புதுப் பொலிவுடன்... மெட்ரோ பொலிஸ் புதிய பங்கு வெளியீடு.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் முன்னணி நோய் கண்டறியும் (diagnostics) நிறுவனங்களில் ஒன்றாக மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம் உள்ளது. 2018 மார்ச்31 நிலவரப்படி வருவாயின் அடிப்படையில் இந்த நிறுவனம் மருத்துவ துறையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (Initial Public Offering - IPO) ஏப்ரல் 03, 2019-ல் ஆரம்பிக்க உள்ளது.

 

இந்த ஐ.பி.ஓமூலம் ரூ. 2 முகமதிப்பு (face value) கொண்ட மொத்தம் 1,36,85,095 பங்குகள்வெளியிடப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுஷில்கனுபாய் ஷா வசம் இருக்கும் 62,72,335 பங்குகளும், முதலீட்டு நிறுவனமான சி.ஏ. லோட்டஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் வசம் இருக்கும் 74,12,760 பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் நிறுவனப் பணியாளர்களுக்காக 3,00,000 பங்குகள் ஒதுக்கப்படுகிறது. இதனை கணக்கில் எடுத்துக்கொண்டால் நிகர பங்கு வெளியீடு 1,33,85,095 ஆக உள்ளது.

பங்குவெளியீடு!

பங்குவெளியீடு!

இந்தப் பங்கு வெளியீடு ஏப்ரல் 05, 2019 -ல் நிறைவு பெறுகிறது. பங்கின் வெளியீட்டு விலைப்பட்டை, பங்கு ஒன்றுக்கு ரூ.877 - 880 ஆகநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 17 பங்குகள் மற்றும் 17-ன் மடங்குகளில் விண்ணப்பிக்கவேண்டும். இந்தப் பங்குகள் பி.எஸ்.இ மற்றும்என்.எஸ்.இ பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. இந்த பங்கு விற்பனையின்நோக்கம், பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதின் லாபங்களை அடைவதாக இருக்கிறது. செபி விதிமுறையின் படி வெளியீடு! 1957 ஆம்ஆண்டின், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் விதிமுறைகள் செபிஅமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தப் பங்கு வெளியீடுநடக்கிறது. மேலும் ஏலமுறையில் பங்குவிற்பனை நடக்கிறது.

நீங்க 15000 ரூபாய் சம்பளம் வாங்குறீங்களா... அப்படின்னா உங்களுக்கு கண்டிப்பா பென்ஷன் கிடைக்கும் நீங்க 15000 ரூபாய் சம்பளம் வாங்குறீங்களா... அப்படின்னா உங்களுக்கு கண்டிப்பா பென்ஷன் கிடைக்கும்

15% நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு

15% நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு

மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும், 10 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு முதலீட்டாளர்களுக்கும் பங்குகள் ஒதுக்கப்படும். வெளியீட்டு விலை அல்லது அதற்கு அதிகமான விலையில் கேட்கப்பட்டால் இப்படி பங்குகள் ஒதுக்கப்படும்.

முதலீட்டாளர்களுக்கு
 

முதலீட்டாளர்களுக்கு

மொத்தப் பங்கு விற்பனையில் குறைந்தபட்சம் 75%, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். இதில், 60 சதவிகிதம் விருப்பத்தின் அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படலாம். இதில் மூன்றில் ஒரு பங்கு, பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லதுஅதை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

குறைவான விண்ணப்பங்கள்

குறைவான விண்ணப்பங்கள்

பங்குகள் கேட்டு குறைவாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அல்லது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு பங்குகளுக்கு ஒதுக்கப்படவில்லை என்றால் மீதமுள்ள பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் (ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு தவிர்த்து) 5% பங்குகள் மியூச்சுவல்ஃபண்ட் நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில் கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். குறைந்தபட்சம் 75% பங்குகள் கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்க முடியாவிட்டால், உடனடியாக முழு விண்ணப்பப் பணமும்திருப்பி அளிக்கப்படும்.

அஸ்பா முறையில்

அஸ்பா முறையில்

அனைத்து முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும் அஸ்பா முறையில் பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில்முடக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Metropolis healthcare IPO to open tomorrow

The subscription for initial public offering of diagnostics company Metropolis Healthcare will begin on April 3. It is the first public issue of current financial year 2019-20. Also It is an offer for sale by promoters, which will close on April 5.
Story first published: Wednesday, April 3, 2019, 9:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X