மனிதாபிமானம் இன்னும் இருக்கு.. தவிக்கும் ஜெட் ஊழியர்களுக்கு உதவி..ட்விட்டரில் அதிகரிக்கும் பதிவுகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : கடும் நிதிப்பிரச்சனையால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை முழுமையாக ஒரு புறம் நிறுத்தியது. இதனால் பல்லாயிரக்கனக்கான ஊழியர்கள் வேலையிழந்து தவிக்கும் நிலை அனைவரும் அறிந்த ஒன்றே. ஏற்கனவே ஒரு புறம் சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும் தங்களின் வேலையிழப்பை கொட்டித் தீர்த்தும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கூட பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு நிலையில் உள்ளனர்.

 

இந்த நிலையில் சிறிய மற்றும் பெரிய தொழிலதிபர்கள் சிலர் நல்லெண்ணத்தோடு சமூக வலைத்தளங்களில் வேலை வாய்ப்பு குறித்தும், ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களுக்கு வேலை குறித்த விஷயங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பலவிதமான கமாண்டுகள் வந்த வண்ணமே உள்ளன.

கடும் நிதி நெருக்கடியின் காரணமாக, ஜெட் ஏர்வேஸின் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதை அடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 22,000 ஊழியர்கள் வேலையிழந்து, அவர்களிம் அடிப்படை வாழ்வாதாரம் கூட பாதிக்கப்பட்டு நிற்கின்றனர்.

நிஜமாவாங்க நம்பவே முடியல.. இந்தியால தங்கம் இறக்குமதி 3% குறைஞ்சிடுச்சா..வர்த்தக அமைச்சகம் அறிக்கை

உதவிய ஸ்பைஸ்ஜெட்

உதவிய ஸ்பைஸ்ஜெட்

இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. அதில் 100 பைலட்களுக்கும், 200க்கும் மேற்பட்ட டெக்னீசியன்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு வேலை வழங்க உள்ளது.

சென்னை பதிப்பகத்தில் வேலை

சென்னை பதிப்பகத்தில் வேலை

அதேபோல் சென்னையைச் சேர்ந்த பதிப்பக நிறுவன உரிமையாளர் ஒருவர், வாடிக்கையாளர் சேவை மையத்திற்காக 2 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு பணி வழங்க முடிவு செய்துள்ளார். இது போல் பல ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும்,சென்னை மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளிலும், ஊர்களிலும் அந்தந்த ஊர்களில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும் ஆங்காங்கே இருந்து பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன.

ஸ்பைஸ்ஜெட் விரிவாக்கத்தில் வேலை
 

ஸ்பைஸ்ஜெட் விரிவாக்கத்தில் வேலை

மற்றவர்கள் பி.ஆர் நிறுவனம் மற்றும் மாடலிங் ஏஜென்சி உள்ளிட்டவற்றில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்பைஸ்ஜெட் நிறுவன சி.எம்.டி அஜய் சிங் கூறுகையில், எங்கள் நிறுவனச் செயல்பாட்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக பலரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளோம். அதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூலம் வேலையிழந்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

Letshelpjetstaff - ஹேஸ்டேக்

Letshelpjetstaff - ஹேஸ்டேக்

இந்நிலையில் டுவிட்டரில் #Letshelpjetstaff என்ற ஹேஸ்டேக் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதில் சிறிய, பெரிய தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும், தங்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்பு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது.

கவலைப் படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம்

கவலைப் படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம்

இதோடு மட்டும் அல்லாமல் பலர் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்காக அவரவர் நிறுவனங்களில் இருக்கும் வேலை வாய்ப்பினையும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு கவலை படாதீர்கள் தோழமைகளே நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறி வருவது மனிதாபிமானம் இன்னும் உலகில் இருப்பதை காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways employees get job offers from chennai via tweets

small and large businessman rose to the occassion and started to post job offers for employees of jet airways
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X