விவசாய மானியம்.. நம்மை விட மிகப் பெரிய உயரத்தில் மேற்கத்திய நாடுகள்.. இந்தியா மட்டும் ஏன் இப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் இந்தியாவில் மிக மிக குறைவே என்று மத்திய வர்த்தகத் துறைச்செயலர் அனுப் வாத்வான் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில்ஆண்டுக்கு சுமார் 250 டாலர்கள் மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்த மானியஒதுக்கீடே மிக பிரச்சனையாக உள்ளது. அவை சரியான வகையில் வகுக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் எவ்வாறு மானியம் வழங்கப்படுகிறது, என்பதை கவனித்து அதற்கேற்றவகையில் நம் விவசாயிக்களுக்கு மானியத்தைவகுத்து கொடுத்திருந்தால், விவசாயிகளின் பிரச்சனை இந்தளவில் பெரிதாகி இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய மானியம்.. நம்மை விட மிகப் பெரிய உயரத்தில் மேற்கத்திய நாடுகள்.. இந்தியா மட்டும் ஏன் இப்படி?

வளர்ச்சியடைந்தநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உலக வர்த்தக அமைப்பிடம், இந்தியா அளிக்கும் மானியம் குறித்து புகார் அளித்து வருகின்றன. எனினும் உலக வர்த்தக அமைப்பின்விதிமுறைப்படி 10% அளவுக்கு மானியம் இந்திய விவசாயிகளுக்கு குறைவாகத்தான் மானியம் அளிக்கப்படுகிறது என்று தெரிகிறது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் உயரப் போகும் டோல்கேட் கட்டணம்.. அதிர்ச்சியில் வாகனதாரிகள்

பிற நாடுகள் தங்களது பட்ஜெட்டில் விவாசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் மானிய தொகையை பார்த்தால்நிச்சயம் தலை சுற்றும். அந்தஅளவுக்கு மிக அதிகம் ஒதுக்கீடுசெய்கின்றன. ஐரோப்பாயூனியனில் ஒரு பசு மாட்டுக்குஅளிக்கப்படும் மானிய உதவியைப் கொண்டுஅந்த மாடு இரண்டு முறைவிமானப் பயணம் செய்யலாம் என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரு விவசாயிக்கு மானியமாக 250 டாலர் மட்டுமே, ஆனால் இதுவே மேலை நாடுகளில் கோடிக்கணக்கில் அளிக்கின்றனர். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்போது தான் அவை சிறப்பானசெயல்பாடுகளை செயல்படுத்தும். இந்த விஷயத்தில் நாம்சீனாவை பின்பற்றலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடலோர பொருளாதார மண்டலங்கள் புதிதாக நிறைய உருவக்கப்பட வேண்டும்என்று நிதி ஆயோக் தலைமைசெயல் அதிகாரி அமிதாப் காந்த் குறிப்பிட்டார். வேலைவாய்ப்பை உருவாக்கும் எண்ணிக்கை அடிப்படையில் இவற்றிற்கு மானியம் அளிக்கலாமென்றும் குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s subsidies to farmers are very low

Subsidies provided by india to is farmers are quite low as compared to billions of dollars given by western countries.
Story first published: Thursday, March 28, 2019, 17:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X