புதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,040 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 39,275 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 38,905-க்கு ஏற்றத்தில் நிறைவடைந்தது.

நேற்றைப் போலவே, இன்றும் காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் சுமார் 135 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமானதும் மொத்த வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் ஏற்றத்தை உறுதி செய்யத் தொடங்கி விட்டனர்.

40 புள்ளிகள் 50 புள்ளிகள் கேப் அப்பில் ஓப்பன் ஆனாலேயே ஓரளவுக்கு நல்ல வர்த்தகம் அந்த நாளில் இருக்கும். இன்று ஒரே நாளில் அது சந்தை தொடங்கப்படுவதே 135 புள்ளிகள் கேப் அப் என்றால் சும்மா இருப்பார்களா என்ன..?

செய்திகள்

செய்திகள்

எல் நினோவினால் பருவ மழை பாதிக்கப்படும் என்பதால் சந்தைகள் தேக்கத்தில் வர்த்தகமாயின. சமீபத்தில் வெளியான வானிலை ஆய்வு மையக் கணிப்புகள் வழக்கம் போல பருவ மழை வரும் என்கிற செய்தியின் மொமெண்டம், இந்திய வரலாற்றிலேயே காணாத அளவுக்கு அதிகரித்த ஏற்றுமதி, வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் ஆர்பிஐ கூட்டத்தில் மீண்டும் வட்டி விகிதம் குறையும் என்கிற செய்திகள் எல்லாம் ஒன்று சேர புதிய உச்சத்துக்கு பறந்தே விட்டது சென்செக்ஸ்.

மற்ற இண்டெக்ஸ்கள்

மற்ற இண்டெக்ஸ்கள்

ஐடி துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகி இருக்கின்றன. இன்று ஒரே நாளில் 8% ஐடி இண்டெக்ஸ் அதிகரித்திருக்கிறது. வழக்கம் போல வங்கி இண்டெக்ஸ்களும் ஒரே நாளில் 12% அதிகரித்து தன் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கின்றன. அதனால் தான் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இண்டெக்ஸ்கள் புதிய உச்சம் தொட முடிந்திருக்கின்றன. இந்த இரண்டு இண்டெக்ஸ்களோடு ஆயில் அண்ட் கேஸ் 11%, பார்மா 5% உயர்ந்து அசால்ட் செய்திருக்கின்றன.

பாசிட்டிவ் செய்திகள்

பாசிட்டிவ் செய்திகள்

இன்று இந்தியாவின் மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் காலாண்டு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்த்தோம். இதுவரை வெளியாக வில்லை. ஒருவேளை மாலை வெளியானல் அதன் தாக்கம் நாளை இருக்கலாம். அதோடு ஏற்கனவே வெளியான செய்திகளின் மொமெண்டமும் சந்தையை இன்னும் கொஞ்சம் மேல் நோக்கி நகர்த்தலாம்.

நிலைக்க வேண்டும்

நிலைக்க வேண்டும்

இப்போது 39,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை உடைத்து 39,005-ல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இது நிலைக்குமா..? அடுத்த சில நாட்களாவது சென்செக்ஸ் 39,000 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்தால் தான் அதை உறுதி செய்ய முடியும். குறிப்பாக தொடர்ந்து 39,000 லெவல்களுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைய வேண்டும் என நேற்று சொல்லி இருந்தோம். இன்று ஒரு நாள் ஏற்றம் 39,000 புள்ளிகளை எளிதில் கடந்து விட்டதாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆகஸ்டு 2018-ல் கூட தாறுமாறாக ஏறிய சென்செக்ஸ் இந்த 39,000 புள்ளியில் வந்து தான் சிக்கித் தவித்தது. எனவே நாளையும் வர்த்தகம் ஏற்றம் கண்டாலும் 39,000 புள்ளியில் ஒரு கண் இருக்கட்டும். மேலும் மேலும் 39,000 புள்ளிகளுக்கு மேல் வரும் புதிய குளோசிங்கால் தான் இந்த 39,000-த்தைக் கடக்க முடியும்.

சொன்னது நடந்ததே

சொன்னது நடந்ததே

நேற்று முதல் ரெசிஸ்டென்ஸாக 39,000 புள்ளிகளும், இரண்டாம் நிலை ரெசிஸ்டென்ஸாக 39050 புள்ளிகளும் இருக்கும். இவை இரண்டுமே கூட ஓரளவுக்கு வலுவான ட்ரிக்கர்களால் உடைக்கப்படலாம். ஆனால் 39,138 என்கிற புள்ளியைத் தான் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது. நாளை ஒரு நாளில் இந்த புள்ளியை உடைத்துக் கொண்டு சென்சென்ஸ் உயர்த்தால் தாறு மாறாக உயரும் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே 39,138 புள்ளிகளை உடைத்து கூடுதலாக 137 புள்ளிகள் அதிகரித்திருக்கிறது.

