A டிவிடிக்களை அழித்ததற்காக பெற்றோரிடமே 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்கும் மகன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிசிகன்: சார்லி ஒரு நடுத்தர வயது திருமண முறிவு செய்து கொண்ட இளைஞர். இவர் தன் பெற்றோரிடமே 60 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கிறார்.

 

அந்த 60 லட்சம் ரூபாய் எதற்குத் தெரியுமா..? சார்லியின் விலை மதிப்பற்ற, பார்ன் டிவிடிக்களை அழித்து விட்டதால் அத்தனை பெரிய நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டிருக்கிறாராம்.

சார்லி மிசிகனில் உள்ள தன் பெற்றோர்களுடனேயே வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் பெற்றோருக்கும், சார்லிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆகஸ்ட் 2017-க்குப் பின் தன் பெற்ரோரை விட்டுப் பிரிந்து வெளியேறி விட்டார்.

ஜே.கே சிமெண்ட்ஸ் & மங்களம் நிகர லாபம் அதிகரிக்கும்.. நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்பு ஜே.கே சிமெண்ட்ஸ் & மங்களம் நிகர லாபம் அதிகரிக்கும்.. நிறுவனங்களின் விற்பனை அதிகரிப்பு

பொருட்கள் பார்சல்

பொருட்கள் பார்சல்

அதற்குப் பிறகு சார்லி இண்டியானாவிலேயே வாழத் தொடங்கினார். திடீரென ஒரு நாள் பெற்றோர்கள் சார்லி மிசிகன் வீட்டில் விட்டுச் சென்ற பொருட்களைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான தன் கலைப் பொக்கிஷமான பார்ன் டிவிடிக்கள் இல்லாததைப் பார்த்து கடுப்பாகி பெற்றோர்களிடம் விசாரித்திருக்கிறார். எல்லாவற்றையும் அழித்துவிட்டோம் என பதில் வந்திருக்கிறது.

கவலை

கவலை

இதுவரை 12 பெரிய சூட்கேஸ் நிறைய, ஏகப்பட்ட பார்ன் டிவிடிக்களை சேகரித்து வைத்திருந்தாராம். இதில் இதுவரை வெளியாகாத தரமான டிவிடிக்கள், மிகப் பெரிய பிரபலங்களின் டிவிடிக்கள், ப்ரீமியம் கலெக்‌ஷன்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்டு எளிதில் கிடைக்காத உயர் தர டிவிடிக்கள் என அத்தனையயும் ஒரு கலைப் பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தாராம். இப்போது அவை இல்லாமல் பொய்விட்டதால் பெற்றோர்கள் மீது வழக்கு தொடுத்திருக்கிறாராம்.

நஷ்ட ஈடு
 

நஷ்ட ஈடு

ஒட்டாவா பகுதி காவல் நிலையத்தில் சார்லி தன் பெற்றோர்கள் மீதே "தன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலைக் பொக்கிஷமான பார்ன் டிவிடிக்களை தன் பெற்றோர்கள், வேண்டும் என்றே அழித்துவிட்டார்கள். அதற்கு நஷ்ட ஈடாக 60 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்" எனப் புகார் அளித்திருக்கிறார்கள்.

சார்லியின் அப்பா அம்மா

சார்லியின் அப்பா அம்மா

இதைக் குறித்து சார்லியின் பெற்ரோர்கள் சார்லிக்கு மின்னஞ்சல் மூலம் எழுதிய கடிதத்தில் "சார்லி உன் நன்மைக்காகத் தான் இந்த டிவிடிக்களை அழித்தோம். உன் மனம் மற்றும் உடல் நன்றாக இருக்கத் தான் இப்படிச் செய்தோம். உன்னிடம் ஒரு கிலோ போதைப் பொருள் இருந்திருந்தால் எப்படி அவைகளை அழித்து உன்னை பாதுகாத்திருப்போமோ, அப்படித் தான் இந்த டிவிடிக்களையும் அழித்து உன்னைப் பாதுகாத்திருக்கிறோம். இவைகளை அழிக்கவே எங்களுக்கு மிக நீண்ட நேரம் தேவைப்பட்டது. உன் நன்மைக்காகத் தான் நாங்கள் இதைச் செய்தோம் என்பதை நீ ஒரு நாள் அறிவாய்" என உருக்கமாக பதில் சொல்லி இருக்கிறார்கள்.

சார்லி பின் புலம்

சார்லி பின் புலம்

சார்லி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே சக மாணவர்களுக்கு இந்த வீடியோக்களை விற்று, சிறிய அளவில் காசு பார்த்திருக்கிறார். இந்த விவரங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வர சார்லியை பள்ளியில் இருந்தே நீக்கிவிட்டார்களாம். அதன் பின்னும் சார்லியை பெற்றோர்கள் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். மீண்டும் இந்த வீட்டில் ஏதாவது ஏடாகோடமான டிவிடிக்கள் கிடைத்தால் அழித்துவிடுவோம் எனவும் மிரட்டி நல்வழிப்படுத்த முயற்சித்திருக்கிறார்களாம். பலன் தராமல் இப்போது காவல் நிலையம் வரை பிரச்னை வந்திருக்கிறது என வருத்தப்படுகிறார்கள், சார்லியின் பெற்றோர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

son is asking 60 lakh rupee compensation from their parents for destroying his personal A dvd collections without his permission

son is asking 60 lakh rupee compensation from their parents for destroying his personal A dvd collections without his permission
Story first published: Monday, April 15, 2019, 12:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X