இணையதளத்தில் தவறான வெளியீடுகள்.. உலக நாடுகள் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.. மார்க் கோரிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இணையதளம் தவறான முறையில் பயன்படுத்துவதை தவிர்க்க, குறிப்பாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க உலக நாடுகளின் அரசுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.

இணையதளத்தில்அரசுகளின் தலையீடு இருக்கக் கூடாது என்று பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் கூறி வந்த நிலையில், தற்போது பல சமூக தள பயன்பாட்டாளர்களின் ரகசியங்கள் திருட்டு போவதாகவும், மேலும் பல தவறான கொள்கைகளை பரப்புவதாகவும், இதன் மூலம் சமூகத்தில் பலவாறு பிரச்சனைகள் உருவாகி வருகின்றன.

குறிப்பாக பேஸ்புக்கில் இனவெறியை உருவாக்கும் தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், பிற நாடுகளில் தேர்தல் குறித்து வெளியீடுகளை வெளியிடுவது, தற்போதைய சூழலில், இந்தியாவில் நடைபெறும் தேர்தல் குறித்தும் பல தகவல்கள் வெளியிடப்படுவது நாம் கண்கூடாக காணப்படும் ஒன்றாகும்.

தவறான கருத்து

தவறான கருத்து

இதனை உறுதிப்படுத்தும், விதமாக நியூசிலாந்தில் இனவெறியர்கள் மசூதிகளில் துப்பாக்கி சூடு நடத்தி 50 பேர்களை படுகொலை செய்தனர். இது பேஸ்புக்கில் லைவ்வில் போடப்பட்டது. இந்த வீடியோ பொதுமக்களுக்கிடையே பெரும் சர்ச்சையைஏற்படுத்தியது. இதனால் மக்கள் மத்தியில், சமூக வலைதளங்கள் குறித்த மிக மோசமானஎண்ணங்களை விதைக்கிறது. இதனால் சமூக வலைதளங்கள்குறித்த தவறான எண்ணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

அரசுக்கு வேண்டுகோள்

அரசுக்கு வேண்டுகோள்

இது குறித்து தி வாஷிங்டன் போஸ்ட்நாளிதழில் மார்க் ஜக்கர்பெர்க் இணையதளங்கள் தவறாகக் பயன்படுத்தபடுவதை தடுப்பதில் உலக நாடுகளின் அரசுகளின் பங்கு முக்கியமாக உள்ளது. மேலும் இணையதள நடவடிக்கைகளை அவ்வப்போது புதுப்பித்து கொண்டே வருவதன் மூலம் பல ஆபத்தான குற்றங்களை அரசு தடுக்க முடியும்.

ஆபத்தான பதிவுகளுக்குத் தடை

ஆபத்தான பதிவுகளுக்குத் தடை

குறிப்பாக ஆபத்தான பதிவுகள், தேர்தல் வெளியீடுகள், தனி நபர் ரகசியங்கள்பாதுகாக்கப்படுவதில்அரசின் கூடுதல் கண்கானிப்பும் கட்டுப்பாடும் தேவைப்படுகிறது. இணைய தளங்கள் மூலம்ச மூகத்திற்கு ஏற்படும் தீங்குகளைக் தடுப்பதோடு, பல பொதுமக்களும், தொழில் முனைவோரும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அவர்களின் உரிமைகளும் பாதுக்காக்கப்படுவதை உலக நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மார்க் ஜக்கர்பெர்க் எழுதியுள்ளார்.

பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகங்கள்

பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகங்கள்

இந்த மாதிரியான தேவையில்லாத வெளியீட்டினால் இணையதளத்தை மூலதாரமாக கொண்டுள்ள பல ஆன்லைன் தொழில்கள் இதனால் மிக பாதிப்படையும் என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து பாஸ்டன் குரூப் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இணையதளம் சார்ந்த பொருளாதாரம் 2020-ம் ஆண்டு இருமடங்காக வளர்ச்சியடைந்து 25 ஆயிரம் கோடி டாலாராக அதிகரிக்கும் என்று வெளியிட்டிருந்தது கவனிக்கதக்க விஷயமாகும்.

டிஜிட்டல் பேமன்ட்கள் அதிகரிக்கும்

டிஜிட்டல் பேமன்ட்கள் அதிகரிக்கும்

இதுபோன்ற ஆன்லைன் வர்த்தகத்தினால் டிஜிட்டல் பேமன்ட்கள் எனப்படும் ஆன்லைன் பணப்பரிமாற்றம் 30 - 40% அதிகரிக்கும் எனவும் அவ்வறிக்கை கூறியுள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் பலதுறைகள் வளர்ச்சியடையும் எனவும் அவ்வாய்வறிக்கை கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook head mark zukerberg asks government help to control internet content

Mark zukerberg wants common rules that all social media sites need to adhere to, enforced by third – party bodies, to control the harmful content, also stronger laws around world to be protect the integrity of elections.
Story first published: Monday, April 1, 2019, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X