ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த முதலீடு..! வருத்தத்தில் AMFI..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த 2018 - 19 நிதியாண்டில் 1.11 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 35 சதவிகிதம் குறைவு எனச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறது AMFI - Association of Mutual Funds in India.

இந்த 1.11 லட்சம் கோடி என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செய்திருக்கும் முதலீட்டுத் தொகையை விட அதிகம் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.

2018 - 19 நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தைகள் இத்தனை ஏற்ற இறக்கங்களோடு வாலிட்டைலாக இருந்த போதும், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் மேகம் சூழ்ந்து கொண்டிருக்கின்ற போதும் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்த தங்கள் பணத்தை வெளியே எடுக்காமல் இருந்ததே பெரிய விஷயம் எனப் பாராட்டுகிறார்கள்.

விண்ணைத் தொட்ட தங்கம் விலை..! விண்ணைத் தொட்ட தங்கம் விலை..!

2018 - 19 தான் பெஸ்ட்

2018 - 19 தான் பெஸ்ட்

2017 - 18 நிதி ஆண்டில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் 1.71 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகவும் சொல்கிறது AMFI - Association of Mutual Funds in India. 2017 - 18-ல் சந்தை ஒரு நல்ல ஏற்றம் கண்டு கொண்டிருந்த காரணத்தால் தான் முதலீட்டாளர்கள் குவிந்து கொண்டிருந்தார்களாம். 2017 - 18-ல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததை விட 2018-19-ல் முதலீடு செய்ததையே பெரிய விஷயமாகப் பார்க்கிறார்கள்.

வரவு தான்

வரவு தான்

இந்த வருத்தத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு இது ஒரு நிகர இன் ஃப்ளோ தானாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நெட் இன்ஃப்ளோவாகவே இருக்கிறதாம்.

இன்று வரை

இன்று வரை

2013 - 14 நிதி ஆண்டில் நிகர அவுட் ஃப்ளோ (Net Outflow)வாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து 9,269 கோடி ரூபாய் வெளியேறி இருக்கிறது. அதன் பின் 2014 - 15 நிதி ஆண்டில் 71,029 கோடி ரூபாய் நிகர வரவு (Net Inflow), 2015 - 16 நிதி ஆண்டில் 74,024 கோடி ரூபாய் நிகர வரவு (Net Inflow), 2016 - 17 நிதி ஆண்டில் 70,367 கோடி ரூபாய் நிகர வரவு (Net Inflow)என ஒரு மாதிரி க்ரிப்பாக போய்க் கொண்டிருந்த இடத்தில் தான் 2017 - 18-ல் 1.71 லட்சம் கோடி ரூபாய் நிகர வரவு (Net Inflow)என விண்ணைத் தொட்டது.

Asset Under Management

Asset Under Management

இதுவரை ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இதுவரை மார்ச் 2019 நிலவரப்படி 7.73 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 2018 நிலவரப்படி இதே ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் 7.50 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு Asset Under Management 3% அதிகரித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

equity mutual fund investments inflow is 1.11 lakh crore rupees

equity mutual fund investments inflow is 1.11 lakh crore rupees
Story first published: Monday, April 8, 2019, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X