ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் எச்டிஎப்சி வங்கி வட்டி விகிதம் குறைப்பு - வீடு, வாகனக்கடன் குறையும்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2019-2020 நிதி ஆண்டின் முதல் நாணய கொள்கைக் கூட்ட அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எச்டிஎஃப்சி வங்கியில் 8.75 சதவீதமாக இருந்த வந்த MCLR வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம் குறைத்து 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது.

 

நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கைக் கூட்ட அறிவிப்பு 2019 ஏப்ரல் 4ஆம் தேதி வெளியானது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து 6 சதவிகதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவிகிதமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கி நிறுவனங்கள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் எச்டிஎப்சி வங்கி வட்டி விகிதம் குறைப்பு - வீடு, வாகனக்கடன் குறையும்

ஐசிஐசிஐ வங்கி MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவிகிதம் குறைத்து ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எச்டிஎஃப்சி வங்கியில் 8.75 சதவிகிதமாக இருந்த வந்த MCLR வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம் குறைத்து 8.65 சதவிகிதமாக அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 0.25 சதவிகிதம் மற்றும் ஏப்ரல் மாதம் 0.25 சதவீதம் என அர்பிஐ தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகித குறைப்பை அடுத்து எச்டிஎஃப்சி வங்கி MCLR வட்டி விகிதத்தை ஏப்ரல் 2018 முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.

எச்எடிஎஃப்சி வங்கி எடுத்துள்ள இந்த முடிவால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் திட்டங்கள் மீதான ஈஎம்ஐ குறையும். புதிதாகக் கடன் பெறுபவர்கள் என்றில்லாமல் மிதவை கடன் திட்டங்களின் கீழ் பெற்ற பழைய கடனுக்கும் ஈஎம்ஐ குறையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC Bank cuts rates home loans auto loans set to become cheaper

Following the Reserve Bank of India's rate cut move, HDFC Bank has slashed its Marginal Cost of Lending Rate (MCLR) with effect from April 8. The move will make the home loan, auto loan and personal loan from the bank cheaper. Not only the new loans but also the existing loans will become cheaper. Thus, the EMIs will go down too.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X