பாகிஸ்தானியர்கள் வசம் இருந்த விப்ரோ பங்குகள் விற்பனை – மத்திய அரசுக்கு ரூ. 1100 கோடி லாபம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் வைத்திருந்த விப்ரோ பங்குகளை மத்திய அரசு விற்று 1100 கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது.

 

விப்ரோ பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் இது வரையிலும் எதிரிகளின் வசம் இருந்த இந்தியாவின் சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் சொத்துக்கள் எதிரி நாடுகளின் கைவசம் செல்வதை தவிர்க்கவே டிமேட் என்னும் பேப்பர் பங்குகளாக மாற்றும் திட்டமாகும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 2024-25ஆம் நிதியாண்டில் ஒற்றை இலக்கமாக குறையும் -

  சொத்துக்களின் மதிப்பு

சொத்துக்களின் மதிப்பு

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நாட்டை விட்டு வெளியேறியவர்கள், இந்தியா சீனா போர் நடந்தபோது நாட்டை விட்டு எதிரி நாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள் என இந்தியாவில் விட்டுச் சென்ற சொத்துக்களின் இன்றைய மதிப்பு சுமார் 1லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது.

 ரூ. 3000 கோடி சொத்துக்கள்

ரூ. 3000 கோடி சொத்துக்கள்

முதல் கட்டமாக எதிரிகளின் வசம் இருந்த சொத்துக்கள் எவை எவை என்று கணக்கிடப்பட்டு அவற்றை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதில் பங்குகள் வடிவத்தில் சுமார் ரூ.3000 கோடி சொத்துக்களும், நிலம் மற்றும் கட்டிடம் என அசையாச் சொத்துக்களாக சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளதாக கண்டிறியப்பட்டன. இவற்றை விற்று அரசின் வசம் சேர்க்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

நாட்டை விட்டு வெளியேறியவர்கள்
 

நாட்டை விட்டு வெளியேறியவர்கள்

இரண்டாவதாக நாட்டை விட்டு வெளியேறியவர்களின் வாரிசுகள் எனக் கூறிக்கொண்டு இந்தியாவில் உள்ள சொத்துக்களுக்கு யாரும் உரிமை கோர முடியாதபடி மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு எதிரி சொத்துக்கள் சட்டத்தில் (Enemy Property Act 1968) திருத்தம் கொண்டு வந்தது.

உயர் மட்டக்குழு விவாதம்

உயர் மட்டக்குழு விவாதம்

எதிரிகளின் சொத்துக்களை விற்பதற்காக மத்திய அரசின் கேபினட் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட முடிவெடுத்து உத்தரவிட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் உயர்மட்டக் குழு கூடி விவாதித்து எதிரி சொத்துக்களை விற்று அவற்றை வேறு வகையில் முதலீடு செய்ய திட்டமிட்டது.

மார்ச் 31 வரை கெடு

மார்ச் 31 வரை கெடு

மூன்றாவதாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள்களின் பேப்பர்களாக உள்ள பங்குகளை டிமேட் என்னும் மின்னணு கணக்குகளாக மாற்ற கடந்த மார்ச் 31ஆம தேதி வரை கெடு விதித்தது. அதற்கு பிறகு பேப்பரில் உள்ள பங்கு முதலீடுகளை விற்க முடியாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. டிமேட்டாக மாற்றாத பங்குகள் எதிரிகளின் சொத்தாக கணக்கிடப்பட்டு அவற்றை விற்கும் முடிவிற்கு மத்திய அரசு வந்தது.

 6.5 கோடி பங்குகள்

6.5 கோடி பங்குகள்

எதிரிகளின் சொத்தாக கணக்கிடப்பட்டதில் 996 நிறுவனங்களில் 20323 பங்குதாரர்கள் 6.5 கோடி பங்குகளை வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. எதிரிகளின் சொத்தாக கணக்கிடப்பட்ட பங்கு முதலீடுகளில் தகவல் தொழில் நுட்பத்துறையில் நாட்டின் 3ஆவது மிகப் பெரிய விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 2 பாகிஸ்தானியர்களின் வசம் இருந்த 4.43 கோடி பங்குககளை விற்க முடிவெடுத்தது.

ரூ.1150 கோடிக்கு விற்பனை

ரூ.1150 கோடிக்கு விற்பனை

பாகிஸ்தானியர்களின் வசம் இருந்த 4.43 கோடி விப்ரோ பங்குகளை 258.90 ரூபாய் வீதம் சுமார் ரூ.1150 கோடிக்கு மத்திய அரசு விற்கப் போவதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு விற்கும் விப்ரோ பங்குகளில் 3.90 ககோடி பங்குகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் வாங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Central Govt sold Rs.1100 Crore worth of Enemy shares in Wipro

The central government sold over Rs 1,100 crore worth of Wipro shares on Thursday. The shares belonging to Pakistani nationals, were seized by India under the Enemy Property Act passed in 1968.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X