கிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை.. தொடர் ஏற்றத்தினால் மக்கள் கவலை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொடர்ந்து விலைக் ஏறிக் கொண்டே செல்லும் தங்கத்தின் விலை, ஆபரணத் தங்க்கத்தின் விலையும் ஏறிக் கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது என்ற யூகத்தின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாயுள்ளது.

 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்சனையால் அமெரிக்கா டாலரின் மதிப்பு அழுத்தில் உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. அதேசமயம் சர்வதேச மானிட்டரி ஃபண்ட் பாலிசியில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள வரியை ஐரோப்பிய யூனியன் உற்பத்தி பொருட்களுக்கு விதித்தது. மேலும் அட்லாண்டிக் விமான மானியத்தியில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனை, அதேசமயம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வர்த்தக பிரச்சனை இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போரை உருவாக்கியுள்ளது.

இந்திய ஸ்டார்ட் அப் தலைவர்களின் சராசரி வயது 31...! இளமை பொங்கும் இந்தியா..!

பிரிட்டன் பொருளாதார பின்னடைவை சந்திக்கும்

பிரிட்டன் பொருளாதார பின்னடைவை சந்திக்கும்

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறினால் 2021 ஆம் ஆண்டில் 2- 3 வருட கால சாதரண வளர்ச்சியை பிரிட்டன் இழக்க நேரிடலாம் இண்டர் நேஷனல் மானிட்டரி ஃபண்டு எச்சரித்துள்ளது. இதனால் பிரிட்டன் பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய தலைவர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரசாவுக்கு ஒரு வளார்ச்சி கட்டுபாட்டை ஒரு கோரிக்கையை அளிப்பார்கள். இதன் மூலம் பிரிட்டனை மிக மேலும் அழுத்ததிற்கு உண்டாக்க, பிரிட்டீஸ் மூலமாக ஐரோப்பிய நாடுகள் தங்களது அழுத்தத்தை கொடுக்கலாம். இதனால் பிரிட்டன் நீண்ட கால ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டுமென்ற கட்டாயதிற்கு ஆளாக்கப்படுகின்றது.

8டன்  தங்கத்தை வெளியே எடுத்த வெனிசுலா

8டன் தங்கத்தை வெளியே எடுத்த வெனிசுலா

கடந்த வாரம் மத்திய வங்கியிலிருந்து 8 டன் தங்கத்தை வெனிசுலா வெளியே எடுத்துள்ளது. இது வரும் பொருளாதார சூல் நிலைகளை சமன்படுத்த இந்த தங்கத்தை விற்க முற்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதன் எதிரொலி தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என்ற அச்சமும் நிலவிவருகிறது. வெனிசுலா இந்த 8 டன் தங்கத்தை விற்க முற்பட்டால் விலை இறங்கலாம் என்ற கருத்தே அதிக விலையேற்றத்தை தடுத்துள்ளது.

இந்திய எம்.சி.எக்ஸ் வர்த்தகத்தில் தங்கம்
 

இந்திய எம்.சி.எக்ஸ் வர்த்தகத்தில் தங்கம்

இந்திய கமாடிடி வர்த்தகத்தை பொறுத்தவரை தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ளதையடுத்து ஃபுராபீட் புக்கிங்க் காரணத்தால் விலை சற்றே குறையலாம். மேலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலினால் இந்திய ரூபாயிலும் பெரிதாக மாற்றம் இல்லை. அதேசமயம் அமெரிக்க பொருளாதாரமும் வளர்ந்து வரும் சூழ்னிலையில் தங்கத்தில் விலையில் பெரிய மாற்றமிருக்காது. உலக வர்த்தகத்தில் மற்ற நாடுகளின் பங்கு சந்தைகளும், டாலரின் அழுத்தத்தால் இறக்குமுகமாகவே காணப்படுகின்றன. இதனால் சார்ட் டெர்ம் பீரியடில் விலை சற்று குறைந்தாலும், அதுவே நீண்ட கால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

வெள்ளி விலை அதிகரிக்கலாம்

வெள்ளி விலை அதிகரிக்கலாம்

சர்வதேச வர்த்தகத்தில் வெள்ளியின் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. காரணம் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படும் என்ற அறிக்கையிலிருந்தே நாம் அறிய முடிகிறது. தொழிற்துறையில் இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் பொருளாதாரம் அதிகரிக்கும் போது, அதன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். தொழிற்துறையில் மெஷிங்களில் உபயோகப்படுத்தும் நட்டு போல்டு போன்றவை வெள்ளியிலேயே செய்யப்படுகின்றன. இதன் காரணமாக வெள்ளியின் விலை அதிகரித்தே வர்த்தகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின்  டிமாண்ட் குறைவு

ஆபரணத் தங்கத்தின் டிமாண்ட் குறைவு

கடந்த இரண்டு வாராங்களாகவே தொடர்ந்து விலை அதிகரித்து வரும் ஆபரணத் தங்க்கத்தின் விலை வரும் வாரத்திலும் விலை அதிகரித்தே வர்த்தகமாகலாம். சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதாவது 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3333, இதுவே 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.3056 ஆகவும் உள்ளது. கடந்த வாரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,100 ஆக இருந்த விலை இன்று (ஏப்ரல் 10,2019) ரூ.30,560 ஆக அதிகரித்துள்ளது. வரும் வாரத்திலும் கூட தேவை ஆபரனத் தங்க்கத்தின் தேவை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலைபெரிய மாற்றம் இருக்காது என தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold தங்கம்
English summary

Gold trade near two high on US - EU trade tension

Gold price droped glopal weak trend. also Gold prices fell in the futures trade on Wednesday as demand by jewellers at the spot market declined amid weak global sentiment.
Story first published: Wednesday, April 10, 2019, 12:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X