Jet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்..! Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Jet Airways நிறுவனம் இயங்காததால், பல்வேறு வழிதடங்களில் 27 புதிய விமானங்களை இறக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறது ஸ்பைஸ் ஜெட்.

 

அதற்கான வேலைகளில் ஒரு பகுதியாக Jet Airways-யிடம் இருந்து குத்தகை மாற்றம் மூலமாகவும், Jet Airways-ன் சொந்த விமானங்களையும் வலைத்திருக்கிறதது. Jet Airways விமானங்களை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குத்தகைக்கும், விலைக்கும் வாங்கி ஸ்பைஸ் ஜெட் வாங்கி இருக்கிறது.

அப்படி வாங்கிய Jet Airways விமானங்களில் தன் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டிருக்கிறது ஸ்பைஸ் ஜெட். இதை தன்னுடைய அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் அறிவித்திருக்கிறது ஸ்பைஸ் ஜெட்.

சென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள்! இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.! சென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள்! இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.!

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஸ்பைஸ் ஜெட்டைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனமும் Jet Airways நிறுவனத்தின் காலி விமானங்களில் சிலவற்றை தன் சர்வதேச வழித் தடங்களில் பயன்படுத்த அனுமதி கோரி இருக்கிறது. அதோடு ஜெட் ஏர்வேஸின் பல்வேறு லாபகரமான சர்வதேச விமானப் பயண வழித் தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்கவும் ஏர் இந்தியா ஆலோசித்து வருகிறதாம்.

500 பேருக்கு வேலை

500 பேருக்கு வேலை

இதுவரை Jet Airways நிறுவனத்தில் பணியாற்றிய 500 பேருக்கு மேல் ஸ்பைஸ் ஜெட்டில் வேலை கொடுத்திருக்கிறார்களாம். அதில் 100 விமானிகள், 200 விமான சேவைப் பாணியாளர்கள், 200 டெக்னிக்கல் பராமரிப்பு பணியாளர்கள் அடக்கம் என்கிறார் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் சிங். இன்னும் கூட நிறைய பேரை வேலைக்கு எடுக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

1400 விமானிகள் கதி
 

1400 விமானிகள் கதி

இதுவரை Jet Airways நிறுவனத்தில் இருந்து சுமார் 400 விமானிகள், 40 மூத்த விமான பராமரிப்புப் பொறியாளர்கள் வெவ்வேறு நிறுவனங்களில் வேலைக்குச் சென்றுவிட்டார்களாம். இப்போதும் Jet Airways நிறுவனத்தில் இன்னும் 1,300 விமானிகள், பயிற்சி விமானிகள் மற்றும் விமானி உயர் அதிகாரிகள் Jet Airways சரி ஆகும், மீண்டும் பறப்போம் எனக் காத்திருக்கிறார்களாம்.

எஸ்பிஐ

எஸ்பிஐ

இன்னமும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா "Jet Airways நிறுவனத்தை வாங்க ஒரு நல்ல முதலீட்டாளரோ அல்லது விமான சேவை நிறுவனமோ முன் வரும்" என வழக்கம் போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது வரை அனைத்து பயணிகளுக்கும் கொடுக்க வேண்டிய ரீ-ஃபண்ட் தொகை, விமான எரிபொருள் பாக்கி, வாங்கிய கடன் தொகை பாக்கி, ஊழியர்களின் சம்பள பாக்கி என எல்லாவற்றையும் சேர்த்து 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1300 jet airways pilots are having hope on their company revival but spice jet is pasting their livery

1300 jet airways pilots are having hope on their company revival but spice jet is pasting their livery
Story first published: Monday, April 22, 2019, 15:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X