களையிழந்த ஈரோடு ஜவுளி சந்தை.. எல்லாம் பறக்கும் படை படுத்தும் பாடு.. முடங்கிய வியாபாரிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈரோடு: நெருங்கி வரும் கோடைகால விடுமுறையை அடுத்து ஜவுளி விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் காத்திருந்த நிலையில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் ஈரோடு கனி ஜவுளி சந்தையில் விற்பனை மிகவும் குறைந்துள்ளது.

வரும் ஏப்ரல் 18 -ம்தேதி நடக்கவிருக்கும் தேர்தலையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்வது தடுக்கும் வகையில், ரூ. 50,000 மேல் சரியான ஆதாரம் இல்லாமல் கொண்டு சென்றால் அவை தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் பணத்தையும் அரசு கருவூலத்தில் வைக்கப்படும். இதனால் வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த பணத்தை தேர்தல் முடிந்து அரசு கருவூலத்தில் சரியான ஆதாரத்தை காட்டி பெற்றுக்கொள்ளலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.

 

39000 புள்ளிகளுக்கு கீழ் நிறைவடைந்த சென்செக்ஸ், தடுமாறிய நிஃப்டி..!

வியாபாரிகள் கோரிக்கை

வியாபாரிகள் கோரிக்கை

இது குறித்து ஈரோடு கனி மார்க்கெட்டில்உள்ள ஜவுளி சந்தை சங்கதலைவர் கே. செல்வராஜ் கூறுகையில், வியாபாரிகள் வங்கியில் பணம் கட்ட ரசிதுடன் எடுத்து சென்றால் கூட, இந்த பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கும் நிலை நிலவி வருகிறது. அதே பணம் எடுத்துவரும் போது உடனே வங்கி பாஸ் புக்கில் பதிவு செய்ய இயலதில்லை. இதனால் பணத்திற்கு கணக்கும் காட்ட முடிவதில்லை. ஆக வணிகர்கள் என்று ஆதாரத்தை காட்டினால் விட்டு விடவும் , இந்த வியாபாரிகளுக்கு 5 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதி வழங்கவேண்டும்.

பிசி சந்தை

பிசி சந்தை

கனி ஜவுளித் சந்தை திங்கள் கிழமை இரவு தொடங்கிசெவ்வாய் கிழமை மதியம் முடியும். மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை என மாநிலத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து வரும் மக்களும், வியாபாரிகளும், ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்டமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இங்குவந்து செல்கின்றனர்.

பறக்கும் படையால் பறிமுதல்
 

பறக்கும் படையால் பறிமுதல்

இங்கு வரும் வியாபாரிகள் கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலிருந்து இந்த கெடு பிடிகளால் சந்தை முடங்கியது. சந்தையில் இருப்பு வைக்கப்படும் ஜவுளி ராகங்களில் பாதியளவாவது விற்பனை இருக்கும். ஆனால் கடந்த சில வாரங்களாக 15 % மட்டுமே விற்பனை நடந்துள்ளது.

பருத்தி ஆடைகள் தேக்கம்

பருத்தி ஆடைகள் தேக்கம்

தற்போது கோடைகால ஆடைகள் (பருத்தி ஆடைகள் ) வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது70 % ஆடைகள் தேங்கியுள்ளன. இன்னும் தேர்தல் முடியும் வரை இதே நிலை நிலவி வந்தால் வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் மிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். மேலும் கோடை காலத்திற்கு இறக்குமதி செய்யப்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் தேங்கியுள்ள நிலைஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.

பேரம்பேசி வாங்கலாம்

பேரம்பேசி வாங்கலாம்

கனி ஜவுளி சந்தையை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து பேரம் பேசி வாங்கமுடியும். இது மொத்தமாக வாங்கும்போது மட்டுமே சாத்தியம். எனவே அரசு இது சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Erode Abdul kani textile market very dull for election rules

Being one of the biggest market in the state, both wholesale and retail trading of textile goods happen here. The weekly markets open every Monday night- its continues Tuesday afternoon session. Here over night trading a lot of tranactions in this market.
Story first published: Wednesday, April 3, 2019, 18:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more