ரெசிஸ்டென்ஸ்

ரெசிஸ்டென்ஸ்

இன்றைய இண்ட்ரா டே லோ லெவல்களுக்கும் இண்ட்ரா டே ஓப்பனிங்குக்கு வித்தியாசம் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே. அதாவது இன்று முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் முழுக்க முழுக்க பாசிட்டிவ்வாகவே வர்த்தகம் மேற்கொண்டிருக்கிறார்கள் எனக் காட்டுகிறது. எனவே நாளையும் சென்செக்ஸ் உயரும் என எதிர்பார்க்கலாம். எனவே முதல் ரெசிஸ்டென்ஸாக வலுவான ரெசிஸ்டென்ஸாக 39,400 லெவல்களை வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது ரெசிஸ்டென்ஸாக 39,482 புள்ளிகளும், 3-வது ரெசிஸ்டென்ஸாக 39,657 புள்ளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.

ஏழு நாட்கள் தேவை

ஏழு நாட்கள் தேவை

இப்போதைய சூழலில் எந்த ஒரு நெகட்டிவ் செய்தியும் வராமல் இருந்தாலே அடுத்த நான்கு முதல் ஏழு வர்த்தக நாளில் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொடும். ஆனால் நாளை ஏப்ரல் 17 மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை, ஏப்ரல் 19 அன்று புனித வெள்ளி என இந்த வாரத்திலேயே இரண்டு வர்த்தக நாட்களுக்கு விடுமுறை எனும் போது செய்திகளில் தாக்கம் கொஞ்சம் குறையலாம். எனவே ஏப்ரல் 18-ம் தேதி ஜாக்கிரதையாக வர்த்தகத்தை மேற்கொள்ளவும்.

அடுத்த சப்போர்ட்

அடுத்த சப்போர்ட்

பிரமாதமான ஏற்றத்தில் வர்த்தகமாகி வரும் சந்தைக்கும் ஒரு பிரேக் கட்டை தேவை தானே. ஆகையால் 39,111 புள்ளிகளை முதல் நிலை சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம். அதையும் தாண்டி இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கினால் 39,000 மற்றும் 38,870 என்கிற புள்ளிகள் அடுத்தடுத்த வலுவான சப்போர்ட்டாக இழுத்துப் பிடிக்கும்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,736 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,787 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,690 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த மூன்று வர்த்தக நாட்களாக நிஃப்டி தன் மூன்று (11625, 11650, 11761) வலுவான ரெசிஸ்டென்ஸ்கலை உடைத்துக் கொண்டே வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

ரெசிஸ்டென்ஸ்

ரெசிஸ்டென்ஸ்

நாளை (ஏப்ரல் 18) நிஃப்டி மேலே ஏறி அதிகரித்து வர்த்தகமாகத் தொடங்கினால் 11,866 புள்ளிகள் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். அதையும் கடந்தால் 11,927 லெவல்கள் மிக வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கின்றன. நாளை ஒரே நாளில் 11,927 புள்ளிகளைக் கடந்தால், 11982 மூன்றாவது ரெசிஸ்டென்ஸாக இருக்கும். சென்செக்ஸுக்கு சொன்னது போலவே இதுவரை வெளியான செய்திகளின் மொமண்டமே இன்னும் பாக்கி இருப்பதால் ஏப்ரல் 18-ல் வர்த்தகம் பச்சையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி இன்று 11,787 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஒருவேளை நிஃப்டி கீழே இறங்கி வர்த்தகமாகத் தொடங்கினால் முதல் நிலை சப்போர்ட்டாக 11,700 லெவல்கள் இருக்கும். இந்த லெவல்கள் இன்னும் உறுதியான ஒரு சப்போர்ட்டாக உருவாக வில்லை என்றாலும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம். அதை உடைத்துக் கொண்டு கீழே இறங்கினால் 11,688 மற்றும் 11,625 அடுத்து நல்ல வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 03 பங்குகள் இறக்கத்திலும், 27 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,724 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,292 பங்குகள் ஏற்றத்திலும், 1,279 பங்குகள் இறக்கத்திலும், 153 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,724 பங்குகளில் 69 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 84 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 13 பங்குகள் இறக்கத்திலும், 36 பங்குகள் ஏற்றத்திலும் ஒரு பங்கு விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே இறக்கத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் தான்வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் கோல் இந்தியா, டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

இண்டஸ் இந்த் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைடன் கம்பெனி, ஓ என் ஜிசி, அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் சராசரியாக 2.5 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்7

இறக்கப் பங்குகள்7

விப்ரோ, சிபா, கெயில், பவர் க்ரிட் கார்பரேஷன், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 0.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 15, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை -0.10% வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் அனைத்தும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. லண்டனின் எஃப்.டி.எஃப்.இ 0.48%, பிரான்சின் சி ஏ சி 0.12% அதிகரித்தும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 0.71% வர்த்தகமாகி வருகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் அனைத்துச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 2.39% ஏற்றத்தில் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.60 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டு வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலைக்கு 71.27 டாலராக உயர்ந்திருக்கின்றது. நேற்றைய விலையை விட இன்று அதிகம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex and nifty is in its life time high close

sensex and nifty is in its life time high close
Story first published: Tuesday, April 16, 2019, 18:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X