விலை அதிகரிக்கலாம்.. சீனா- அமெரிக்கா ஒப்பந்தம் எதிர்பார்ப்பு..விலையேற்றத்தை தடுக்கும் ஒப்பந்தம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : காப்பர் நுகர்வேரில் முன்னணி வகிக்கும் நாடான சீனாவில் தற்போதைய சூழலில் வளர்ந்து வரும் பொருளாதாரம் காரணமாக காப்பரின் தேவை அதிகரித்துள்ளன. இதனாலேயே கடந்த சில வாரங்களாக விலை அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

 

மெட்டல் நுகரிவோரில் அதிகப்படியான நுகர்வோரான சீனாவில் நிலவி வரும் பொருளாதாரம் குறித்த அறிக்கைகள் அதிகரித்து வரும் சீனா பொருளாதாரத்தை காட்டுகிறது. இந்த நிலையில் காப்பர் மற்றும் மற்ற உலோகங்களின் தேவை அதிகரிக்கும் என்ற நிலை நிலவி வருகிறது.

இதனால் காப்பரில் விலை சர்வதேச சந்தையில் டன்னுக்கு விலை 1 சதவிகிதம் அதிகரித்து 6565 டாலர்கள் அதிகரித்துள்ளது. மேலும் வரும் ஜீலை 3-லிருந்து சீனா அமெரிக்காவுடனான வர்த்தக முரண்பாட்டில் ஈடுபட போவதாகவும் செய்திகள் மூலம் தெரிகிறது. இதனால் இந்த இரு நாடுகளின் பொருளாதாரம் அதிகரிக்கும் என்றும் தெரிகிறது. இதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தகப் போக்குவரத்தும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீல கலரு 50 ரூபாய் நோட்டில் சக்திகாந்த தாஸ் கையெழுத்து

சீனாவில் தேவை அதிகரிக்கலாம்

சீனாவில் தேவை அதிகரிக்கலாம்

இதன் மூலம் சீனாவில் இந்த உலோக மெட்டல்களின் தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் காப்பரின் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதன் மூலம் சீனாவில் அதிகரித்தும் வரும் தொழிற்துறையில் காப்பர் மற்றும் மற்ற உலோகங்கன் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய எம்.சி.எக்ஸ் வர்த்தகத்துல எப்படி?

இந்திய எம்.சி.எக்ஸ் வர்த்தகத்துல எப்படி?

அது சரி இந்திய கமாடிட்டி சந்தையில எப்படி இருக்கும்னு கேட்கிறீங்களா? இந்திய கமாடிட்டி வர்த்தகமான எம்.சி,எக்ஸ்ல சர்வதேச சந்தையில எப்படி வர்த்தகமாகுதோ அத பொருத்தும், சர்வதேச அளவுல தேவை எப்படி இருக்கும், இருப்பு எவ்வளவு இருக்கு இத பொருத்துதான் இந்திய சந்தையில வர்த்தகமாகும். இதன் அடிப்படையில் வரும் வாரங்கள்ல காப்பரின் விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு அதிகம் இருக்கு, எனெனில் உலோகங்களின் அதிக நுகர்வோரான சீனாவுல தேவை அதிகரிக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா- அமெரிக்கா ஒப்பந்த்தால் அதிகரிக்கலாம்
 

சீனா- அமெரிக்கா ஒப்பந்த்தால் அதிகரிக்கலாம்

அதுவும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என்ற நிலையில், அந்த நாடுகளின் வர்த்தகமும் அதிகரிக்கலாம் என்ற யூகமே நிலவி வருகிறது. இதன் காரணமாகவே கமாடிட்டி சந்தையில் காப்பரின் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது. இருப்பினும் வரும் வாரங்களில் காப்பர் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.

