ஆதார் தகவல்கள் திருட்டா.. எதுக்கு எடுத்திருப்பாங்க..சேவா மித்ரா செயலிக்காகவா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத் : ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்த பட்சம் 182 நாட்கள் வசித்து வரும் ஒருவருக்கு 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டையாகும். நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு தனித் தனியாக இந்த அடையாள அட்டையை வழங்குவதன் மூலமாக நாடு தழுவிய குடிமக்கள் தரவு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

 

அப்படிப்பட்ட அடையாள அட்டையில் ஒருவரின் முகவரி, மொபைல் என் உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். இதோடு பல்வேறு வகைகளில் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கிகளிலும், வரி செலுத்தும் ஐ.டி துறையிலும் ஏன் ஒரு மொபைல் எண் வாங்க வேண்டும் என்றால் கூட ஆதார் எண் மட்டுமே தேவைபடுகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 7.8 கோடி பேரின் ஆதார் தகவல் திருடப்பட்டதாகவும், அந்த தகவல்களை வைத்திருந்தாக ஐடி நிறுவனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் தகவல்கள் திருட்டா.. எதுக்கு எடுத்திருப்பாங்க..சேவா மித்ரா செயலிக்காகவா

காசுக்கே இந்த கதியா.. வெளியேற்றப்படும் சில்லறை காசுகள்..3-ல் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி

தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் மக்கள் தொகை சுமார் 8.4 கோடியாக இருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஐடி கிரிட்ஸ் இந்தியா பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் 7.8 கோடி பேரின் ஆதார் தகவலை வைத்திருந்ததாக ஆதார் ஆணையம் கொடுத்த புகாரின் படி மாதாபூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் எதற்காக இந்த தகவல்கள் எடுக்கப்பட்டன. அல்லது திருடபட்டனவா? என்று அலசி ஆராய்ந்த போது தெலுங்கு தேசம் கட்சியின் சேவா மித்ரா என்ற செயலிக்காக இந்த தகவல்களை பயன்படுத்தியதாக அந்த நிறுவனம் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தெலுங்கானா தடவியல் அதிகாரிகள் அந்நிறுவத்தில் சோதனையில் ஈடுபடும் போது அங்க்குள்ள கம்பியூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்கை சோதனை செய்த போது அதில் சுமார் 78,221,397 பேரின் ஆதார் தகவல்கள் இருந்ததும், அது ஆதார் ஆணையத்திடம் இருக்கும் தகவல்களுடன் அப்படியே அச்சு அசலாக ஒன்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

எது எப்படியோ இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை. எனினும் இவ்வளவு மக்களின் ஆதாரம் திருட்டு போயிருப்பது அரசின் அலட்சியத்தை நினைப்பதா? இது சரியான முறையில் பயன்படுத்தப் பட்டதா? இதன் மூலம் மக்கள் எந்த அளவில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று யோசித்து அரசு செயல்படவேண்டும். மேலும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமலிருந்தால் சரியே என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aadhaar data of 7.8 crore with IT firm, cyberabad police has filed FIR

The Cyberabad police has filed an FIR on the complaint of UIDAI stating that information tecnology firm IT gridswas in possession of aadhar data of over 7.8 crore residents of telungana and aadhra pradesh
Story first published: Sunday, April 14, 2019, 17:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X