சூப்பர் மார்கெட்டில் ஷாப்பிங் செய்யும் பேய் - வியாபாரத்திற்காக எப்படி எல்லாம் கிளப்பி விடுறாங்க

மனிதர்களுடன் ஷாப்பிங் செய்த காலம் போய் பேய்களுடன் ஷாப்பிங் செய்கின்றனர் சிலர். இங்கிலாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பேய்கள் ஷாப்பிங் செய்வதால் உலா வரும் வதந்தியால் வியாபாரம் களை கட்டுகிறதாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்து : ஆவிகள், பூதங்கள், பேய்களைப் பற்றி பேசுவதே படு சுவாரஸ்யமானதுதான். அதே பேய்கள் கடைகளுக்கு வந்து ஷாப்பிங் செய்து விட்டு செல்வதாக கேள்விப்பட்டால் அந்த பேயை பார்க்கவே ஒரு கூட்டம் கூடுமே அப்படித்தான் இங்கிலாந்திலும் நடக்கிறது. மசாசூட் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் ஏரியாவில் உள்ள மார்கெட் பேஸ்கெட் என்ற சூப்பர் மார்கெட்டில் பேய்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து எடுத்துச் செல்வதாக வதந்தி பரவியதால் அந்த சூப்பர் மார்கெட்டில் கடந்த சில தினங்களாக அச்சத்துடனேயே ஷாப்பிங் செய்கின்றனர்.

குறிப்பிட்ட சில பொருட்களை மட்டுமே தேர்ந்தேடுத்து வாங்குவதாக நேரில் பார்த்த ஒருவர் திகிலுடன் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பேய்கள் வித்தியாசமான ஒலிகளை எழுப்புவதாகவும், உண்மையில் இது ஒரு புது அனுபவம் என்றும் வெளிறிய முகத்துடன் கூறினார்.

ஆள் ஆளாக்கு தங்களின் பேய் அனுபவத்தை கூறுவதால் பேய்களுடன் ஷாப்பிங் செய்யவே தினசரியும் அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்து செல்கின்றனர். இதனால் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வியாபாரம் திகிலாகவே நடைபெற்றது. ஆனால் பேயெல்லாம் எதுவும் இல்லை தைரியமாக வந்து ஷாப்பிங் பண்ணுங்க என்று அழைத்துள்ளனர் நிர்வாகிகள்.

நீரவ் மோடியின் ஓவியங்களை விற்று 55 கோடி ரூபாய் திரட்டிய வருமான வரித் துறை..! நீரவ் மோடியின் ஓவியங்களை விற்று 55 கோடி ரூபாய் திரட்டிய வருமான வரித் துறை..!

பேய்கூடத்தான் இத்தனை வருஷமா..

பேய்கூடத்தான் இத்தனை வருஷமா..

திருமணமான நடுத்தர வயதுடைய ஆண்களைப் பார்த்து நீங்கள் பேய்களை கண்ணால் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் அவர்களிடமிருந்து உடனே நக்கலான பதில் வரும். அட போங்க சார், இத்தனை வருஷமா அது கூடத்தான் குடித்தனமே நடத்திக்கிட்டு இருக்கேன் நீங்க வேற என்று கூறுவார்கள் அவர்களுடைய அனுபவம் அப்படி.

பேய் இருக்கா இல்லையா

பேய் இருக்கா இல்லையா

உண்மையில் பேய்கள் உள்ளதா இல்லையா என்றால் அது நம்முடைய 6ஆவது அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வு என்றுதான் சொல்லவேண்டும். பேய்களை கண்ணால் பார்த்ததாக சொல்பவர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்தின் மசாசூட் மாகாணத்தில் தான் இந்த உண்மை சம்பவம் நடந்தாக கதைக்கிறார்கள்.

மார்கெட் பேஸ்கெட்
 

மார்கெட் பேஸ்கெட்

மசாசூட் மாகாணத்தின் வில்மிங்டன் ஏரியாவிலுள்ள மார்கெட் பேஸ்கெட் என்ற சூப்பர் மார்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டில் தான் பேய்கள் உலாவுவதாவும் தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கின்றன (மன்னிக்கவும்) லவட்டிக்கொண்டு செல்வதாகவும், கற்பூறம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.

