Tejas ரயிலில் இத்தனை குறைகளா..? என்னது Wifi இல்லையா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட Tejas ரயிலை மோடியே வந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காரணம் தேர்தல், பாத்தியா உங்க மாநிலத்துக்கு எப்படி எல்லாம் ரயில் விட்டிருக்கேன்னு என பேச வசதியாக இருக்கும் இல்லையா..? அதற்காகத் தான். சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தேஜாஸ் ரயில் அத்தனை சிறப்பானதா..?

ஆம் என்பதற்கு பல காரணங்கள் சொன்னார்கள். விமான பயணிகளுக்கு விமானங்களில் வழங்கும் வசதிகளைப் போன்றே தமிழக ரயில் பயணிகளுக்கு முதல் முறையாக வழங்க இந்த ரயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என வலுவாக ஆதரித்தார்கல் பாஜகவினர்.

சர்வதேச தரத்தில் 22 சிறப்பு அம்சங்கள் இந்த தேஜாஸ் ரயிலில் இடம்பெற்றுள்ளது என்றார்கள். அதோடு பயண நேரமும் சென்னை டு மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில் சென்று விடும் என்பது கூடுதல் கவர்ச்சி என லாஜிக் பேசினார்கள்.

நீரவ் மோடியின் ஓவியங்களை விற்று 55 கோடி ரூபாய் திரட்டிய வருமான வரித் துறை..! நீரவ் மோடியின் ஓவியங்களை விற்று 55 கோடி ரூபாய் திரட்டிய வருமான வரித் துறை..!

என்ன வசதிகள்

என்ன வசதிகள்

ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய எல்இடி திரைகள், ஜிபிஎஸ் வசதி, Wifi நெட்வொர்க்கில் தொடுதிரையில் பொழுதுபோக்கு சேனல்கள், பெட்டியின் உட்புறத்தில் கையை வைத்தால் கதவு திறந்து மூடும் வசதி, தேஜாஸ் ரயில் உதவியாளர்களை அழைக்க தலைக்கு மேலே பட்டன் வசதி விமானம் போல, சிசிடிவி, கேமராக்கள், பயணிகளின் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள்...என்று அடுக்கிக்கொண்டே போனார்கள். இதெல்லாம் போக கேட்டரிங், எலெக்ட்ரிக்கல், டெக்னிக்கல் ஊழியர்கள், சூப்ரவைசர், மேனஜர் என ஒரு 50 பேர் பயணிகளுக்கு சேவை செய்ய நியமித்திருந்திருக்கிறார்களாம்.

இருக்கிறதா

இருக்கிறதா

இத்தனை வசதிகளோடு 6 மணி நேர ரயில் பயணமா..? படிக்கவே பிரமாதமாக இருக்கிறதல்லவா..? ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை வலைதளங்களில் அடுக்கித் தள்ளுகிறார்கள். அப்படி என்ன பிரச்னைகள் இந்த தேஜாஸ் ரயிலில் என படிக்கத் தொடங்கினால் பட்டியல் மிகையாக நீள்கிறது.

சுமாரான உணவு
 

சுமாரான உணவு

சில தினங்களுக்கு முன் போட்ட சமோசா, புளிக்கும் தயிர், மட்டமான ஊறுகாய் பாக்கெட் என உணவில் இருந்து தான் தொடங்குகிறார்கள் நம் நெட்டிசன்கள். குறிப்பாக தேஜாஸ் ரயிலில் கொடுக்கும் கட்லட் மரண கொடூரமாம்.

அலாரம் இல்லை

அலாரம் இல்லை

பொதுவாகவே ரயிலில் ஒரு சிவப்பு திண்டு போல ஒரு சங்கிலி தொங்கும். இதைப் பிடித்து இழுத்தால் ரயில் நின்று விடும். அப்படிப் பட்ட அலாரம் தேஜாஸ் ரயில் பெட்டிகளில் இல்லையாம். கதவின் உட்ப்றம் கை வைத்தால் திறக்குப் படி தான் இருக்கிறதாம். அப்படி இல்லை என்றால் பொதுவாக ரயில் நிலையங்களில் நிற்க கதவு திறக்கும் போது தானாம். இதையும் நம் மக்கள் ஒரு குறையாகத் தான் சொல்கிறார்கள். காரணம் ஒரு அவசரத்தில் கதவைத் திறக்க வேண்டும் என்றாலும் முடியவில்லை என வருத்தப்படுகிறார்கள்.

