சென்னை ஐ.ஐ.டி தான் பர்ஸ்ட்..இந்திய கல்வி நிறுவனங்களில் முதலிடம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவிலேயே கல்விதுறையில் சிறந்த நிறுவனமாக சென்னை ஐ ஐ டி கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக மனித வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெங்களுரூ இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இரண்டாவது இடத்தையும், டெல்லி ஐ.ஐ.டி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வெனில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை ஐ.ஐ.டி நிறுவனமே பிடித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் 7-வது இடத்தையும், பனாரஸ் பல்கலைக் கழகம் 10- வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் மிக சிறந்த விஷயம் என்னவெனில் நாட்டிலேயே சிறந்த இன் ஜினியரிங் கல்வி நிறுவங்களில் சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் முதலிடம் வகிப்பது தமிழகத்திற்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது.

நேரடி வரி வசூல் ரூ50,000 கோடி குறையும்.. ஜி.எஸ்.டியும் குறையும்..மத்திய அரசு கதறல்

அண்ணா பல்கழைக் கழகத்திற்கு 4-வது இடம்

அண்ணா பல்கழைக் கழகத்திற்கு 4-வது இடம்

டெல்லி, மும்பை ஐ.ஐ.டி நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும், சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 4-வது இடத்திலும, திருச்சி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி 9-வது இடத்தையும் பெற்றுள்ளன.

மேலாண்மை கல்வியில் ஐ.ஐ.எம் முதலிடம்

மேலாண்மை கல்வியில் ஐ.ஐ.எம் முதலிடம்

அதேசமயம் சிறந்த கல்லூரிகள் பட்டியலில், டெல்லி பல்கலைக் கழகத்தின் மிராண்டா ஹவுஸ் நாட்டிலேயே முதலிடத்தில் பெற்றுள்ளது. இந்த இடத்தில் சென்னை பிரசிடென்சி கல்லூரி கல்லூரிக்கு மூன்றாவது இடமும், டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரிக்கு 4-வது இடமும் கிடைத்துள்ளது.

மேலாண்மை கல்வியில் ஐ.ஐ.எம் முதலிடம்
 

மேலாண்மை கல்வியில் ஐ.ஐ.எம் முதலிடம்

மேலாண்மை கல்வி நிறுவனங்களில் பெங்களூரு ஐ.ஐ.எம் நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது.பார்மஸி கல்லூரி வரிசையில் ஜாமியா ஹாம்டர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது. டெல்லி ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் நிறுவனம் மருத்துவக் கல்லூரியில் முதலிடத்தை பெற்றுள்ளது.

சட்டக்கல்வியில் பெங்களூரு முதலிடம்

சட்டக்கல்வியில் பெங்களூரு முதலிடம்

சட்டக் கல்லூரிகளின் வரிசையில் பெங்களுரு சட்டக் கல்லூரி முதலிடத்தையும் பெற்றுள்ளது. கடந்த 2016- முதல் இந்த அறிக்கையை மத்திய மனித வளத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இதில் நாட்டில் உள்ள 3127 கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அடிப்படை காரணிகள்

அடிப்படை காரணிகள்

கற்பிக்கும் முறை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் திறமை, தொழில்முறை அனுபவங்கள் உள்ளிட்ட பல காரணிக்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: iit ஐ ஐ டி
English summary

IIT madras first ranking in higher education institutes

The indian institute of tecnology madras tops the list of higher education institutions relesed on last monday by the ministry of human resource development. at that same time 7 IITs are among the education ministry's overall national ranking.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X