புதிய பங்கு வெளியீடு.. பஜாஜ் எனர்ஜி அறிவிப்பு.. லலித் நிறுவனத்தில் உள்ள பங்குகளை வாங்க திட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : அனல் மின் உற்பத்தி மற்றும் நிதியுதவி போன்ற வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் நிறுவனம் தான் பஜாஜ் எனர்ஜி. இந்த நிறுவனம் லலித் நிறுவனத்திடம் உள்ள தனது பங்குகளை வாங்க சுமார் ரூ.5450 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

 

உத்திர பிரதேச மா நிலம், லகிம்புரி கேரியைச் சேர்ந்த நிறுவனம் லலித்புர் மின் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மொத்த அனல் மின் உற்பத்தி திறன் 2430 மெகாவாட் ஆகும்.

புதிய பங்கு வெளியீடு.. பஜாஜ் எனர்ஜி அறிவிப்பு.. லலித் நிறுவனத்தில் உள்ள பங்குகளை வாங்க திட்டம்

இந்த நிறுவனம் பங்கு வெளியீட்டு நிறுவனமான செபிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இதன் அனுமதி கிடைத்ததும், இதன் பங்கு நிறுவனமான லலித் பவர் நிறுவனத்தின் 1980 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது எனவும் இந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பஜாஜ் பவர் வென்சர்ஸ், பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர்ஸ் சேர்ந்த ரூ.4972 கோடி ரூபாய் மதிப்புள்ள, லலித் பவர் நிறுவனத்தில் 6.99 மில்லியன் பங்குகளை வாங்குவதற்கு இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட முடிவு செய்துள்ளது. இது போக மீதமுள்ள நிறுவனத்தின் பொது செலவினங்களுக்காக பயன்படுத்தப் படும்.

பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ இரு சந்தைகளிலும் பட்டியிடப்படும் எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் இப்பங்கு வெளியீட்டை எடல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், ஐஐ.எப்.எல் ஹோல்டிங்ஸ், எஸ்.பி.ஐ கேப்பிட்டல் ஆகியவை நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ipo
English summary

Bajaj energy plans to file IPO, Plan to raise Rs.5450 crore

Bajaj Energy along with lalitpur power generation company filed for an initial public offering with the market regulator sebi.
Story first published: Thursday, April 11, 2019, 9:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X