சீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங் : அமேசான் இ -காமர்ஸ் நிறுவனம் வரும் ஜீன் மாதத்திலிருந்து சீன சந்தை வர்த்தகத்தை முடக்க போவதாகவும், அதோடு உள்ளூர் விற்பனையாளர்களிடம் இருந்து நுகர்வோர் பொருட்களை வாங்காமல் வெளி நாடுகளில் உள்ள நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யவும், அதோடு வெளி நாடுகளில் உள்ள தரமான நுகர்வோர் பொருட்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

அமேசான் இந்த நுகர்வோர் பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தோடு அல்லாமல், சீனாவில் இன்னும் பல வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அமேசான் இணைய சேவைகள், கிண்டெல் இ- புத்தகங்கள் மற்றும் கிராஸ் பார்டர் ஆப்ரேஷன்ஸ் (அதாவது சீனா வணிகர்ளிடமிருந்து வெளி நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கப்பலில் சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கான குறுக்கு எல்லை நடவடிக்கைகளை அமேசான் செய்து தரும் ) இது போன்ற பல வகையான வர்த்தகங்களில் அமேசான் வரும் ஜீலை 18 முதல் செய்ய தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. இதில் சீனா வாடிக்கையாளர்கள் அமேசானின் சீன வலைப்பக்கத்தில் நுழையலாம் என்றும் கூறியுள்ளது.

உலகளாவிய சந்தைகளில் வாங்க திட்டம்

உலகளாவிய சந்தைகளில் வாங்க திட்டம்

அதோடு அமேசான் மூன்றாம் தரப்பு வியாபாரிகளிடமிருந்து வாங்குவதை விட பொருட்களை உலகளாவிய வர்த்தக சந்தைகளிலிருந்து மட்டுமே வாங்கும் என அறிவித்துள்ளது. இந்த இ-காமர்ஸ் நிறுவனத்திலிருந்து சீனா வெளியேற்றப்படுவதால் சில்லறை வர்த்தகத்தில் நஷ்டமோ பாதிப்புகளோ ஏற்படலாம். ஆனால் இது நீண்ட கால நோக்கில் லாபத்தை கொடுக்கும். அதற்கான ஒரு வழி முறையாகவே இந்த உலகத் தரமான பொருட்களை வாங்குவதில் அமேசான் கவனம் செலுத்தியும் வருகிறது என் கிறார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஷ். இது ஒரு நீண்ட கால லாபத்துக்கான வழியாகும் .

அட 15 வருஷம் ஆச்சு சீனாலா ஆரம்பிச்சு

அட 15 வருஷம் ஆச்சு சீனாலா ஆரம்பிச்சு

அமேசான் நிறுவனம் கடந்த 2004ல் தான் சீனாவில் நுழைந்தது. அங்கு உள்ளுர் ஆன்லைன் புத்தக விற்பனை தளத்தை 75 மில்லியன் டாலருக்கு வாங்கியது. அன்றிலிருந்து கிடங்குகள், தரவு மையங்கள் மற்றும் சீன விற்பனையாளர்கள் தங்களது பொருட்களை எப்படி அமேசான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல திட்டங்களில் முதலீடு செய்ய வுள்ளது. அமேசான் 2016-ல் சீனாவில் அதன் பிரதமர் உறுப்பினர் திட்டத்தை அறிமுகம் செய்தது. உயர்தரமான மேற்கத்திய பொருட்கள் மற்றும் இலவச சர்வதேச விநியோகங்கள் போன்ற சலுகைகள் வழங்கியதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் நம்பிக்கையுடன் இது அமைந்தது.

சர்வதேச பொருட்களையே   விரும்புகின்றனர்
 

சர்வதேச பொருட்களையே விரும்புகின்றனர்

மேலும் அமேசான் சீனாவுடனான் வர்த்தகத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அந்த நிறுவனத்தை சேர்ந்த செய்தித் தொடர்பு பெண் ஒருவர் கூறுகையில், சீனாவின் நுகர்வோர் சில்லறை வணிகத்தை முடக்க போவதாகவும் கூறியுள்ளது. இது சீனா மக்கள் ஆடம்பரமான உலகளாவிய பொருட்களையே விரும்புகின்றனர். இதன் மூலம் சர்வதேச அளவில் உள்ள தரமான நுகர்வோர் பொருட்களை வழங்கவே விரும்புகிறது. இதோடு சீனா மக்களூம் அத்தகைய பொருட்களையே விரும்புகின்றனர். எனினும் இத்தகைய வர்த்தகத்தை தவிர்த்தாலும் இன்னும் பல தொழில்களை அங்கு மேம்படுத்த போவதாகவும், இதன் மூலம் சீனாவில் பல வர்த்தகங்களை செய்ய விருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் விரிவுபடுத்த உள்ளது

