ஐயா எங்க வேலைய காப்பத்துங்க.. கதறும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்..சம்பளம் வாங்கிக் கொடுங்க மோடிஜி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஸ்டிரைக் செய்ய போவதாக அறிவித்திருந்த ஊழியர்கள் மிரட்டியும் பார்த்தாச்சு, கெஞ்சியும் பார்த்தாச்சு இனி செய்வது என்ற குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமர் மோடியை நாடியுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே 117 விமானங்கள் 25 ஆக மாறி அது தற்போது 6 - 7 என்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சுமார் 20,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இதனால் இதில் விமானிகள் உள்பட, விமானத்தின் இன் ஜினியர்கள், மற்ற ஊழியர்கள் என மொத்தம் சுமார் 20,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் யாருக்கும் கடந்த ஜனவரி மாததிலிருந்து சம்பளமும் அளிக்கப்படவில்லை. இதனால் எஸ்.பி.ஐ வங்கியின் நிதியான ரூ.1500 கோடியை அளிக்க வேண்டும் என்றும்,இதன் மூலம் 20,000 பேரின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர் சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐயா எங்க வேலைய காப்பத்துங்க.. கதறும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்..சம்பளம் வாங்கிக்  கொடுங்க மோடிஜி

அடடா நல்ல விஷயமாச்சே.. அதிகரித்துள்ள எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி.. SEA சொல்லியிருக்கிறதாம் அடடா நல்ல விஷயமாச்சே.. அதிகரித்துள்ள எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி.. SEA சொல்லியிருக்கிறதாம்

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸை விற்று கடனை மீட்கலாம் என்று கண்ணோட்டத்தில் எஸ்பிஐ தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதனால் எஸ்.பி.ஐ ஜெட் ஏர்வேஸ் வெளிநாட்டு விமான பயணங்களை முழுமையாக நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இப்படியே சென்றால் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் போன்று ஜெட் ஏர்வேஸூம் திவாலாகி விடுமோ? என்றும், இதனால் மத்திய அரசு தலையிட்டு சுமூக முடிவு காண முயற்சி செய்ய வேண்டும்.

சென்ற மாதம் வரை 117 -க்கும் மேற்பட்ட விமானங்களுடன் இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் தற்போது வெறும் 7 விமானங்களுடன் உள்நாட்டு விமான சேவையை மட்டும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இடைக்கால நிதியாக 1,500 கோடி ரூபாயை உடனடியாக ஜெட் ஏர்வேஸ் அளிக்க முடிவு செய்துள்ளதால் இன்று இந்திய பங்கு சந்தையில் பெரிய ஏற்றம் இறக்கம் இல்லாமல் பிளாட்டாக வர்த்தகமாகி வருகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஜெட் ஏர்வேஸ்க்கு ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய விமான எரிபொருள் கட்டணம் மட்டும் 7,000 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் விமானங்களுக்கான குத்தகை பாக்கியும் உள்ளது. அதேசமயம் வங்கி கடனும் உள்ளது. ஆக இந்த 1500 கோடி ரூபாயை யாருக்கு கொடுக்கும் என்று தெரியாமல் ஊழியர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.

இதுமட்டுமா எஸ்பிஐ ஒதுக்கும் நிதியை வைத்து தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தொடர்ந்து வழங்குமா இல்லையா என்பதே ஊழியர்களின் கேள்வியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways pilots appeal to SBI for funds, ask PM Modi to save jobs

jet airways pilots body, the national aviator's guild on monday appealed the state bank of india to relese Rs.1500crore, which was proposed to be infused in the ailing carrier as part of a debt restructuring plan lastmonth.
Story first published: Monday, April 15, 2019, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X