நிறைய பேசுவீங்களா அப்படின்ன நீங்க தான் வேணும்..ரூ.999 போடுங்க.. கஸ்டமரை அதிகரிக்க வோடபோன் திட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொலைத் தொடர்புத் துறையில் நிகழந்து வரும் போட்டியின் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்து வருவது கண் கூடாக காணக்கூடிய ஒருவிஷயமே. அதிலும் ஜியோவின் 4ஜி ஆஃபர்கள் வந்ததிலிருந்து வோடாபோன், ஐடியா, டாடா, பி.எஸ்.என்.எல் அனைத்து தொலைத்தொடர் நிறுவனங்களும் அதிகளவில் பாதித்துள்ளன. இதைப் போன்றதொரு இக்கட்டான நிலையை சமாளிக்க பல நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் வோடபோன் நிறுவனம் 999 ரூபாய் 365 நாட்களுக்கு வருடம் முழுவதும் பேசிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

 

வோடபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் இணைந்து இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முக்கிய இடத்தில் இருந்து வருகின்றன. இருப்பினும் சமீப காலமாக பல்வேறு வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனங்களை விட்டு வெளியேறி வந்தனர். ஆனால் இதைக் தடுக்கும் விதமாக இந்த நிறுவனம் இப்படியொரு அறிவிப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு போக மாட்டார்கள் என நம்புகிறது போளும்.

குறிப்பாக இந்த நிறுவனத்தில் தற்போதைக்கு சுமார் 40.93 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். புதிய வாடிக்கையாளர்களை கவர ஒரு புறம் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், பழைய வாடிக்கையாளர்களை கவரவே இந்த பிளானை அறிமுகம் செய்துள்ளதாம் வோடபோன்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள்..ஒரே அவசர உதவி எண் 112.. ஒருங்கிணைக்கப்பட்ட சேவை

அது என்ன பிளான் ரூ.999?

அது என்ன பிளான் ரூ.999?

பொதுவா இப்ப எல்லா தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே, எடுத்துக்காட்டாக 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் கால, தினசரி 1 ஜிபி டேட்டா, இதுவே 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 4 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு அன்லிடெட் கால்கள் இப்படிதாங்க அறிமுகம் செய்றாங்க. ஆனா கிராமப்புறங்களில் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்தாதவர்களும் இருக்காங்க. அட ஏங்க இப்பயெல்லாம் டேட்டா யூஸ் பன்ன ஒரு போன்னா பேச ஒரு போன் வச்சிருக்காங்க. ஆனா இந்த 999 பேச மட்டுதான் முடியும். டேட்டா குறைவுதான்

பயனுள்ள திட்டம் தான்

பயனுள்ள திட்டம் தான்

இந்த 999 பிளானில் வருடம் முழுவதும் பேசிக் கொள்ளலாம்.அதுவும் வரம்பற்ற முறையில் அன்லிமிடெட் கால்கள். உள்ளூர் வெளியூர் இலவச ரோமிங்க் கால்கள் எதுவேணாலும் பேசிக்கலாம், மொத்த ஜிபி 12 தான். அப்புறம் தினசரி 100 மெசேஜ் இருக்காம். ஆக இது போன் மட்டும் பேசக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆஃபர் ரெம்ப பயனுள்ளதா இருக்கும்னு இந்த நிறுவனம் கூறியிருக்குங்க.

யாருக்கு பொருந்தும் இந்த 999
 

யாருக்கு பொருந்தும் இந்த 999

பொதுவாக அழைப்பை மட்டும் விரும்புவர்கள் இந்த பிளானை உபயோகித்து கொள்ளலாம். டேட்டா சார்ந்த மெயில், யூடியூப்,சமூக வலைதளங்கள் பார்ப்பவர்களுக்கு இது உபயோகம் இருக்காது என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமால 12 ஜிபி டேட்டா மட்டும்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வேறு பிளான் ஏதும் இருக்கா?

வேறு பிளான் ஏதும் இருக்கா?

அட ஆமாங்க தினமும் 1 ஜிபி டேட்ட மட்டும் போதுமா? அதுவும் எப்பாவது இருந்தால் போதுமா? அப்படின்னா 16 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுங்க ஒரு நாள்க்கு மட்டும் 1 ஜிபி டேட்டாவாம். எப்படி சூப்பர்லா. இது போன்ற பல கலக்கலான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது வோட போன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: vodafone வோடபோன்
English summary

Vodafone introduces one year prepaid plan with Rs.999

Vodafone has launched a long-term prepaid plan of Rs 999 for its subscribers in India. The plan will offers unlimited voice calling and 100 SMS per day along with 12GB of high-speed data for a validity period of 12 months, i.e. 365 days in total.
Story first published: Saturday, April 20, 2019, 14:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X