எச்சரிக்கை மோசடியில் ஈடுபடும் வெளி நாட்டு நிறுவனங்கள்..பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மோசடிக்கு மேல் மோசடி,என்னதான் பட்டாலும் சில மக்கள் இன்னும் ஏமாறத்தான் செய்கிறார்கள். அதுவும் இந்தியாவில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பிட்காயின் மூலம் நடைபெறும் வர்த்தகத்தை தடை செய்திருந்தாலும், அதனால் தொடர்ந்து பல மக்கள் இன்றளவிலும் ஏமாந்து தான் வருகின்றனர்.

இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுதான் ஜாக்கப் பர்ரெல் காம்போஸ் 22 வயதான இவர் ரோசாரிடோவைச் சேர்ந்த, மெக்ஸிகோவின் குடியுரிமையும் பெற்ற இவர் பிட்காயின் டீலர் ஆவார். இவர் இந்த பிட்காயின் வர்த்தகத்தின் மூலமாக அனுமதியில்லாத வர்த்தகத்தின் மூலம் பணபரிமாற்றம் செயல்பட்டதற்காக அமெரிக்க நீதிமன்றம் இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

அமெரிக்காவில் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் இந்த பிட்காயின் வர்த்தகத்தின் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதற்காக ஜாக்கப்கிற்கு 2 வருடம் சிறை தண்டனையோடு 2 வருடம் சிறையில் வேலை செய்ய வேண்டும் எனவும், அதற்கு இழப்பீடாக சுமார் $8,23,357 டாலர்களையும் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தது. இந்த மோசடியின் மூலம் 1000 வாடிக்கையாளர்கள் தங்களது லட்சகணக்கான டாலர்களை இழந்துள்ளனர். இதன் மூலம் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..? எந்த நாடு அது..? 8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..? எந்த நாடு அது..?

சட்டதிட்டங்களுக்கு ஏற்ப விசாரணை

சட்டதிட்டங்களுக்கு ஏற்ப விசாரணை

அமெரிக்க அரசாங்கத்தின் பணமோசடி சட்டங்களுக்கு இணங்க மறுக்காத அனைத்து வெள்ளை காலர் குற்றவாளிகளையும், அவர்களுக்கு உதவி புரியும் அரசாங்கத்தையும் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களையும் விசாரித்து தகுதியான தண்டனை வாங்கி தரப்படும் என்றும், மேலும் இந்த குற்றவாளியை கண்டு விசாரித்து கண்டுபிடித்த வக்கீல் ராபர்டை அமெரிக்க அரசு பாராட்டியும் உள்ளது.

சட்ட விரோதமாக செயல்படும் நிறுவனங்கள்

சட்ட விரோதமாக செயல்படும் நிறுவனங்கள்

சட்ட விரோதமாக செய்யப்படும் இந்த மாதிரியான பிட்காயின் போன்ற வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படும் பணம், சட்ட விரோதமாக, அனுமதியில்லாமல் உரிமம் அல்லாத நிறுவனங்களுக்கு பணம்செலுத்துதல், மற்ற வகையான பண பரிவர்த்தனை செய்யும் வர்த்தகத்தைப் போலவே பணபரிமாற்றம் செய்கின்றனர். இது குறித்து விசாரிக்கவும் டேவிட் ஷா, சாண்டியாகோவில் உள்னாட்டு பாதுகாப்பு விசாரணைக் குழு பொறுப்பில் உள்ளார். இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை வருமுன் தடுக்கவே இந்த குழு செயல்படும் என்று கூறியுள்ளார் டேவிட்.

