ஏப்ரல் 01 முதல் ஜெட் ஏர்வேஸின் 1,000 விமானிகள் ஸ்ட்ரைக்..! சம்பளம் கொடு விமானம் எடு..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 1000 விமானிகள் தங்கள் சம்பள பாக்கி வராத வரை ஏப்ரல் 01-ம் தேதியில் இருந்து விமானங்களை ஓட்ட மாட்டோம் என போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர்.

 

National Aviators Guild (NAG) என்கிற அமைப்பு இந்தியாவில் விமானிகள் சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சங்கத்தில் சுமார் 1,100 ஜெட் ஏர்வேஸ் விமானிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

கடந்த வாரமே இந்த National Aviators Guild (NAG) அமைப்பு மார்ச் 31-ம் தேதிக்குள் சம்பள பாக்கிகளை கொடுக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது.

வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் தண்ணீர்.. வறட்சியின் பிடியில் இந்தியா.. சரிவில் உற்பத்தி

எஸ்பிஐ

எஸ்பிஐ

சில வாரங்களுக்கு முன் தான் ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமும் தங்களின் சம்பள பாக்கிகளை கொடுக்கச் சொல்லி முறையிட்டார்கள் விமானிகள். ஆனால் சம்பளம் கிடைக்கவில்லை ஒரு அறிக்கை கூட வெளியாகவில்லை.

மார்ச் 29

மார்ச் 29

முன்பு சொல்லிக்கொண்டிருந்தது போல, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ 1500 கோடி ரூபாயை மார்ச் 29, 2019-க்குள் முதலீடு செய்யும் என்றார்கள். ஆனால் எஸ்பிஐ சொன்னது போல விமான நிறுவனத்துக்கு எந்த ஒரு முதலீடும் வரவில்லை. அதோடு ஜெட் ஏர்வேஸை மீண்டும் பழைய படி இயங்க வைக்க எந்த பிசினஸ் வழிகளையும் விமானிகளோடு கலந்து பேசவில்லை. எனவே இப்போது நேரடியாக போராட்டத்தை அறிவித்தே விட்டார்கள் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்.

சிஇஓ-க்கு கடிதம்
 

சிஇஓ-க்கு கடிதம்

National Aviators Guild (NAG) அமைப்பில் உறுப்பினராக இருக்கும் 200 விமானிகள் தனிப்பட்ட முறையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி வினய் துபேவை விடுப்பு எடுத்து எங்காவது சென்றுவிடு மாறும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்களின் சம்பள பாக்கிகளை பெறப் போவதாகவும் கடிதத்தில் சொல்லி இருக்கிறார்கள் 200 விமானிகள்.

ஜெட் ஏர்வேஸ் தரப்பு

ஜெட் ஏர்வேஸ் தரப்பு

வழக்கம் போல நிர்வாகம் "ஜெட் ஏர்வேஸ், தன்னால் ஆன விஷயங்களை செய்து நிறுவனத்தை நடத்த முயன்று கொண்டிருக்கிறது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான விமானிகள் மற்றும் பொறியாளர்களின் சேவைகளை அங்கீகரிக்கிறோம்" என அதே வழ வழ கொழ கொழ தான். சம்பளத்தைப் பற்றிப் பேசவில்லை.

தீர்மானம்

தீர்மானம்

ஆனால் சம்பளம் குறித்து எந்த செய்திகளும் வராததால் National Aviators Guild (NAG) அமைப்பின் தலைவர் கரண் சோப்ரா "ஜெட் ஏர்வேஸ் விமானிகள் ஏப்ரல் 01, 2019 முதல் சம்பள பாக்கி கிடைக்கும் வரை விமானங்களை ஓட்ட மாட்டார்கள்" எனச் சொல்லி ஸ்ட்ரைக்கை தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே பிரச்னைக் கடலில் மிதந்து கொண்டிருக்கு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தினருக்கு இது மேலும் ஒரு அழுத்தமான நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1000 jet airways pilots are going to strike mode for their salary dues from april 1

1000 jet airways pilots are going to strike mode for their salary dues from april 1
Story first published: Saturday, March 30, 2019, 18:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X