இந்திய ரயில்வே பங்கு சந்தையில் கால் பதிக்க திட்டம்..ரூ.1500 கோடி நிதி திரட்ட இலக்கு..ஐ.ஆர்.சி.டி.சி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவிலேயே மிகப் பெரிய துறையான ரயில்வே துறை தான். இந்த ரயில்வே துறை சார்ந்த மிகப் பெரிய நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி நிறுவனங்கள் பங்கு வெளியீட்டின் மூலம் அரசு மூலதனமாக ரூ. 1,500 கோடியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் பங்கு வெளியீடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருக்கலாம் என்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் பங்குகளை வெளியிட நிதி அமைச்சகம் திட்ட மிட்டிருந்தது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட பிறகு அதிக வட்டிக்கு கடன் திரட்ட நேரிடும் என ரயில்வே அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட் டது. இருப்பினும் இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு மத்திய அமைச் சகத்திடம் விடப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பிறகு செப்டம்பர் மாதம் இவ்விரு நிறுவனங்களின் பொதுப் பங்குகளும் வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவாக்க திட்டத்துக்கு தேவையான நிதி

விரிவாக்க திட்டத்துக்கு தேவையான நிதி

இந்திய ரயில்வேயின் விரிவாக்கத் திட்டத்துக்குத் தேவையான நிதியை வழங்குவதற்காக பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட ஐஆர்எஃப்சி திட்டமிட்டுள்ளது. அதேபோல நாட்டில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க தேவையான நிதியை பங்கு வெளியீடு மூலம் திரட்ட ஐஆர்சிடிசி உத்தேசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐபிஒ மூலம் நிதி திரட்ட முடிவு

ஐபிஒ மூலம் நிதி திரட்ட முடிவு

இந்திய ரயில்வே இந்த பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ.481 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பின் மூலம் பங்குச் சந்தையில் ஐபிஓ மூலம் 25,34,57,280 பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் சுமார் ரூ.481 கோடி திரட்ட முடிவு செய்திருந்தது.

திரட்டபடும் நிதி எதற்காக
 

திரட்டபடும் நிதி எதற்காக

பங்குச் சந்தை மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் பாதைகளை மின்மயமாக்கள், மெட்ரோ ரயில் பணிகள், பறக்கும் ரயில் பணிகள், ரயில்வே மேம்பாலங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த நிதி மூலம் இது போன்ற நிதிகளை திரட்டி ரயில்வே சேவைகளை இன்னும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ரயில்வே பங்குகளை நம்பி வாங்கலாம்

ரயில்வே பங்குகளை நம்பி வாங்கலாம்

சிறந்த சேவைகள், கவர்ச்சிகரமான மதிப்பீடுகள், வலுவான செயல்பாட்டுத் திறன் மற்றும் கட்டமைப்பு வசதிகள், அதிகப்படியான இருப்பு நிலை போன்ற காரணங்களால் இந்த பங்குகளை நம்பி வாங்கலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்களும் பங்கு தரகர்களும் கூறியுள்ளனர்.

பிரச்சனைகளும் உண்டு

பிரச்சனைகளும் உண்டு

ரயில்வே பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்குவது மலை ரயில் பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் தாமதம், கொல்கத்தா மெட்ரோ பணிகளைத் தாமதமாகச் செய்து வருவது போன்றவை இந்த பங்குகளை வாங்குவதற்கு பிரச்சனையாக உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் நிரந்தரமானவை அல்ல. இது எளிதில் தீர்க்ககூடிய பிரச்சனையே.

நீண்ட கால முதலீடு செய்யலாம்

நீண்ட கால முதலீடு செய்யலாம்

நீண்டகால முதலீடு செய்ய நினைப்பவர்கள் இது போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் போது அதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும். அதுவும் வளர்ந்து வரும் இது போன்ற துறைகள் என்றுமே லாபத்தை மட்டுமே தரக் கூடியவை. இதன் மூலம் பங்குச் சந்தையில் நுழைய விரும்புவோர் தாராளமாக இந்த பங்குகளை வாங்கலாம். அதுவும் நீண்டகால நோக்கில் வாங்குபவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதோடு நஷ்டம் என்பது வாய்ப்பில்லாத ஒரு பங்காகும் என்பதில் சந்தேகமில்லை என்றும் நிபுணர்கள் பரிந்துரை சொல்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government targets IRCTC, IRFC IPOs by September month

The government is targeting to raise about Rs 1,500 crore from initial public offerings of two railway companies -- IRCTC and IRFC -- by September. The finance ministry earlier this year initiated the process of launching an IPO of Indian Railway Finance Corporation (IRFC) but the company has told the railway ministry that their borrowing cost will go up if it gets listed, the official said.
Story first published: Thursday, April 18, 2019, 16:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X