சூப்பர்லா இந்தியா ட்விட்டரின் புதிய MDயாக மணிஷ் மகேஷ்வரி .. தவறான பரப்புரைகளை தடுக்கவே நியமனம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ட்விட்டர் நிறுவனம் தனது செயல்பாடுகளை இந்தியாவில் மேற்கொள்வதற்காக இந்திய இயக்குனராக மணீஷ் மகேஷ்வரி திங்கட்கிழையன்று (22 ஏப்ரல் 2019) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இருந்த இந்திய இயக்குனர் தரேன்ஜீத் சிங்க் கடந்த ஆண்டு பதவி விலகியதையடுத்து, இடைக்கால இயக்குனராக பாலாஜி கிரிஷ் இருந்தார்.

 

இதைத் தொடர்ந்து கிரிஷ், மீண்டும் தனது பணிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது சான்பிரான்ஸிஷ்கோவில் உள்ள ட்விட்டர் உலக தலைமையகத்திற்கு திரும்புவார் என்றும், மீண்டும் தனது முந்தைய பதவியான உலக அளவிலான தலைவராகவும், வருவாய் மற்றும் ட்விட்டர் செயல்பாடுகளை கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மகேஷ்வரி நெட்வொர்க்18 டிஜிட்டலில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய இவர், ஏப்ரல் 29 ட்விட்டரில் பதியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Vodafone-யிடம் தோற்ற JIO..! கடுப்பில் முகேஷ் அம்பானி..!

இந்தியாவில் அதிகரிக்கும் பயன்பாட்டளர்கள்

இந்தியாவில் அதிகரிக்கும் பயன்பாட்டளர்கள்

ட்விட்டரில் உலகளாவிய அளவில் இந்தியா முக்கிய இடம் வகித்து வருகிறது. அதுவும் தற்போது ட்விட்டருக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றனர் என்றும், இதனோடு தற்போது ட்விட்டர் நிறுவனமும் அதிக அளவு முதலீடுகளை இந்தியாவில் செய்து வருகிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை  & பெங்களூர் அணிகள்

இந்தியாவில் டெல்லி, மும்பை & பெங்களூர் அணிகள்

புதிதாக பதிவியேற்கும் மகேஷ்வரி, ட்விட்டரின் இந்திய வருவாயை அதிகரிக்கவும், விரைவுப் படுத்தவும், ஒருங்கிணைந்த வணிக மூலோபாயத்தை இயக்குவதிலும் மகேஷ்வரி பொறுப்பு வகிப்பார். மேலும் இந்தியாவின் இயக்குனரான டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரிலுள்ள ட்விட்டர் அணிகளை மேற்பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை தவிர்க்கவே இந்த பதவி
 

தவறான தகவல்களை தவிர்க்கவே இந்த பதவி

மேலும் இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச அளவில், இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் இந்த பதவி நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நிகழும் தவறான பரப்புகள் கண்டறியப்பட்டு அதற்கான விடைகாண முடியும் என் கிறது ட்விட்டர் நிறுவனம்.

இளைஞர்களை கவரும் ட்விட்டர்

இளைஞர்களை கவரும் ட்விட்டர்

இந்தியாவில் பேஸ்புக் கூகுள் மற்றும் ட்விட்டர் என்ற பல சமூக வலைதளங்கள் இருந்தாலும், இளைஞர்களை பெரும்பாலும் கவர்ந்துள்ளது ட்விட்டர் நிறுவனமே. இது இளைஞர்களுக்கு ஒரு பெரியதளமாக இருக்கும் என்றும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

மகேஷ்வரி- மாயா ஹரியிடம் அறிக்கை

மகேஷ்வரி- மாயா ஹரியிடம் அறிக்கை

ட்விட்டரின் ஆசிய பசிபிக்கின் துணைத் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான மாயா ஹரியிடம் தனது அறிக்கைகளை அளிப்பார் என்றும், அதுவும் டெல்லி அடிப்படையாக கொண்டு இருக்கும் என்றும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து நிர்வாக இயக்குனர் மாயா ஹரி கூறுகையில், இந்தியாவில் மகேஷ்வரி தலைமையில் அனைத்து விதமான சமூதாய கூறுகளையும் மேம்படுத்துவதற்கான முதலீடு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் மட்டும் இல்ல

ட்விட்டர் மட்டும் இல்ல

இதையடுத்து ட்விட்டர் இந்தியாவின் புதிய தலைவர் மகேஷ்வரி, ட்விட்டருக்கு முன்னாள் நெட்வொர்க் 18- லிம் இதற்கு முன்னாள் மலிஷாவாரி, ஃப்ளிக்ட் கார்ட், டெக்ஸ்ட்வெப், இன்டியூட், மெக்கின்ஸி மற்றும் பி & ஜி உள்ளிட்ட நிறுவனங்களிலும் பதவி வகித்துள்ளார் என்பது கவனிக்கதக்க விஷயமாகும்.

நான் 10 ஆண்டுகளாக ட்விட்டர் வாடிக்கையாளர்

நான் 10 ஆண்டுகளாக ட்விட்டர் வாடிக்கையாளர்

மேலும் இது குறித்து மகேஷ்வரி கூறுகையில் நான் கடந்த 10 ஆண்டுகளாக ட்விட்டரின் வாடிக்கையாளராக இருந்து வருகிறேன். ஆனால் தற்போது ட்விட்டரை நாடு முழுவதும் வழி நடத்துவதில் வழி நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்தியாவில் அதிகப்படியான பிராந்தியம் மூலம் சமுதாயத்திலும் என்ன சாத்தியம் என்பதை பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். ட்விட்டர் உலக அளவிலான பிளாட்பாமில், இனி இந்தியாவும் தனக்கென தனி இடத்தையும் வகிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter appoint Manish Maheshwari as India MD

Twitter on Monday said it has appointed Manish Maheshwari as the Managing Director of its India operations. Last year, Taranjeet Singh had stepped down as the India Country Director and Balaji Krish was given charge of leading the country's operations in the interim period.
Story first published: Monday, April 22, 2019, 21:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X