சிறைக்கு சென்ற நாள்முதல் ஜாமீன் இல்லை

சிறைக்கு சென்ற நாள்முதல் ஜாமீன் இல்லை

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜாக்கப் இன்றுவரை ஃபெயிலில் விட வில்லை என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அக்டோபர் மாதம் குற்றவாளி என வாதிட்டார் எனினும், பிட்காயின் எக்ஸேஞ்ச் முறையாக பதிவு செய்யப்படாமல் வர்த்தகம் செய்தது மற்றும் பதிவு செய்யாமலேயே பணபரிவர்த்தனை செய்தது குற்றமே என்று, அமெரிக்காவின் பைனான்சியல் குற்றங்கள் அமலாக்க நெட்வொர்க், அமெரிக்கா அட்டர்னி அலுவலகம் போன்ற அலுவலகங்கள் இவர் பண பரிமாற்றத்தில் சரியானதொரு முறையை பின்பற்றவில்லை. இது முழுக்க முழுக்க மோசடியே என்றும் கூறியுள்ளன.

மனிகிராம்,ஏடிஎம் டெபசிட் போன்ற பணபரிமாற்றம்

மனிகிராம்,ஏடிஎம் டெபசிட் போன்ற பணபரிமாற்றம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நாட்டில் கட்டுபாடற்ற பண பரிமாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், இவர் ஏடிஎம்களில் டெபாசிட் செய்வது, மணி கிராம் வழியாக பணத்தை செலுத்துதல் போன்ற முறைகளை இந்த பிட்காயின் வியாபாரியான ஜாக்கப் ஏற்றுக் கொண்டார். இதற்காக இந்த ஜாக்கப் வாடிக்கையாளர்களிடம் மெயில் மற்றும் மெசேஜ் மூலமாக மட்டுமே பேசி வந்துள்ளார். மேலும் இவ்வாறு முதலீடு செய்வதை மற்றவருக்கும் அறிமுகப்படுத்தினால் கமிஷனாக மற்ற நிறுவனங்களை விட இங்கு கமிஷன் என அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதோடு மட்டும் அல்லாது localbitcoins.com என தனது இனையள முகவரியும் அனைவருக்கும் கொடுத்துள்ளார். இதன் மூலம் பல வாறு விளம்பரமும் கொடுத்து வந்துள்ளார்.

இந்தியாவிலும் நடந்துள்ளது

இந்தியாவிலும் நடந்துள்ளது

இந்தியாவில் கடந்த ஆண்டு அதுவும் குறிப்பாக பெங்களுரில் ஹரீஷ் என்பவர் இதே போல வர்த்தகம் செய்ததையடுத்தடுத்து சிறையி அடைக்கப்பட்டார். இதன்பின்னர் இவரிடம் இருந்த ரொக்க பணம், கிரெடிட் கார்டு அட்டைகள் மேலும் இவருடைய அலுவலகத்துக்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

விழிப்புணர்வோடு இருங்கள்

விழிப்புணர்வோடு இருங்கள்

ஆக மக்கள் எந்த ஒரு வெளினாட்டு நிறுவனமோ அல்லது உள் நாட்டு நிதி நிறுவனமோ ஒரு வர்த்தகத்திலோ அல்லது தொழிலோ முதலீடு செய்யும் போது அதற்கு சரியான ஆதாரத்தோடும், இது சரியான தொழில்தானா, இதற்கு இந்தியாவில் அனுமதி உண்டா? அப்படியே இதில் தெரியாமல் முதலீடு செய்திருந்தாலும், சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாமல் போகும் சூழ்னிலை போன்ற காரணங்களால் மக்கள் இன்றளவிலும் ஏமாந்து வருகின்றனர் என்பதற்கு இந்த செய்தியும் ஒரு எடுத்துக் காட்டே. ஆக மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதே இதை தடுப்பதற்கான ஒரே வழி என்கிறார்கள் வல்லுனர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

22-year-old sentenced for 2 years for operating unlicensed bitcoin exchange

Jacob Burrell Campos, 22-year-old bitcoin dealer and resident of Rosarito, Mexico, has been recently sentenced for two years by the US District Judge for operating an unlicensed money transmitting business through a bitcoin exchange
Story first published: Wednesday, April 10, 2019, 18:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X