தில் இருந்தா ஒரு மணி நேரத்துக்கு ரூ.1000 ($15) கூலி கொடுங்க பார்ப்போம்..! அமேஸானின் சவால்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ் ரீட்டெயில் நிறுவனங்களை நடத்தும் முதலாளிகள் மற்றும் நிறுவனர்களுக்கு நேற்று (ஏப்ரல் 11, 2019) ஒரு ஓப்பன் சவால் விட்டு இருக்கிறார்.

அமேஸானில் வேலை பார்ப்பவர்களின் குறைந்தபட்ச கூலியாக ஒரு மணிநேரத்துக்கு 1000 ரூபாய் (15 அமெரிக்க டாலர்) என அதிகரித்திருக்கிறோம். இப்போது மற்ற ரீட்டெயில் போட்டியாளர்களும் எங்களைப் போல ஒரு மணிநேரத்துக்கான சம்பளத்தையோ கூலியையோ உயர்த்துங்களேன்..! என்பது தான் அந்தச் சவால்.

இந்த சவாலை ஏதோ பொது வெளியில் பேச வில்லை. ஜெஃப் பிசாஸ் அமேஸான் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த ஒரண்டையை இழுத்து இருக்கிறார். அதோடு ரீட்டெயில் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தைக் கொடுப்பதில்லை எனவும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.

அடடே கூகுள் பேலா தங்கமா..அக் ஷய திருதிக்கு வாங்கவா..வெயிலுக்கு அலைச்சல் இல்லாமல் தங்கம் வாங்கலாம். அடடே கூகுள் பேலா தங்கமா..அக் ஷய திருதிக்கு வாங்கவா..வெயிலுக்கு அலைச்சல் இல்லாமல் தங்கம் வாங்கலாம்.

வளர்த்து எடுங்கள்

வளர்த்து எடுங்கள்

கூலியை உயர்த்துங்கள். நாங்கள் ஒரு மணி நேரத்துக்கு 1000 ரூபாய் 15 அமெரிக்க டாலர் கொடுக்கிறோம். என்பதற்காக, எந்த ரீட்டெயில் நிறுவனமாவது தங்களின் ஊழியர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு 1070 ரூபாய் (16 அமெரிக்க டாலர்) கூலியாக கொடுங்கள். மீண்டும் நான் உயர்த்திவிட்டேன் நீங்கள் உயர்த்துங்கள் என எங்களை மீண்டும் உயர்த்தச் சொல்லிக் கேளுங்கள் என பகிரங்கமாக எழுதி இருக்கிறார். அனைத்து அமெரிக்க ரீட்டெயிலர்களும் மிரண்டு போய் இருக்கிறார்கள்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

அமேஸானின் இந்த சம்பள உயர்வால் அமெரிக்காவில் அமேஸான் நிறுவனத்தில் பணியாற்றும் 2.5 லட்சம் ஊழியர்களும், விடுமுறை நாட்களில் அமெரிக்காவில் பணியாற்றிய ஒரு லட்சம் தற்காலிக பணியாளர்களும் பயன் அடைந்திருக்கிறார்களாம். இதையும் பெருமையாக அடிக் கோடி போட்டு பெரிய எழுத்துக்களில் எழுதி இருக்கிறார் ஜெஃப் பிசாஸ்.

விமர்சனங்கள்
 

விமர்சனங்கள்

கடந்த நவம்பர் 2018-ல் இருந்து அமேஸானில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்ச கூலியாக 1000 ரூபாய் (15 அமெரிக்க டாலர்) என அறிவித்தார்கள். அதற்கு முன் அமேஸான் நிறுவனத்தின் ஊழியர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். மிக நீண்ட நேரத்து வேலை வாங்குகிறார்கள் என பொதுப்படையாக அமேஸான் நிறுவனம் மீது நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தான் ஒரு மணி நேரத்து 1000 ரூபாய் (15 அமெரிக்க டாலர்) என உயர்த்தினார் ஜெஃப் பிசாஸ்.

வேலை இல்லாத் திண்டாட்டம்

வேலை இல்லாத் திண்டாட்டம்

அமெரிக்காவில் வேலை இல்லாத் திண்டாட்டம் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கும் போது இந்த சம்பள உயர்வைக் கொடுத்திருக்கிறது அமேஸான். இன்னொரு பக்கம் ரீட்டெயிலர்களும், போக்குவரத்து டெலிவரி நிறுவனங்களும் விடுமுறை நாட்களில் தங்கள் வேலைகளை முடிக்க ஊழியர்களைத் தேடி அல்லாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அமேஸான் அசால்டாக தன் வேலைகளை முடித்து வியாபாரத்தை பெருக்கிக் கொண்டது.

Third party sales

Third party sales

கடந்த 2018-ம் ஆண்டில் அமேஸானில் நடந்த third party sales (அமேஸானுக்கு வரும் ஆர்டரை வேறு ஒரு நிறுவனத்துக்கு கொடுத்துவிடுவார்கள். அவர்கள் தான் அமேஸானுக்கு பதிலாக பொருட்களை சப்ளை செய்வார்கள்) 58 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 2017-ல் அமேஸானின் third party sales 56 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

amazon challenging retailers to increase their staffs salary and wages

amazon challenging retailers to increase their staffs salary and wages
Story first published: Friday, April 12, 2019, 13:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X