இந்திய நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு விகிதம் மார்ச்சில் 12 சதவிகிதம் அதிகரிப்பு - நாக்ரி டாட் காம் ஆய்வு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆள் சேர்ப்பு விகிதம் கடந்த மார்ச் மாதத்தில் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நாக்ரி டாட் காம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமே 38 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

நாக்ரி டாட் காம் நடத்திய ஆய்வில், சென்னையில் ஆள்சேர்ப்பு 13 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. முக்கியமாக தகவல் தொழில்நட்பத்துறையில் மற்றும் அது சார்ந்த துறைகளில் மட்டும் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நிர்வாக மட்டத்தில் 4 முதல் 7 வருட அனுபவள்ளவர்களுக்கான ஆள்சேர்ப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக தேசிய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளிவிவரம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்திய நகரங்களில் பெங்களூருவில் மட்டுமே கடந்த மார்ச் மாதத்தில் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இனி தர முடியாது..பணம் கொடுத்ததான் எரிபொருள்.. ஜெட் ஏர்வேர்ஸை நிராகரித்த ஐ.ஓ.சி

பிப்ரவரியில் அதிகரிப்பு

பிப்ரவரியில் அதிகரிப்பு

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் எல்லாம் குற்றம் சாட்டின. அதற்கு வலு சேர்ப்பது போல் தேசிய பொருளாதார கண்காணிப்பு மையமும் கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 7.2 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல்

வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிடாமல் இருப்பதற்கு வரவிருக்கும் லோக்சபா தேர்தலே காரணம் என்றும் எதிர்கட்சிகள் கூறிவந்தன. ஆனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததற்கு இன்றைய இளைஞர்களிடம் வேலை தேடும் ஆர்வம் குறைந்தவிட்டது தான் காரணம் என்று மற்றொரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தொலைந்துபோன ஆர்வம்

தொலைந்துபோன ஆர்வம்

இன்றைய இளைஞர்களிடம் வேலை தேடும் ஆர்வம் குறைந்ததற்கு காரணம் போட்டி மனப்பான்மையும் தன்னம்பிக்கையும் இல்லாததே என்று திங்க் டாங்க் நிறவனத்தின் தலைவர் மகேஷ வியாஸ் கூறியுள்ளார்.

மார்ச்சில் அதிகரிப்பு
 

மார்ச்சில் அதிகரிப்பு

கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக தேசிய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளிவிவரம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாக்ரி டாட் காம்

நாக்ரி டாட் காம்

பிரபல வேலைவாய்ப்பு தேடு தளமான நாக்ரி டாட் காம், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் கடந்த மார்ச் மாதத்தில், நிறுவனங்களின் ஆள்சேர்ப்பு சதவிகிதம் சுமார் 12 சதவிகிதம் கூடியுள்ளதாக தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் 38 சதவிகிதம்

தகவல் தொழில்நுட்பத்தில் 38 சதவிகிதம்

இந்திய தொழில் நிறுவனங்களில் கடந்த மார்ச் மாதத்தில் ஆள்சேர்ப்பு விகிதம் ஒட்டு மொத்தமாக அளவில் சுமார் 12 சதவிகிதம் கூடியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களில் தகுதி வாய்ந்த பணியாளர்களின் தேவை அதிகரித்ததே இதற்குக் காரணம். அந்த துறையில் ஆள்சேர்ப்பு அதிகபட்சமாக 38 சதவிகிதம் கூடியுள்ளது. அதற்கு அடுத்ததாக கல்வித் துறையில் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நிதித்துறையில் 15 சதவிகிதம் சரிவு

நிதித்துறையில் 15 சதவிகிதம் சரிவு

கட்டுமான துறையில் (பொறியியல்) ஆள்சேர்ப்பு சுமார் 13 சதவிகிதம் கூடியுள்ளது. அடுத்து மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாகத் துறையில் 13 சதவிகிதமும், காப்பீட்டுத் துறையில் சுமார் 6 சதவிகிதமும் ஆள்சேர்ப்பு அதிகரித்து இருக்கிறது. நுகர்பொருள் துறையில் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் அதே சமயம் வாகனத் துறையில் ஆள்சேர்ப்பு 8 சதவிகிதம் குறைந்துள்ளது. வங்கி மற்றும் நிதி சேவைச் துறைகளில் ஆள்சேர்ப்பு என்பது சுமார் 15 சதவிகிதம் சரிவடைந்து இருக்கிறது.

பெங்களூருவில் 49 சவிகிதம் கூடுதல்

பெங்களூருவில் 49 சவிகிதம் கூடுதல்

வேலை வாய்ப்பு பற்றிய ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பெரிய நகரங்களில், பெங்களூருவில் ஆள்சேர்ப்பு விகிதம் அதிகபட்சமாக 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அங்கு தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்களுக்கான தேவை 49 சதவிகிதம் அதிகரித்ததே இதற்கு காரணம். ஆனாலும், வாகன துறையில் ஆள்சேர்ப்பு 6 சதவிகிதம் குறைந்துள்ளது. வங்கி மற்றும் நிதி சேவை துறைகளில் ஆள்சேர்ப்பு 43 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

சென்னையில் 25 சதவிகிதம் அதிகரிப்பு

சென்னையில் 25 சதவிகிதம் அதிகரிப்பு

நாக்ரி டாட் காம் நடத்திய ஆய்வில், சென்னையில் ஆள்சேர்ப்பு 13 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. முக்கியமாக தகவல் தொழில்நட்பத்துறையில் மற்றும் அது சார்ந்த துறைகளில் மட்டும் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நிர்வாக மட்டத்தில் 4 முதல் 7 வருட அனுபவள்ளவர்களுக்கான ஆள்சேர்ப்பு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Employment Hiring Activities 12% increased in March

Hiring activities registered 12 percent growth this March mainly led by the IT industry that clocked a 38 percent growth, says a report. The Naukri Job Speak Index for March 2019, stood at 2,378, which is 12 percent higher in hiring activities from March 2018.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X