Wifi & Entertainment

Wifi & Entertainment

மோடியி ஜியின் டிஜிட்டல் இந்தியா திட்டப் படி ரயில் நிலையங்களுக்கு எல்லாம் Wifi கொடுத்தது போய், இப்போது தேஜாஸ் ரயிலுக்கே கொடுத்தார். ஆனால் டிடிஆர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் என யாரைக் கேட்டாலும் Wifi பாஸ்வேர்ட் தெரியாது என்கிறார்களாம். அப்படி இல்லை என்றால் அந்த வசதிகள் எல்லாம் இங்கே ஏது என பயணிகளையே கேள்வி கேட்கிறார்களாம்.

தொடுதிரை

தொடுதிரை

என்னமோ இதிஹாட் ஏர்வேஸ் போல தேஜாஸ் ரயில் பயணிகள் தங்கள் பயண நேரத்தில் தங்கள் முன் இருக்கும் தொடு திரைகளை பார்த்தே பொழுதைக் கழித்துவிடலாம். அந்த சேனல் வரும், இந்த சேனல் வரும், படம் ஓடும் என என்னென்னமோ சொன்னார்கள் பக்தர்கள். ஆனால் உண்மையில் அந்த தொடுதிரையை ஆன் கூட செய்ய முடியவில்லையாம். ஆக பொது அறிவிப்புகள் மட்டுமே அந்த தொடு திரையில் வந்து கொண்டிருக்கிறது. நாம் நினைத்தது பார்க்கவெல்லாம் முடியவில்லை. இதை டிடிஆர்களிடம் கேட்ட போது டெக்னிக்கல் உதவியாளர்களை அனுப்புவதாக சொல்கிறார்களாம். இல்லை என்றால் இதோ பார்க்கிறோம் என்கிறார்களாம்.

விளக்கம்

விளக்கம்

ரயில்வே உயர் அதிகாரிகளே தேஜாஸ் ரயில் பயணிகளுக்கு Wifi கிடையாது என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்களாம். Wifi வசதிகள் வெறும் தொடு திரையில் பொழுதுபோக்கு அம்சங்களை பார்க்க மட்டுமே தான் என்பதும் கூடுதல் செய்தியாக வந்திருக்கிறது. ஆக தயவு செய்து இனி ஸ்மார்ட் போன்களோடு Wifi பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்

வாஷ் பேஷின்

வாஷ் பேஷின்

நம்மாட்கள் இன்று வரை இட்லி தோசைகளில் இருந்து பீட்சா, பர்கருக்கு மாறினாலும் கைகளை கழுவுவதை மட்டும் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. தேஜாஸ் ரயில் பெட்டிகளில் கை கழுவ ஒரு வாஷ் பேசின் கூட இல்லையாம். கேட்டால் அதான் ஸ்பூன், ஃபோர்க், டிஸ்ஸூ தால்களைத் தருகிறோமே அப்புறம் எதற்கு இந்த வாஷ் பேசின் என பயணிகளையே திருப்பிக் கேட்கிறார்களாம். கொடுக்கும் ஒரு டிஸ்ஸுவை வைத்துக் கொண்டு நன்றாக கூட கைகளை துடைத்துக் கொள்ள முடியாத போது எப்படி வாயை எல்லாம் சுத்தம் செய்து கொள்வது என குமுறுகிறார்கள் பயணிகள்.

இன்னும் பல குறைகள்

இன்னும் பல குறைகள்

வழக்கமாக அடைப்போடு இருக்கும் ரயில் கழிவறைகள், தவறான தகவல்களைச் சொல்லும் எல்.இ.டி திரை, குறைவாகவே இருக்கும் ஏசி டெம்பரேச்சர் என குறைகள் நீண்டு கொண்டே போகும் இந்த ரயிலில் ஒரே ஒரு ப்ளஸ் என்றால் அது நேரம் தான். குறித்த நேரத்தில் மதுரையைச் சென்று சேர்கிறது. நாம் ஏசி சேர் காருக்கு சென்னை முதல் மதுரைக்கு கொடுக்கும் 1035 ரூபாய்க்கு அந்த வேகம் மட்டும் திருப்திகரமாக இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: train ரயில்
English summary

newly introduced chennai to madurai tejas train facilities are bad especially food, wifi, neatness

newly introduced chennai to madurai tejas train facilities are bad especially food, wifi, neatness
Story first published: Wednesday, March 27, 2019, 16:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X