தங்கத்தில் ஓட்டு இயந்திரம்.. 2.30 மணி நேரம் தண்ணீரில் யோகா.. மாஸாக கலக்கு அதிமுக தொண்டர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவை: கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ராஜா 100% வாக்குபதிவை வலியுறுத்தி தங்கத்தில் வாக்கு பதிவு இயந்திரத்தை தயாரிச்சுருக்காராம். இதோடு அ.தி.மு.க வெற்றியை வலியுறுத்தி 2 1/2 மணி நேரம் கிணற்று தண்ணீரில் யோகா செய்யும் முடிவிலும் இருக்கிறாராம்.

கோவை அருகே உள்ள குனியமுத்தூரை சேர்ந்த யுஎம்டி ராஜா, 48 வயதுடைய இவர், தங்க நகைசெய்யும் தொழிலாளி. தங்க நகைகளை மட்டும் அல்லாமல், பல நுண்ணிய அழகான பொருட்களை செய்யும் பணிகளில் ஈடுபாடு வருகிறார்.

இவர் வரும் மக்களவை தேர்தலையொட்டி 100% வாக்குபதிவு வேண்டிபல நுண்ணிய பொருட்களை விழிப்புணர்வுக்காக செய்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் 100% வாக்களித்து, ஜன நாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பென்சிலில் மனித உருவத்தை செதுக்கியுள்ளார்.

 

கருப்பு பண பரிவர்த்தனை: 3 லட்சம் நிறுவனங்களிடம் விசாரணை நடத்த மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவு

 எப்படி

எப்படி

அதேபோல் ராஜா 100% வாக்குபதிவை வலியுறுத்தி தங்கத்தில் வாக்கு பதிவு இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் கட்சியினர் உங்கள் பொன்னான வாக்கினை என்று பிரச்சாரம் என்று செய்வார்கள். அப்படிப்பட்ட பொன்னான வாக்குகளை பொன்னாலான வாக்குபதிபு இயத்திரத்தை பார்த்து மக்களும், புதியதாக ஓட்டு போடும் இளைய தலைமுறையினரும் வாக்களிக்க வேண்டும் என்று இவர் இப்படி செய்துள்ளார்.

 செம திட்டம்

செம திட்டம்

இதைபார்த்தாவது அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதே இவரின் திட்டம். இதில் ஐந்து கட்சிகளின் சின்னங்களை தங்கத்தில் செய்து ஓட்டு போடும் பட்டன்களைப் போல ரத்தின கற்களை பதித்தும் மின்னனுவாக்குபதிவு இயத்திரத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளார். மாணவர்களை உபயோகப்படுத்தும் ஜாமென்டிரி பாக்ஸை வாக்குபதிவு இயந்திரத்தை போல மாற்றியுள்ளார்.

 கலை நயம்
 

கலை நயம்

இதுகுறித்து ராஜா கூறியதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா " தாலிக்கு தங்கம்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டத்தினை மக்கள் மறக்கா வகையிலும், அம்மாவின் நினைவாகவும் ஒரு பவுன் தங்கத்தில் அம்மா என்ற வடிவத்தில் தாலியை வடிவமைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்குநன்றி தெரிவிக்கும் வகையில் குண்டுபல்புக்குள் அம்மாவின் படத்தை வரைந்தேன், என்றுள்ளார்.

 எம்.ஜி.ஆர் ரசிகர்

எம்.ஜி.ஆர் ரசிகர்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்தை பொறித்ததங்க நாணயத்தை உருவாக்கியுள்ளேன். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக 100 மி.கி தங்கத்தில் தீக்குச்சி முனையில் ஜல்லிகட்டு காளையின் உருவத்தை வடிவமைத்தாகவும் கூறியுள்ளார்.யோகாவிலும் கைதேர்ந்தவர்!

 தங்க நகை

தங்க நகை

தங்க நகை செய்வதில் மட்டுமல்ல, யோகாசனம் செய்வதிலும் நான் கைதேர்ந்தவன் என்கிறார் ராஜா. அ.தி.மு.காவின் தீவிர தொண்டரானராஜா, இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று, சுமார் 2 1/2 மணி நேரம் கிணற்றுநீரில் யோகாசனம் செய்த படி தண்ணீரில்மிதந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

 அட

அட

பலே பலே அதிமுகவிற்கு இப்படியும் ஒரு தொண்டரா என நினைக்கும் போது சந்தோஷம் தான். எனினும் இவரின் கலைத்திறமையை ஊக்குவிக்கும் அரசு இருந்தால் சரியே என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: election தேர்தல்
English summary

A man Created a golden voter machine for the purpose of 100% vote

Raja created golden voter machine, draw ex chief minster face in bulb etc, because he is an good ADMK politician. Also he is a good artist.
Story first published: Sunday, March 31, 2019, 12:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more