Facial Recognition-ஐ வைத்து ஒரு லட்சம் திருடிய இளைஞர்கள்..! அதிர்ச்சியில் காவல் துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று டெக்னாலஜி இல்லாத இடமே இல்லை. எங்கும் டெக்னாலஜி எதிலும் டெக்னாலஜி. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு உலகையே சுற்றும் அளவுக்கு இணையமும் அசுரத் தனமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

 

இதை எல்லாம் ஆக்கப்பூர்வமாக செய்து கொண்டிருப்பவர்கள் ஒரு பெரிய எண்ணிக்கை என்றால், இந்த நவீன டெக்னாலஜிகளைப் பயன்படுத்தி செய்யும் விஷமத் தனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

அப்படி ஒரு விஷமத் தனத்தையும், திருட்டையும் தான் இங்கு பார்க்கப் போகிறோம். நண்பர்களின் விஷமத் தனத்தால் ஏற்பட்ட சிக்கலைப் பார்க்கப் போகிறோம்.

 தேர்தல் ஆணையமே ரூ.75 லட்சம் கொடு..! இல்லையா வங்கிக் கடன் அல்லது சிறுநீரகத்தை விற்க அனுமதி கொடு..! தேர்தல் ஆணையமே ரூ.75 லட்சம் கொடு..! இல்லையா வங்கிக் கடன் அல்லது சிறுநீரகத்தை விற்க அனுமதி கொடு..!

நண்பர்கள்

நண்பர்கள்

சீனாவின் நிங்போ (Ningbo) நகரின் ஒரு உணவகத்தில் மூன்று நண்பர்கள் உணவு ஆர்டர் எடுத்து பரிமாறும் ஸ்டிவெர்டுகளாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களின் பெயர்கள் யுவான், லியூ, யாங். இதில் யுவானிடம் இருந்து தான் லியூவும், யாங்கும் பணத்தைத் திருடி இருக்கிறார்கள்.

Facial recognition

Facial recognition

யுவான் தன் ஸ்மார்ட்போனில் Facial recognition வசதியைத் தான் எல்லா செயலிகளுக்கும் பயன்படுத்துவதை லியூவும், யாங்கும் முன்பே பல முறை பார்த்திருக்கிறார்கள். எனவே முதலில் யுவானின் ஸ்மார்ட்ஃபோனைத் திருடி இருக்கிறார்கள். அதன் பிறகு யுவான் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவன் முகத்தைப் பயன்படுத்தி Facial recognition மூலம் ஸ்மார்ட்ஃபோனை திறந்துவிட்டார்கள்.

இ - வேலட்டுகள்
 

இ - வேலட்டுகள்

அதன் பின் நேரடியாக We Chat செயலியில் இருக்கும் இ-வேலட்டைப் பயன்படுத்தி பணத்தை லியூவின் கணக்குக்கும், யாங்கின் கனக்குக்கும் பரிமாற்றம் செய்து கொண்டார்கள். என்ன பிரச்னை என்றால் யுவான் தன் we chat செயலியில் கூட Facial recognition-ஐத் தான் பணத்தை பரிமாற்றம் செய்வத்கற்கான ஆத்தரைசேஷன் செக்யூரிட்டியாக கொடுத்திருக்கிறார். எந்த ஒரு கடவுச் சொல்லோ அல்லது பேட்டர்ன் லாக்குகளோ கொடுக்கவில்லை.

விசாரணை

விசாரணை

எனவே பணத்தை கச்சிதமாக திருடி விட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் பதறிப் போன யுவான் காவல் துறையினரிடம் விஷயத்தைச் சொல்லி புகாரளித்திருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் லியூவையும், யாங்கையும் பிடித்துவிட்டார்கள். அதோடு Facial recognition வசதி எப்படி கண்களை மூடிக் கொண்டிருந்தாலும் செயல்படுகிறது எனவும் சீன காவல் துறை சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. இது குறித்து டெக்னாலஜி நிறுவனங்களிடமும் பேசி வருகிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facial recognition used to steal 1 lakh rupee from we chat e wallet

Facial recognition used to steal 1 lakh rupee from we chat e wallet
Story first published: Tuesday, April 16, 2019, 12:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X