1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்ததின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சம் அஞ்சலகங்கள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன என்று டி.சி. எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைந்த சேவையை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

இந்திய அஞ்சல் துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த டி.சி.எஸ் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை இந்திய அஞ்சல் துறையுடன் ஏற்படுத்திக் கொண்டது.

மேலும் இந்த ஒப்பந்த பணிக்காக டி.சி.எஸ் நிறுவனம் 1100 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கமே நாடு முழுவதிலும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில், இந்தியா போஸ்ட் நீறுவனத்திற்கு சொந்தமான அஞ்சல் அலுவலகங்களில் தேவையான நவீன தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தருவதேயாகும்.

ஜெட் ஏர்வேஸ்சின் பங்கு விலை 14% தொடர் வீழ்ச்சி ..குழப்பத்தில் பங்குகளை விற்கும் டிரேடர்கள் ஜெட் ஏர்வேஸ்சின் பங்கு விலை 14% தொடர் வீழ்ச்சி ..குழப்பத்தில் பங்குகளை விற்கும் டிரேடர்கள்

முக்கிய பணியே கோர் இண்டகிரேஷன் (CSI)

முக்கிய பணியே கோர் இண்டகிரேஷன் (CSI)

இந்த ஒப்பந்தம் குறித்து டி.சி.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணி கோர் இண்டகிரேஷன் (CSI) டி.சி.எஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தற்போது செயல்முறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய அஞ்சல் துறைக்கு மிக உதவியாக இருக்கும்.

இதன் மூலம் என்ன பயங்கள்

இதன் மூலம் என்ன பயங்கள்

இந்த நவீனமயமாக்கல் மூலமாக நிறுவன வள திட்டமிடல் தீர்வுகள் (ERP solution) மெயில் ஆப்ரேஷன்ஸ், நிதி மற்றும் கணக்கியல், மனித வள மேம்பாடுகள் இது போன்ற செயல்களில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். இந்த ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகளால் நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடியும் என்றும் கூறியுள்ளது.

யாருக்கெல்லாம் பயன்

யாருக்கெல்லாம் பயன்

இந்த ஒருகிணைக்கப்பட்ட திட்டத்தில் 5 லட்சம் பணியாளர்கள், அதே சமயத்தில் ஒரே நேரத்தில் 40,000 வாடிக்கையாளர்கள், மேலும் ஒரே சமயத்தில் 30 லட்சம் அஞ்சல் பரிவர்த்தனைகள் செய்ய முடியும். இதன் மூலம் பல லட்சம் வாடிக்கையாளர்களும் பயன் பெறுவர். அதே சமயம் ஊழியர்களும் நடைமுறைக்கு தேவையான ஆதரவினை இதன் மூலம் பெற முடியும் என்றும் டி.சி.எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர் பல மொழி மையம்

வாடிக்கையாளர் பல மொழி மையம்

டி.சி.எஸ் இதுவரை 24,000 தபால் அலுவலகங்களில், 80,000 டெர்மினல்களில் விற்பனை நிலையத்தின் (POS) தீர்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் ஆதரவுக்கான ஒரு பல மொழி அழைப்பு மையத்தை உருவாக்குவதோடு, சரக்கு போக்குவரத்து கண்காணிப்பு திறன்களைக் கொண்ட வலை போர்ட்டையும் உருவாக்குயுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tcs modernises 1.5 lakh post offices

India's largest IT services company Tata Consultancy Services has helped modernise a network of more than 1.5 lakh post offices in the country.
Story first published: Monday, April 22, 2019, 12:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X