வெள்ளை உடையில் வலம்

வெள்ளை உடையில் வலம்

வில்மிங்டன் ஏரியாவில் மார்கெட் பேஸ்கட் சூப்பர் மார்கெட் உள்ள தெருவில் குடியிருப்பவர்களில் பல பேர் இரவு நேரங்களில் பேய்கள் வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு வலம் வருவதை கண்ணால் பார்தததாக பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

17 முதல் 30 வயதுதான் இருக்கும்

17 முதல் 30 வயதுதான் இருக்கும்

பேஸ்புக் வலைதளத்தில் பேயை பார்த்ததாக பதிவிட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், பேய்க்கு வயது உத்தேசமாக 17 முதல் 30 வரை(?) இருக்கும். கருநீலக் கண்களுடன்(!) கருமையான கூந்தலுடன், வெள்ளைத் தோலுடன் வெள்ளை அங்கி உடுத்தியிருந்தாள் என்று பதிவிட்டுள்ளனர்.

பேயை நான் பார்த்தேன்

பேயை நான் பார்த்தேன்

பேயை கண்ணால் பார்த்ததாக கூறிய பெண் ஒருவர், நான் அந்த பேயை பின்தொடர்ந்து சென்றேன். வேறு யாறாவது பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே அந்த பேயை படம் எடுப்பதற்கு முன்பே அந்தப் பேய் அங்கிருந்து மறைந்துவிட்டது என்றார்.

விசித்திரமான ஒலி

விசித்திரமான ஒலி

மற்றொரு நபர் தன்னுடைய வலைதளத்தில் பேய் அனுபவம் பற்றி கூறும்போது, பேய் வரும்போது கேட்ட ஒலி மிகவும் விசித்திரமாக இருந்தது. ஆனால் யாருமே பேயை கண்ணால் பார்க்கவில்லை என்று ஏமாற்றத்துடன் சொன்னார். சூப்பர் மார்கெட்டில் உலா வரும் பேய்கள் சில குறிப்பிட்ட பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து எடுத்துச் செல்வதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இருக்கு ஆனா இல்லை

இருக்கு ஆனா இல்லை

சூப்பர் மார்கெட்டில் பேய் உலாவுவது பற்றி கருத்து கூறிய மார்கெட் பேஸ்கெட் கடை உரிமையாளர், பேய் உலாவுவதாக வரும் வதந்திகள் உண்மைதான். இதுபோல் பல சுவையான சம்பவங்கள் இந்த சூப்பர் மார்கெட்டில் நடந்துள்ளன என்றார். மார்கெட் பேஸ்கெட் சூப்பர் மார்கெட்டில் பணி புரியும் ஊழியர்கள், இந்த சூப்பர் மார்கெட்டில் தெய்வீகத் தன்மை உள்ள ஆன்மாக்கள் நடமாடுவதாக நம்புகிறார்கள்.

பேய் இருக்கு சார் நம்புங்க

மார்கெட் பேஸ்கெட்டில் பேய் வலம் வருவது பற்றி கருத்து தெரிவித்த மசாசூட் காங்கிரஸ் பிரதிநிதி சேத் மவுள்ட்டன் என்பவர், நல்லவேளை பேய், மாந்திரீகம் உள்ளது என்று நான் மட்டுமே நினைத்திருந்தேன், உண்மையில் பேய் உள்ளது உண்மைதான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

திகிலான அனுபவம்

திகிலான அனுபவம்

பேய் உலாவிடும் செய்தியால் அந்த சூப்பர் மார்கெட்டில் விற்பனை திகிலுடனேயே நடக்கிறது. இதுவும் ஒரு வியாபார தந்திரம் தான் என்றார் வாடிக்கையாளர் ஒருவர். ஆனால் பேயெல்லாம் எதுவும் இல்லை தைரியமாக எங்கள் சூப்பர் மார்க்கெட்டிற்கு வாங்க என்று மார்கெட் பேஸ்கெட் நிறுவனத்தினர் அழைக்கின்றனர். பேய் இருக்கா இல்லையா என்பதெல்லாம் அவரவர்களின் நம்பிக்கையை பொறுத்த விசயம்தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: market shopping
English summary

Market Basket super market is free for Ghost free shoping

Fear not, Market Basket shoppers. The grocery store chain doesn’t believe there are any ghosts at its Wilmington location.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X