Saravana Bhavan நிறுவனர் Rajagopal-க்கு வாழ்நாள் சிறை..! உச்ச நீதிமன்றம்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தமிழகத்தின் புகழ் பெற்ற சரவண பவன் ஹோட்டல்களின் உரிமையாளர் ராஜகோபாலுக்கு வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இதற்கு முன் 2009-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ராஜகோபால் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஐந்து பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கியது உயர் நீதிமன்றம். அந்த தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். இன்று காலை தான் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

ஆனால் இப்போது உச்ச நீதிமன்றமும் ராஜகோபாலுக்கும் சாந்த குமாரை கொலை செய்ய உதவிய ஐந்து பேருக்கு வாழ் நாள் சிறை தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

"NYAY திட்டம் மோடியின் தவறுகளை சரி செய்யும்..!" காட்டமாக பதிலளித்த ராகுல் காந்தி..!

சரணடைய தேதி

சரணடைய தேதி

வரும் ஜூலை 7, 2019-க்குள் ராஜ கோபாலும் அவரோடு சாந்தகுமாரை கொலை செய்ய உதவியாக இருந்த ஐந்து பேரும் காவலர்களிடம் சரணடையச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிம்ன்றம்.

கொஞ்சம் வரலாறு

கொஞ்சம் வரலாறு

1981 வரை பி ராஜகோபால் ஒரு சாதாரண மளிகைக் கடை வியாபாரி தான். அப்போது சென்னையில் நல்ல உனவகங்கள் இல்லாத வெற்றிடத்தை புரிந்து கொண்டு தொடங்கப்பட்ட சரவண பவன் இன்று உலகிலேயே மிகப் பெரிய சைவ உணவக Restaurant chain-களில் ஒன்று. இன்று வரை உலக நாடுகளில் 43 நகரங்களில் கடை போட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்.

ஜீவ ஜோதி

ஜீவ ஜோதி

எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 90-களின் கடைசி காலங்களில் ராஜகோபாலுக்கு ஜீவ ஜோதி என்கிற பெண்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஜீவ ஜோதி சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக சரவண பவன் ஹோட்டலில் வேலை பார்த்த ப்ரின்ச் சாந்த குமாரை திருமணம் செய்து கொண்டார்.

மிரட்டல்

மிரட்டல்

ஜீவ ஜோதி மற்ரும் சாந்த குமாரை நேரடியாகவும், மறைமுகமாகவும் ராஜ கோபால் மிரட்டி இருக்கிறார். அதோடு விவாகரத்து வாங்குமாறும் ஜீவ ஜோதியையும், ப்ரின்ஸ் சாந்த குமாரையும் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் இருவருமே சம்மதிக்கவில்லை. இந்த பிரச்னையை புரிந்து கொண்ட ஜீவ ஜோதி மற்றும் சாந்த குமார் இருவரும் சேர்ந்த லோக்கல் காவல் நிலையத்தில் விளக்கமாக புகார் கொடுத்திருக்கிறார்கள்.

ப்ரின்ஸ் கொலை

ப்ரின்ஸ் கொலை

ஜீவ ஜோதி மற்ரும் ப்ரின்ஸ் சாந்த குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அடுத்த சில நாட்களிலேயே ப்ரின்ஸ் சாந்த குமாரை ஒரு மர்ம கும்பல் கடத்தி கொடைக்கானல் பகுதியில் கொலை செய்துவிடுகிறார்கள். ப்ரின்ஸ் சாந்தகுமாரின் உடலை வனத் துறை அதிகாரிகள் கண்டு பிடித்து பிரேத பரிசோதனைக்கு கொடுக்கிறார்கள்.

கொலை தான்

கொலை தான்

பிரேத பரிசோதனையில் நடந்தது கொலை தான் என்பது நிரூபனமான உடனேயே வழக்கு ராஜகோபால் மீது பாய்கிறது. அதற்கு ஜீவ ஜோதியும், ப்ரின்ஸ் சாந்த குமாரும் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்து விசாரனை நடக்கிறது. விசாரனையில் ராஜ கோபால் சொல்லித் தான் ஐந்து பேர் சாந்த குமாரை கடத்திக் கொன்றது தெரிய வருகிறது.

அந்த ஐந்து பேர் யார்

அந்த ஐந்து பேர் யார்

டேனியல், கார்மேகன், ஹிசேன், காசி விஸ்வநாதன், பட்டுரங்கன் என்கிற இந்த ஐந்து பேருமே ராஜகோபாலின் சொல் படி ஜீவ ஜோதியின் கணவர் ப்ரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்ய உதவியர்கள் என்பதால் தான் இவர்களுக்கு ராஜகோபாலுக்கு கொடுத்த தண்டணையை அப்படியே கொடுத்திருக்கிறார்கள்.

சரண்

சரண்

வழக்கு உக்கிரமாக நடந்ததால் அடுத்த மாதமே ராஜகோபால் காவலர்களிடம் சரணடையை வேண்டி இருந்தது. ஒருவழியாகப் போராடி ஜூலை 2003-ல் ஜாமீனில் வெளியே வந்தார் ராஜகோபால். ஆனால் வழக்கில் இருந்து நிரந்தரமாக வெளியே வரமுடியவில்லை.

2009-ல்

2009-ல்

கடந்த 2009-ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கும், அவரோடு கொலையில் சம்பந்தபட்ட ஐந்து பேருக்கு வாழ் நாள் சிறை தண்டனை கொடுத்தது. அதோடு 55 லட்சம் அபராதத்தை நீதிமன்றத்திடம் செலுத்தவும், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையை ஜீவ ஜோதிக்கு கொடுக்கும் படியும் உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இப்போது மேல் முறையீடும் தோற்றுப் போய் சிறைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜகோபால்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

saravana bhavan founder rajagopal is have to be in jail for his whole lifetime supreme court

saravana bhavan founder rajagopal is have to be in jail for his whole lifetime supreme court
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X