மோசமான பணி சூழல் நிறுவனங்களில் அலிபாபா நம்பர் 1..! அலிபாபா ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாங்காய்: அலிபாபா குழுமத்தின் நிறுவனர் மற்றும் உலக பில்லியனர்களில் ஒருவரான ஜாக் மா காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்ப்பது தவறு இல்லை எனக் கூறியிருக்கிறார்.

 

இப்படி வாரம் ஆறு நாட்கள் வேலை செய்யலாம். இது இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் வரம் என்றும் கூறியிருக்கிறார். அதற்கும் ஒருபடி மேலே சென்று இது சீன நிறுவனங்களுக்கான வரம் என்றும் கூறியிருக்கிறார்.

இப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரம் ஆறு நாட்கள் வேலை பார்ப்பதை அலிபாபா நிறுவனம் '996' என்று அழைக்கிறார்கள்.

சம்பளம் கேட்டு ஊர்வலம் போன ஜெட் ஏர்வேஸ் விமானிகள்..! சம்பளத்துக்காக காவல் நிலையத்தில் புகார்..!

வருத்தம்

வருத்தம்

பல technology நிறுவனங்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரம் ஆறு நாட்கள் வேலை செய்யும் இந்த அருமையான வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஜாக்மா.

வேறு எப்போது

வேறு எப்போது

இப்போது இந்த சிறிய வயதில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்க்கவில்லை என்றால் வேறு எந்த வயதில் வேலை பார்ப்பீர்கள் என்றும் இளைஞர்களை ஒரண்டைக்கு இழுத்திருக்கிறார். 1999 ஆம் ஆண்டுகளில் அலி பாபா தொடங்கப்பட்டபோது தன்னோடு பணியாற்றிய பலரும் ஒரு நாளில் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்து தான் நிறுவனத்தை வளர்ந்து இருக்கிறார்களாம்.

வெற்றி தேவை தானே..?
 

வெற்றி தேவை தானே..?

நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்கள் மற்றவர்களை விட அதிகமாக உழைப்பைக் கொடுக்கவில்லை என்றால் எப்படி நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். இன்றைய உலகில் உள்ள எல்லோருக்குமே தங்களுக்கான வெற்றி தேவைப்படுகிறது தானே..? ஒரு அருமையான வாழ்க்கை தேவைப்படுகிறது தானே..? ஒரு மதிப்பு மற்றும் மரியாதை தேவைப்படுகிறது. இதை கொடுக்க நீண்ட நேரம் உழைப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜாக்மா.

அதிஷ்டம்

அதிஷ்டம்

அதோடு இன்று வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்ப்பதை தன்னுடைய அதிர்ஷ்டமான விஷயமாகவே பார்க்கிறாராம். நாளொன்றுக்கு 12 மணி நேரங்களுக்கு மேல் உழைப்பதை அவர் தவறாக கருதவில்லை என்றும் கூறியிருக்கிறார். இனிவரும் காலங்களிலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைப்பதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

ஓவர் டைம் ஓகே தான்

ஓவர் டைம் ஓகே தான்

கடந்த பல ஆண்டுகளாக அபரிவித வளர்ச்சி கண்டு வந்த டெக்னாலஜி நிறுவனங்கள் திடீரென கொஞ்சம் சுணங்கும் போது கூட தன் ஊழியர்களை மிக அதிக நேரம் வேலை பார்க்கச் சொல்கிறது. இது சரிதான் எனவும் தன் ஆதரவை தெரிவித்து இருக்கிறார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு ஆன்லைனில் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

மோசமான பணிச் சூழல்

மோசமான பணிச் சூழல்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய கிட்டப் (Github) வலைதளத்தில் 996.icu என்கிற பெயரில் ஒரு ப்ராஜெக்ட் செய்து வைத்திருக்கிறார்கள். இதன் கீழ் மோசமான வேலை சூழலை கொடுக்கும் நிறுவனங்களில் அலிபாபா முதலிடத்தில் இருக்கிறது.

சீன சட்டம்

சீன சட்டம்

கடந்த வியாழக்கிழமை சீனாவின் அலிபாபா நிறுவனம் சீன தொழிலாளர் சட்டங்களையும் மீறி தன் ஊழியர்களை வேலை வாங்கிய இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சீனாவில் ஊழியர்களின் ஏழு நாட்களுக்கான பணிநேரம் 40 மணி நேரங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பது சீன சட்டமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jack ma said that the employees has to work 4 hours a day as over time

jack ma said that the employees has to work 4 hours a day as over time
Story first published: Saturday, April 13, 2019, 14:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X