எம்.சி.எக்ஸ்சில் தற்போதைய விலை

எம்.சி.எக்ஸ்சில் தற்போதைய விலை

இந்திய எம்.சி.எக்ஸ் வர்த்தகத்தில் தற்போதைய விலை 452. 70 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் 457 ரூபாய் என்ற விலையே வாங்குவதற்கான பிரேக் அவுட் விலையாக உள்ளது. இந்த விலையை கடக்கும் போது 470 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. இதுவே 449 கீழே சென்றால் மட்டுமே இறங்க வாய்ப்புள்ளது. அப்படியே இறங்கினாலும் அது புராபிட் புக்கிங்க் ஆகவோ அல்லது சீனா அமெரிக்க உறவுகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மட்டுமே மாற்றம் இருக்கும். அப்படி விலை கீழே இறக்கும் பட்சத்தில் 439 வரை செல்லவாய்ப்பிருக்கிறது.

மெட்டல் விலைகள் சைடுவேயாக வர்த்தகமாகிறது

மெட்டல் விலைகள் சைடுவேயாக வர்த்தகமாகிறது

குறிப்பாக மெட்டல் வர்த்தக விலைகள் அதிக ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் சைடுவேஷ்ஸாக வர்த்தகமாகி வருகின்றன. சீனாவில் நிலவி வரும் வர்த்தகம் தொடர்பான ஊக்குவிப்பால் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் வளர்ச்சி 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையை பொறுத்தே விலை இருக்கும்

தேவையை பொறுத்தே விலை இருக்கும்

தொழில் துறை உற்பத்தி நுகர்வோரின் தேவையை பொறுத்தே அமையும் என்பதையடுத்து இந்த மிடில் நிலையில் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூ.455 - 460 என்ற விலைக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த புதன் கிழமையண்று உயர்ந்துள்ளது.

ஜிங்க் தேவை அதிகரிப்பு

ஜிங்க் தேவை அதிகரிப்பு

தொழிற்துறைகளில் ஏற்பட்ட தேவையின் காரணமாக ஜிங்கின் தேவை அதிகமாகவே காணப்பட்டது. இதனால் ஜிங்க் விலை சற்று அதிகரித்தே காணப்பட்டது எனினும் எம்.சி,.எக்ஸ் வர்த்தகத்தில் ரூ223 - 228 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. ஜிங்க் 220 ரூபாய்க்கு கிழே வர்த்தகமானால் மட்டுமே இறங்க வாய்ப்பு உள்ளது. இதே போல் விலை அதிகரிக்கும் போது 230 ரூபாய் வரையிலேயே இருக்கும். இந்த 230 ரூபாய் என்பது பிரேக் அவுட் லெவலாகும். இதை உடைத்துக் கொண்டு விலை செல்லும்மேயானால் ஜிங்கின் விலை இன்னும் அதிகமாக விலை ஏறும்.

அலுமினியம் உற்பத்தி குறைவு

அலுமினியம் உற்பத்தி குறைவு

அலுமினியம் உற்பத்தி 3.6 சதவிகிதம் சீனாவில் குறைந்துள்ளது. இதன் தேவை குறைவே எனினும் உற்பத்தி குறைந்தது காரணமாக விலை இறக்கம் தடுக்கப்பட்டது. அலுமியத்தின் விலை பெரும்பாலும் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தாலும் சர்வதேச சந்தைகளில் இதன் விலை அதிகரித்தே காணப்பட்டது. குறிப்பாக ஷாங்காய் மார்கெட்டில் விலை அதிகரித்தே காணப்பட்டது. அலுமினியம் விலை தற்போது 148.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது, இதன் பெரிய அளவில் ஏற்றம் இருக்காது என்றும் தெரிகிறது. தற்போதைய சூழலில் 151 ரூபாய்க்கும் மேல் நின்று வர்த்தகமானால் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கும். இதே கீழே 147 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமானால் இன்னும் விலை இறங்கவே வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: copper காப்பர்
English summary

china's metal production shows no signs of slowing

Base metal counter are expected to trade sideways with downside getting capped owing to optimistic sentiments. prevailing on the international market. China's economy grew at a steady 6.4 percent pace in the first quarter, defying expectations. for a further slowdown, as industrial production jumped sharply and consumer demand showed signs of improvement. Copper may
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X