ஸ்விக்கி டெலிவரி பாய் கொடுத்த பாலியல் தொந்தரவு - 200 ரூபாய் கூப்பன் கொடுத்தால் போதுமா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சாப்பாடு பார்சல் கொண்டு வந்த ஸ்விக்கி டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்தப்பெண்ணுக்கு 200 ரூபாய் இலவச கூப்பன் கொடுத்து சரிக்கட்டியது தெரியவந்துள்ளது.

ஸ்விக்கி டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு கொடுத்ததை அடுத்து தான் ஆர்டர் செய்த உணவைக் கூட சாப்பிடாமல் குப்பைக் கூடையில் போட்டுவிட்டதாக அந்த பெண் ஃபேஸ்புக் வலைதளத்தில் குமுறி உள்ளார்.

ஸ்விக்கி நிறுவனம் புகாரில் சிக்கி இருப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை வரும் வழியிலேயே டெலிவரி பாய் சாப்பிட்ட நிகழ்வு சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டு சமையல் மறந்துபோச்சு
 

வீட்டு சமையல் மறந்துபோச்சு

வீட்டில் சமைத்து சாப்பிட சோம்பல் பட்டுக்கொண்டு, சற்று காற்றாட வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட்டு வந்தோம். சமீப காலமா அந்த பழக்கமும் சிறிது சிறிதாக மாறி மறைந்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு ஃபோன் போதும், உணவு வீடு தேடிவரும்

ஒரு ஃபோன் போதும், உணவு வீடு தேடிவரும்

வீட்டிலும் சமைக்கக்கூடாது, அதே சமயம் ஹோட்டல் உணவுதான் வேண்டும், ஆனால் ஹோட்டலுக்கும் போய் சாப்பிடக்கூடாது. அதற்கு என்ன செய்வது, இப்படி மாற்றி யோசித்ததன் விளைவுதான் நாம் இருக்கும் இடத்திற்கு நம்மை தேடிவரும் பார்சல் உணவுகள். நமக்கு தேவையான உணவுகளை ஒரு ஃபோன் மூலமோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தால் அடுத்த சில மணி நேரங்களில் டெலிவரி செய்த உணவு நம் வீட்டு காலிங் பெல்லை தட்டும்.

கதவை தட்டும் காமவெறியர்கள்

கதவை தட்டும் காமவெறியர்கள்

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு டெலிவரி செய்த உணவு நம் வீட்டு காலிங் பெல்லைத் தட்டும்போது கூடவே ஆபத்தும் சேர்த்து தட்டும் என்பது தெரியாது போல. இன்றைக்கு உணவு பார்சல்களை டெலிவரி செய்வதற்கு நாடு முழுவதும் பல உணவு சேவை நிறுவனங்கள் உள்ளன. இதில் முன்னணியில் உள்ளது ஸ்விக்கி (SWIGGY) டெலிவரி நிறுவனமாகும்.

ஸ்விக்கியும் சர்ச்சையும்
 

ஸ்விக்கியும் சர்ச்சையும்

வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவுகளை டெலிவரி செய்துவரும் முன்னணி ஆன்லைன் நிறுவமான ஸ்விக்கி, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவருவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மீது உணவு டெலிவரி செய்வதில் தான் புகார் கூறப்பட்டு வந்தது. தற்போது அதையும் தாண்டி ஸ்வக்கி ஊழியர்கள் சிக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

டேஞ்சர் டெலிவரி பாய்

டேஞ்சர் டெலிவரி பாய்

பெங்களூருவில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். கடந்த மார்ச் 28ஆம் தேதியன்று பெங்களூரூவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய மொபைல் ஃபோனில் ஆன்லைனில் ஸ்விக்கி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து காத்திருந்த சிறிது நேரத்தில் உணவை டெலிவரி செய்ய டெலிவரி பாய் வந்துள்ளார்.உணவு டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய் தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

குப்பைக் கூடையில்

குப்பைக் கூடையில்

நான் மீண்டும் என்ன என்ன என்று திரும்ப கேட்டபோது, என்னிடம் அவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான். நான் உடனே சுதாரித்துக்கொண்டு என் உணவை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கதவை சாத்தி தாளிட்டுவிட்டேன். அந்த அதிர்ச்சியில் அவன் கொண்டு வந்த உணவை சாப்பிட எனக்கு வெறுப்பாக இருந்தது. அதைத் தூக்கி குப்பையில் வீசிவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.

இந்தா பிடி 200 ரூபாய் கூப்பன்

இந்தா பிடி 200 ரூபாய் கூப்பன்

தனக்கு நேர்ந்த சம்பவத்தைப் பற்றி உடனடியாக ஃபேஸ்புக் வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். கூடவே, தனக்கு நேர்ந்த துயரத்தை சிறிது நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை (Customer Care Centre) மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கி புகார் தெரிவித்துள்ளார் அந்தப் பெண். முதலில், இந்தச் செயலுக்கு சாரி எனக் கூறி வருத்தம் தெரிவித்த ஸ்விக்கி நிறுவன கஸ்டமர் கேர் தரப்பு, சிறிது நேரத்தில் நடந்த சம்பவத்துக்கு இழப்பீடாக 200 ரூபாய் கூப்பன் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஸ்விக்கி மன்னிப்பு

ஸ்விக்கி மன்னிப்பு

ஸ்விக்கி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இந்த செயலால், அந்தப் பெண் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளானார். அந்த டெலிவரி பாய்க்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தனக்கு நேர்ந்த சம்பவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ஸ்விக்கி நிறுவனம், அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

முழு ஒத்துழைப்புக்கு தயார்

முழு ஒத்துழைப்புக்கு தயார்

பாலியல் புகார் தொடர்பாக விளக்கமளித்த ஸ்விக்கி செய்தித் தொடர்பாளர், வாடிக்கையாளர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். இதில் நாங்கள் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளப்போவதில்லை. நாங்கள் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசியுள்ளோம். தேவைப்பட்டால் இது பற்றிய விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பும் அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: swiggy ஸ்விக்கி
English summary

Swiggy delivery boy abused to lonely woman in Bangaluru

The food delivery aggregator Swiggy has landed itself in trouble once again. This time it is more than just food or hygiene issues. The delivery guy arrived with the food parcel, he started abusing the lonely woman and also sought sexual favors, .
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more