இந்தியாவிலும் விரிவுபடுத்த உள்ளது

மேலும் தற்போது இந்தியாவிலும் அமேசான் தனது சேவை விரிவு படுத்த தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும் தனது வர்த்தகத்தை ஒரு புறம் வளர்த்துக் கொண்டே தான் இருக்கிறது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதென்ன ஆன்லைன் வர்த்தகம்

அதென்ன ஆன்லைன் வர்த்தகம்

எந்த ஒரு தொழிலாகட்டும் தற்போது ஆன்லைன் உபயோகம் அதிகரித்துள்ளது. அத்தகைய ஆன்லைன் வணிகத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? உலகளவில் பார்க்கும்போது இணையதள வணிக நிறுவனங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிண்றன. முதல் வகையை பொறுத்தவரை, குறிப்பிட்ட இணையதளத்தை நடத்தும் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் பொருளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும். உதாரணமாக, சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அலிபாபா நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் பொருட்களை தனது பெயரில், தனது இணையதளத்தில் விற்பனை செய்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த முறையில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு அனுமதியில்லை.

100 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீடு

100 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீடு

இரண்டாவது வகையில், பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பை, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மட்டும் இணையதள வர்த்தக நிறுவனங்கள் செய்கின்றன. இந்த வகை வர்த்தகத்தில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியாவில் அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிடப்பட்ட இரண்டாவது வகையிலேயே அமேசான் செயல்படுகிறது.

அதென்ன இ-காமர்ஸ்

அதென்ன இ-காமர்ஸ்

இ-காமர்ஸ் எனும் தொழில்நுட்பம் முதன்முதலில் கைபேசி முலம் வர்த்தகம்,மின்யியல் பணப்பரிவர்த்தனை போன்றவைக்கு உதவியது.ஆனால் இ-காமர்ஸ் என்பது முழுமையாக ஒரு ஆன்லைன் ஷாப்பிங் கருவியாக உருவெடுத்தது 1979 ஆம் ஆண்டு தான்.ஆனால் 1996 ஆம் ஆண்டு தான் இ-காமர்ஸ் அதன் வளர்ச்சியை தொடக்கியது. தற்போது இ-காமர்ஸ் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த நிலையில் அமேசான் மற்றும் இபே போன்ற மார்க்கெட் இடங்களே இந்த இ-காமர்ஸ் வளர முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

ஏன் எதற்கு இ-காமர்ஸ்?

ஏன் எதற்கு இ-காமர்ஸ்?

ஒரு பொருளை வாங்க கடைக்கு சென்று அந்த பொருளை பெற அலைந்து திரிந்து வாங்கி,அதற்கான பணத்தை கையாள்வது கடினம். ஆனால் அதுவே இ-காமர்ஸ் முலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்வது என்பது மிக எளிது. ஏனென்றால்,எப்போது வேண்டும் என்றாலும் இன்டர்நெட் முலமாக நமது தேவையை சரியான மதிப்போடு சரியானவற்றை நம் வாங்குவோம்.பல பொருள்களை ஒப்பிட்டு பார்த்து சரியான விலையில் வாங்க இயலும். இதனாலேயே அமேசான் போன்ற நிறுவனங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன.இது சரியான விஷயமே அல்ல என்றாலும் மக்களூக்கு ஏற்றவாறு வர்த்தகத்தையும் வழி முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amazon அமேசான்
English summary

Amazon to shut down part of its Chinese e-commerce

In a rare retreat for Amazon.com Inc., the e-commerce giant plans to shut down its Chinese marketplace business in July as it shifts its focus to offering mainland consumers overseas products rather than goods from local sellers.
Story first published: Friday, April 19, 2019, 11:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X