the last date for PAN holders to link their PAN card with Aadhaar card.
Story first published: Wednesday, March 27, 2019, 18:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X