வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் தண்ணீர்.. வறட்சியின் பிடியில் இந்தியா.. சரிவில் உற்பத்தி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புனே: மகாராஷ்டிரா கடந்த 2017 - 2018 ஆண்டில் பழங்கள்மற்றும் காய்கறிகள் உற்பத்தி குறையும் என தோட்டக்கலை வாரியம் முன்கூட்டியே அறிவித்திருந்தது. (அறுவடை காலம் ஜீலை - ஜீன்)

 

இந்த நிலையில் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் பழங்களின் உற்பத்தி முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 99.92 லட்சம் டன்களாக குறைந்துள்ளது. இதுவே முந்தையஆண்டு 2017 - 2018 ஆம் ஆண்டில் 117 லட்சம்டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் தண்ணீர்.. வறட்சியின் பிடியில் இந்தியா.. சரிவில் உற்பத்தி

இதுவே காய்கறிகளின் உற்பத்தி முந்தைய ஆண்டோடு ஒப்பிடும் போது 2018 - 2019 7% குறைந்து 116 லட்சம் டன்களாக இருந்தது. இதுவே 2017 - 2018 ஆம் ஆண்டில் 123 லட்சம் டன்களாக இருந்தது.

மாறுபட்ட வானிலையே காரணம்?

மாறுபட்ட வானிலைகள், வறட்சி போன்ற காரணங்களே பழம் மற்றும் காய்கறி உற்பத்தி குறைவதற்கு காராணமாகின. குறிப்பாக தவறான வானிலை மாற்றங்கள் பல்வேறு வகைகளில் உற்பத்தியை பாதிக்கின்றன. மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யாமை, கால தாமதமாக பெய்யும் மழை, பூ பூக்கும் பருவத்தில் அதிக வெப்பம், பழவகைகள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கின்றன.

 வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் தண்ணீர்.. வறட்சியின் பிடியில் இந்தியா.. சரிவில் உற்பத்தி

வெங்காயம் தக்காளி உற்பத்தி பாதிப்பு?

இது போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக பழ மற்றும் காய்கறிகள் உற்பத்தி வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக மிளகாய், தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவைகளின் உற்பத்தி வெகுவாக பாதிப்படைந்துள்ளன. மேலும் பாசன வசதியுள்ள இடங்களில் தண்ணீர் இன்மையாலும் ராபி பருவ பயிர்கள் வழக்கமான உற்பத்தியை விட 59% குறைதே காணப்படுகிறது.

மாற்று விவசாயம்!

கடந்த2 018ல் வழக்கமான பருவமழை பெய்ய வேண்டிய நேரத்தி ல்பெய்யாமல் போனதால் மண்ணின் ஈரப்பதம் மிக குறைந்தது. பயிர் விதைப்புக்கு தேவையாய் இருந்த காலத்தில் மழை இல்லாதது மேலும் உற்பத்தியை குறைத்தது. பல விவசாயிகள் மாறுபட்ட இந்த சந்தை நிலைமையின் காரணமாக பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியை விடுத்து, கரும்பு, மக்காச்சோளம், சோயாபீன்ஸ் போன்றவைகளை உற்பத்திசெய்ய ஆரம்பித்து விட்டனர்.

 
 வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணில் தண்ணீர்.. வறட்சியின் பிடியில் இந்தியா.. சரிவில் உற்பத்தி

கடந்த ஆண்டில் வெப்ப நிலை அதிகரித்து பழ்ம் மற்றும் காய்கறி உற்பத்தி பாதிக்கும் எனகூறியிருந்த இந்தியாவின் காய்கறி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம், நடப்பு வருடத்திலும் வெயில் தாங்க முடியாத அளவுக்கு வறுத்தெடுக்கிறது என்றும், இது ஏற்கனவே பல பகுதிகளில் 40 டிகிரியை கடந்துள்ள நிலையில் ஏப்ரல் - மே மாதங்களில் எப்படிஇருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை என்கிறார்

எப்படியோ நடப்பு வருடத்திலும் உற்பத்தி குறையும் என்பது அனைவரின் உள்- கருத்தாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fruits and vegitables production totally fall

Fruit production last year drop to 99.92 lakh tonnes from 117 lakh tonnes, vegitable also may fall 7 lakh tonnes against 123 lakh tons. Finally analyst told current also production may fall for weak rain
Story first published: Saturday, March 30, 2019, 17:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X