பட்டையை கிளப்பிய இந்திய சந்தைகள்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்..வர்த்தக ஒப்பந்தம் வரலாம் என யூகமோ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வர்த்தக வாரத்தின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 5, 2019) பங்கு சந்தையின் சென்செக்ஸ் 177 புள்ளிகள் அதிகரித்து 38862 ஆக முடிவடைந்துள்ளது. இதுவே மும்பை பங்கு சந்தையின் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 11665 ஆக முடிவடைந்ததுள்ளது.

அதேசமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69.28 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 1500 பங்குகளின் விலை அதிகரித்தும், 1049 பங்குகளின் விலை குறைந்தும் , 165 பங்குகளின் விலை மாற்றமில்லாமலும் முடிவடைந்தது.

டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், எஸ்ஸார் மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் வேதாந்தா உள்ளிட்ட முக்கிய பங்குகள் நிஃப்டியில் லாபத்தில் முடிவடைந்தன. அதேசமயம் பவர் கிரிட் கார்ப்பரேஷன், பிரிட்டான்யா இண்டஸ்டீரிஸ். எஸ்.பி.ஐ, ஹீரோ மோட்டோகார்ப், ஜீ எண்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்தில் முடிவடைந்தன.

எப்.எம்.சி.ஜி மற்றும் பி.எஸ்.யு பேங்க் ஆகியவை விலை இறங்கும் என்ற கணிப்பிலேயே விலை குறைந்தே வர்த்தகமானது. அதேசமயம் ஐ.டி, உலோகம், இன்ஃப்ரா, ஆற்றல், ஆட்டோ துறை பங்குகள் விலை உயர்ந்தும் காணப்பட்டன.

எம்பியானதும் வரும் சம்பளத்தில் கடனை அடைப்பேன்..! தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கடன் கொடுங்கள்..! எம்பியானதும் வரும் சம்பளத்தில் கடனை அடைப்பேன்..! தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் கடன் கொடுங்கள்..!

மோடி ஆட்சிக்கு வரலாம்

மோடி ஆட்சிக்கு வரலாம்

மேலும் இந்தியாவில் நடக்கவிருக்கும் தேர்தல்களையடுத்து மத்தியில் ஏற்படும் ஆட்சி நல்லதொரு ஆட்சியாக இருக்கும் என்ற கணிப்பிலேயே ஆசிய நாடுகளின் முதலீடு அதிகரித்தது. அதுவும் கடந்த மார்ச் மாதத்தில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் 4.96பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆசிய பங்குகளை வாங்கியுள்ளனர் . மேலும் பங்கு சந்தைகளிலிருந்து பெறப்பட்ட தகவலின் படி தெங்கொரியா, தைவான், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மற்றும் வியட்னாம் ஆகிய சந்தைகளில் இருந்தும் காட்டினர்.

கருத்து கணிப்பில் மோடி

கருத்து கணிப்பில் மோடி

கடந்த மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் யார் ஜெயிப்பார் என்ற கருத்து கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியே ஆட்சிக்கு வருவார் என்ற கணிப்பிலேயே சந்தைகள் முன்னேறி வருகின்றன. இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கடந்த 2012 க்கு பிறகு 4.89 பில்லியன் இந்திய சந்தைகளுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இதனால் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 7.7 % அதிகரித்துள்ளன.

ரெபோ வட்டி விகிதம் குறையலாம்
 

ரெபோ வட்டி விகிதம் குறையலாம்

இந்தியா மட்டுமல்லாமல், உலக பொருளாதார சூழ் நிலையும் வளர்ந்து வரும் நிலையில் ரிசர்வ் வங்க்கியின் ரெபோ ரேட் ஏற்கனவே குறைந்தளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த விகிதம் குறையும் என்று வர்த்தகர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் ஒரு காரணமாகவே கருதப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதம் இன்னும் 3% குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சீனா- அமெரிக்கா ஒப்பந்தம்

சீனா- அமெரிக்கா ஒப்பந்தம்

அமெரிக்கா - சீனாவுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகினால் உலக பொருளாதாரம் முன்னேறும் என்றும், இதனால் ரெபோ விகிதம் குறைய வாய்ப்புகள் உள்ளது என்ற கருத்துகள் வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில் இன்று முழுவதும் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்பட்டன. அதிலும் குறிப்பாக இன்று அமெரிக்க வெளிட்ட அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது

வல்லுனர்களின் கருத்து

வல்லுனர்களின் கருத்து

உலக அளவில் பொருளாதாரத்தில் சாதகமான நிலையே நிலவி வருகிறது. சீனா - அமெரிக்கா ஒப்பந்தம் இது வரை ஒரு சாதகமான நிலையிலேயே செல்கிறது. குறிப்பாக சீனாவில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதால் உலோகம் தொடர்பான தொழில் நல்ல வளர்ச்சியடையும் என்று எதிர்பார்கப்படுகிறது. மேலும் டாலரின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. இதனால் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடையலாம். ஆக நீண்ட கால போக்கில் சந்தைகள் மேலே செல்ல வாய்ப்பிருந்தாலும்., வரும் வாரத்தில் சந்தையின் போக்கு பல நிறுவனங்களின் நாண்காவது காலாண்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனை பொறுத்தே இந்திய பங்கு சந்தையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. அதே சமயம் இந்திய ரூபாயின் மதிப்பும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SENSEX, NIFTY gain..sensex rises 177 points on trade deal hope

Indian stock market kept its head above all throughout as traders bet on another intrest rate cut by RBI, and hopes of a trade deal between the US and CHINA
Story first published: Friday, April 5, 2019, 18:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X