இணைந்த கரங்கள்.. பொருளாதார முன்னேற்றத்தினை அதிகப்படுத்தவே.. மஹிந்திரா - ஃபோர்டு ஒப்பந்தம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் இணைந்து கார்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. முன்னனி நிறுவனங்களான இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு இந்த துறையில் மேலும் பல வகையான துரித செயல்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா- ஃபோர்டு கூட்டணியில் புதிய எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட இருப்பதாகவும், இது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாகவும் இந்த இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. அதென்ன எஸ்யூவி, அப்பயென்ன இருக்கு இதுல

ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இந்திய சந்தையில் இணைந்து செயல்பட இருப்பது, கடந்த 2017ல் யிலேயே அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் கார்களுக்கான தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் எஞ்சின், கியர்பாக்ஸ் ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் இணைந்து செயல்பட இருப்பதாகவும் இந்த கூட்டணிகள் அறிவித்தன.

சீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான் சீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்

வர்த்தகத்தில் லாபத்தை அதிகரிக்க முடியும்

வர்த்தகத்தில் லாபத்தை அதிகரிக்க முடியும்

இந்த நிலையில் இதன் மூலம் முதலீடு வெகுவாக குறைக்க முடியும். மேலும் இதன் மூலம் வர்த்தகத்தில் அதிகப்படியான லாபத்தை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி எஸ்யூவி காரை உருவாக்கி வருவதாக அரசல்புரசலாக இதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கம்

புதிய மிட்சைஸ் எஸ்யூவி உருவாக்கம்

தற்போது அதை உறுதி செய்யும் விதமாக புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலை இணைந்து உருவாக்க இருப்பதாக மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. இது மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மஹிந்திராவுக்கு லக்கு தான்

மஹிந்திராவுக்கு லக்கு தான்

அதாவது, இந்த புதிய எஸ்யூவி மாடலானது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலாக கருதப்படுகிறது. மேலும், இதே எஸ்யூவி ஃபோர்டு பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறதாம். இதோடு மின்சார கார் உருவாக்கப் பணிகள், கார் விற்பனை மற்றும் கார் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கான விரிவானத் திட்டமும் உள்ளது என்றும் அறிவித்துள்ளன.

ஃபோர்டு  எஞ்சின் சப்ளை செய்யும்

ஃபோர்டு எஞ்சின் சப்ளை செய்யும்

புதிய மஹிந்திரா கார்களுக்கான குறைவான சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சினை ஃபோர்டு நிறுவனம் சப்ளை செய்ய இருப்பதாகவும், மொத்தத்தில் இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் தனது காலடியை மிக அழுத்தமாக பதித்து இருக்கின்றன. மேலும் வரும் காலத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகம் முழுவதையும் மஹிந்திரா ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் அரசல் புரசலாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

இரு நிறுவனங்களும் அழுத்தமான பதிப்பு தான்

இரு நிறுவனங்களும் அழுத்தமான பதிப்பு தான்

இந்த இரு நிறுவனங்களின் இணைப்பும் இந்த துறையில் மிக அழுத்தமாக கால் பதித்து இருப்பதாகவும், இதன் மூலம் இந்த நிறுவனங்களின் பொருளாதாரமும் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது உருவாக்கப்படும் இந்த கார் நடுத்தர மக்களின் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2021 விற்பனைக்கு வரலாம்

2021 விற்பனைக்கு வரலாம்

இந்த இணைப்பால் அமெரிக்க நிறுவனமான ஃபோர்டும், இந்திய நிறுவனமான மஹிந்திராவும் கைகோர்ப்பது இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் சிறிது பங்கெடுக்கும் என்றும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் இந்த கார் 2020 ஆண்டின் இறுதியில் அறிமுகப் செய்யப்படும் என்றும், 2021 முதல் விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mahindra and ford sign an agreement to co develop such products

The new mid-size sports utility vehicle (C-SUV) will have a common Mahindra product platform and powertrain, also Mahindra Group and Ford Motor Company on yesterday announced that the companies are signing an agreement to co-develop a mid-size sports utility vehicle (SUV).
Story first published: Friday, April 19, 2019, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X