ரூ25,000 மேல் வச்சிருக்கீங்களா.. எஸ்.பி.ஐ ஏடிஎம் அன்லிமிடெட்.. வாரி வழங்கும் சலுகைகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மாதத்தில் 8 முதல் 10 வரை இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த இலவச பரிவர்த்தனைக்கு பின்பு, பணம் எடுக்கும் போது இலவச சேவையை விட அதிக பணத்தை வாடிக்கையாளரிடமிருந்து எடுத்துக் கொள்கிறது.

ஆனால் தற்போது ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்த பட்ச தொகையாக வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

தற்போது ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, அதிகப்படியான கடனளிப்பவர்கள் தங்க்களது ஏடிஎம்களில் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும், அதுவும் முந்தைய மாதத்தில் 25,000 ரூபாய் சராசரியாக அக்கவுண்டில் வைத்திருந்தால், அந்த வாடிக்கையாளருக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற இலவச சேவைகளிய வழங்குகிறது.

மன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லிமன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி

இன்னும் பல சேவைகள் இருக்கு

இன்னும் பல சேவைகள் இருக்கு

இதுவே மாதத்திற்கு சராசரியாக 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக அக்கவுண்டில் சராசரியை வைத்திருப்பவர்களுக்கு மற்ற வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவை வழங்கப்படுகிறது. இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ இதோடு மட்டும் அல்லாமல் தன் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற பல சலுகைகளை அறிவித்துள்ளது.

ரூ.25,000க்கு கீழ் இருப்பு தொகை

ரூ.25,000க்கு கீழ் இருப்பு தொகை

இருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்களுக்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராதம் விதிக்கப்படும். இது நகரம் மா நகரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

மாநகரங்களில் பரிவர்த்தனை
 

மாநகரங்களில் பரிவர்த்தனை

இந்த பண பரிவர்த்தனை நிபந்தனைகள் மற்றும் அதற்கான அபராத கட்டணங்கள், மாநகரங்களில் எப்பொழுதும் ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் பெற்றுக்கொள்ளலாம். அதாவது எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற ஏடிஎம்-இல் 3 முறையும் எடுத்துக் கொள்ளலாம்.

நகரங்களில் பரிவர்த்தனை

நகரங்களில் பரிவர்த்தனை

மாநகரங்கள் அல்லாத நகரங்களில், எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறை, இதர ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம். இதை விட அதிகமுறை பணம் எடுப்பவருக்கு 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும், இதனுடன் ஜிஎஸ்டியும் அபராத கட்டணமாக பெறப்படுகிறது.

அன்லிமிடெட்  பரிவர்த்தனைகள் (SBI only)

அன்லிமிடெட் பரிவர்த்தனைகள் (SBI only)

இதுவே ரூ.25,000க்கும் மேல் அதிகமான இருப்புத்தொகையை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் வைத்திருந்தால் அவர்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது. முந்தைய மாதம் முழுவதும் ரூ.25,000க்கும் அதிகமாக இருப்புத்தொகையை வைத்திருந்தால், அவர்கள் நடப்பு மாதத்தில் எஸ்.பி.ஐ & எஸ்.பி.ஐ குரூப் ஏடிஎம்-இல் எவ்வளவுமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

அன்லிமிடெட் பரிவர்த்தனைகள் (SBI & Other banks)

அன்லிமிடெட் பரிவர்த்தனைகள் (SBI & Other banks)

இந்த வங்கியில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை. எஸ்.பி.ஐ வங்கியில் வேலை ஊதியம் வரும் வங்கிக் கணக்கிற்கும்(Salary Account) அனைத்து ஏடிஎம்-களிலும் வரையற்ற பணம் பெற்றுக்குக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi எஸ்பிஐ
English summary

SBI monthly balance of ₹ 1 lakh or more.. can also do unlimited transactions at all ATMs.

State Bank of India allows free transactions to its customers at ATMs for 8-10 times in a month. Over and above these mandated number of free transactions, the bank charges a certain amount from its customers. also top lenders in the country have to offer a certain number of free ATM transactions in a month.at that same time The bank currently allows unlimited free transactions at State Bank of India Group ATMs to its customers who have maintained a monthly average balance above ₹ 25,000 in their savings bank account in the previous month.
Story first published: Monday, April 22, 2019, 9:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X